தனிநபர் ஒவ்வொருவருக்கும் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி கீழ் ஆண்டுக்கு 1.50 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 2017-2018 நிதி ஆண்டில் இதுவரை நீங்கள் எந்த முதலீடும் செய்யவில்லையா, மார்ச் 31-ம் தேதிக்குள் இங்குத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் அளிக்கும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் 45,000 ரூபாய் வரையில் வருமான வரியை சேமிக்கலாம்.
ஒரு வேலை நீங்கள் வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில்1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து இருந்தாலும் கூடுதலாக எப்படி 50,000 ரூபாய் வரை வரியினைச் சேமிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பிபிஎப்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் எனப்படும் பிபிஎப்-ல் ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை மொத்த தொகையாக அல்லது தவனை முறையில் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்து வருமான வரிச் சட்டம் 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும். அதுமட்டும் இல்லாமல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் லாபமும் கிடைக்கும். ஆனால் 15 வருடம் வரை தொடர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
தேசிய சேமிப்புப் பத்திரம்
பொது வருங்கால வைப்பு நிதி போன்றே தேசிய சேமிப்புப் பத்திரம் திட்டத்தில் 5 வருடங்களுக்கு 1.50 லட்சம் ரூபாயினை மொத்த தொகையாக மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்யும் போதும் வருமான வரிச் சட்டம் 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும்.
லைப் இன்சூரன்ஸ்
லைப் இன்சூரன்ஸ் பாலிசிகள் எதுவும் உங்கள் பெயரில் இல்லை என்றால் அதனை மார்ச் 31-ம் தேதிக்கும் முன்பு வாங்குவதன் மூலம் அதற்கும் வருமான வரிச் சட்டம் 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும்.
5 வருட டெபாசிட் திட்டங்கள்
தபால் அலுவலகத்தில் உள்ள 5 வருட டெபாசிட் திட்டத்தில் மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்யும்போதும் வரிச் சட்டம் 80சி கீழ் வரி விலக்கு பெற முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
தபால் அலுவலகத்தில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 15 லட்சம் ரூபாய் வரை மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு முதலீடு செய்து வரி விலக்கினை பெறலாம்.
என்பிஎஸ்
தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 1.50 லட்சம் 80சி கீழ் அளிக்கப்படும் வரி விலக்கானது 2 லட்சமாக அதிகரிக்கப்படும். எனவே 1.50 லட்சம் வரை 80சி கீழ் வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்தால் இது கூடுதலாக 50,000 ரூபாய் முதலீடு செய்து வரி விலக்கினை பெற அனுமதி அளிக்கிறது.
பங்கு சந்தை சார்ந்த திட்டங்கள்
யூலிப்ஸ், பங்கு சந்தை சார்ந்த முதலீடு திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்டில் அல்லது யூடிஐ-ல் உள்ள பென்ஷன் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாகப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மருத்துவக் காப்பீடு
மோடி மாஸ்..!
பை பை..!
அமர்க்களம்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications