வீட்டு வாடகை படிக்கு உரிமையாளரின் பான் எண் இல்லாமல் வரி விலக்கு கோர முடியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் வருமானவரி தாக்கல் செய்யும் போது, நம் முதலீடு சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். அதில் முக்கியமானது, நம் வீட்டுவாடகை படிக்காக (HRA) வீட்டு உரிமையாளரின் PAN எண். ஆனால் சிலர் வருமானவரி செலுத்தாமல் தவிர்க்க ஃபான் எண்ணைத் தர மறுத்துவிடுவர்.

ஆண்டுக்கு 1 லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்துபவர்கள் , வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை வாடகை இரசீதில் கண்டிப்பாகக் குறிப்பிட்டால் மட்டுமே தங்களுடைய நிறுவனத்தில் சமர்ப்பிக்க இயலும். இல்லையெனில் உங்கள் வீட்டுவாடகைப் படி விவரங்கள் வருமானவரி தாக்கலின் போது உங்கள் நிறுவனத்தால் கணக்கில் எடுக்கப்படமாட்டாது.

 வீட்டு உரிமையாளர் ஃபான் எண் இல்லையென்றால் என்ன செய்யலாம்?
 

வீட்டு உரிமையாளர் ஃபான் எண் இல்லையென்றால் என்ன செய்யலாம்?

நீங்கள் வருமானவரி தாக்கல் செய்யும் போது வீட்டுவாடகை படியை (HRA) சேர்த்து வருமானவரி விலக்குப் பெறலாம். ஏனெனில் அதற்கு ஃபான் எண் கட்டாயம் இல்லை. ஆனாலும், வருமானவரி தாக்கல் மற்றும் பார்ம் 26A இடையை உள்ள வருமான வித்தியாசம் காரணமாக வருமானவரி துறை நோட்டீஸ் அனுப்பும்.

 என்ன செய்வது?

என்ன செய்வது?

அந்தச் சமயத்தில் கீழ்க்கண்ட ஆவணங்களை நீங்கள் ஆதாரமாகத் தாக்கல் செய்யலாம்.

1) வாடகை ஒப்பந்தம்

2) வீட்டுவாடகை ரசீது

3) வாடகை கொடுத்ததற்கான அத்தாட்சியாக வங்கி அறிக்கை

பெற்றோர் அல்லது மனைவி/கணவர் வீட்டில் வசிக்கும் போது வரிவிலக்கை எதிர்பார்க்கலாமா?

பெற்றோர் அல்லது மனைவி/கணவர் வீட்டில் வசிக்கும் போது வரிவிலக்கை எதிர்பார்க்கலாமா?

மனைவியின் பெயரில் உள்ள வீட்டில் வசித்தால் வாடகைக்கு வரிவிலக்கு கோர முடியாது. பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் வீட்டில் வசித்தால் அவர்களிடம் வாடகை ரசீது அல்லது வாடகை செலுத்தியதற்கான வங்கி அறிக்கை மூலம் சட்டப்படி விலக்குப் பெறலாம்.

கணவன்- மனைவி செலுத்தும் வீட்டுக்கடன் தவணை மற்றும் வட்டிக்கு வரிவிலக்கு பெற முடியுமா?
 

கணவன்- மனைவி செலுத்தும் வீட்டுக்கடன் தவணை மற்றும் வட்டிக்கு வரிவிலக்கு பெற முடியுமா?

முடியும். ஆனால் வீடு இருவரின் பெயரிலும் இருக்க வேண்டும். சக உரிமையாளர்கள் என்ற முறையில், ஐடி சட்டம் பிரிவு 24b யின்படி வட்டிக்கு 2 லட்சமும், 80Cயின் படி முதலுக்கு 1.5 லட்சமும் வரிவிலக்குப் பெறலாம்.

வீடு யாரேனும் ஒருவர் பெயரில் மட்டும் இருந்தால் மற்றவர் வருமானவரி விலக்கு பெறமுடியாது.

போலியான வாடகை ரசீதை சமர்ப்பிக்கலாமா?

போலியான வாடகை ரசீதை சமர்ப்பிக்கலாமா?

பெரும்பாலும் இந்த ரசீதுகளை நிறுவனங்களே வைத்துக்கொள்வதால், போலி ரசீதுகளைச் சமர்ப்பிப்பது பொதுவாக நடக்கிறது. ஆனாலும் சில சமயங்களில் வருமான வரித்துறை விசாரணைக்காக இவற்றைக் கேட்கலாம்.

வீட்டின் உரிமையாளர் வாடகையைப் பணமாகப் பெற்றுக்கொண்டு பான் எண் தரமறுத்தால் நாம் போலியான ரசீதை சமர்ப்பிக்காமல் என்ன செய்வது. ஆனால் , இது சட்டப்படி தவறு என்பதால் அவர் மீது புகார் செய்யலாம் அல்லது மேலே குறிப்பிட்டபடி வருமானவரி தாக்கலின் போது நேரிடையாகச் சமர்ப்பிக்கலாம். ஆகவே முன்கூடியே இதேப்பற்றி விசாரித்து வாடகை ஒப்பந்தம் செய்வது நல்லது.

வருமானவரித்துறை எதற்காக விசாரணைக்கு அழைக்கும்?

வருமானவரித்துறை எதற்காக விசாரணைக்கு அழைக்கும்?

ஒருவர் வீட்டுவாடகைப்படி மற்றும் வீட்டுக்கடன் என இரண்டிற்கும் வரிச்சலுகை கோரியிருக்கும் பட்சத்தில்... (குறிப்பு : வேலை நிமித்தம் வேறு நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து, சொந்த ஊரில் உள்ள வீட்டின் கடனுக்கு வரிவிலக்கு கேட்டால் இது பொருந்தாது)

ரசீதில் குறிப்பிட்டுள்ள வாடகை, உண்மையாகச் செலுத்தியதை விட அதிகம் என்றால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். பிள்ளைகள்/ பெற்றோரின் வீட்டில் வாடகை செலுத்தாமல் வசித்துவிட்டு, வரிவிலக்கு கேட்டால் வருமான வரித்துறை விசாரணைக்கு அழைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can You Claim Tax Exemption On HRA Without Landlord's PAN?

Can You Claim Tax Exemption On HRA Without Landlord's PAN?
Story first published: Wednesday, February 14, 2018, 12:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X