வேலையில் இருந்து நின்றவுடன் பிஎப் பணத்தினை ஏன் உடனே திரும்பப் பெற வேண்டும்? எப்படிப் பெற வேண்டும்?

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய அரசு, ஊழியர்களின் நலனுக்காகச் சில பல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றுள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ள போதிலும், அதைப் பற்றி அறியாமல், நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விடுகின்றோம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியும் அந்த வகையில் வருவது தான் ஒரு மிகப் பெரிய சோகம். பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்த ஊழியர்கள், தனக்கு நியாயப்படி சேரவேண்டிய நிதியைப் பெறாமல் இருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம். இதற்குக் காரணம் வருங்கால வைப்பு நிதியைப் பற்றிய அறியாமையே.

ஒரு சிலருக்கு வருங்கால வைப்பு நிதி என்று ஒன்று இருப்பதே தெரியாமல் இருக்கின்றது. பலருக்கு வருங்கால வைப்பு நிதி செயல்படும் விதித்ததைப் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. இதில் குறிப்பிடப்படும் மிக முக்கிய அம்சம் என்னவெனில், நாம் வேலையில் இருந்து நின்றவுடன் வருங்கால வைப்பு நிதியை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரியாமலே போய்விட்டது.

எனவே நாம் எதற்காக வருங்கால வைப்பு நிதியை ஏன் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்? எவ்வாறு விலக்கிக் கொள்ள வேண்டும்? இதைப் பற்றிய அனைத்து விபரங்களையும் நாங்கள் உங்களுக்காக இங்கே தெரிவித்துள்ளோம். இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படித்து வருங்கால வைப்பு நிதியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலையில் இருந்து நின்றவுடன் வருங்கால வைப்பு நிதியை ஏன் விலக்கிக் கொள்ள வேண்டும்?

நீங்கள் உங்கள் வேலையை விட்டு நின்று விட்டால், அதன்பின்னர் உங்களுடைய பழைய முதலாளி உங்களுடைய வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் உங்களுக்கான தொகையைச் செலுத்த மாட்டார். எனினும் உங்களுடைய வருங்கால வைப்பு நிதிக் கணக்கு தொடர்ந்து செயல்படும். நீங்கள் வேலையில் இருக்கும் வரை உங்களுடைய வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் பணத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். வேலையில் இருந்து நின்றவுடன், உங்களுடைய வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்துள்ள பணத்திற்கு வட்டி கிடைக்கும். இதற்கு வரிவிலக்குக் கிடையாது. நீங்கள் கட்டாயமாக வரி செலுத்த வேண்டும். இதிலிருந்து தப்பிப்பதற்கு உங்களுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. வேலையில் இருந்து விலகியவுடன் புதிய வேலையில் சேர்ந்து உங்களுடைய வருங்கால வைப்பு நிதிக் கணக்கை அந்தப் புதிய வேலையுடன் இணைக்க வேண்டும். அல்லது உங்களுடைய வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் நீங்கள் வேலையில் இருந்து நின்ற இரண்டு மாதத்திற்குள் அதாவது 60 நாட்களுக்குள் செய்ய வேண்டும்.

ஓய்வூதிய நிதியை விலக்கிக் கொள்ளும் முறை

உங்களுடைய வருங்கால வைப்பு நிதியின் ஒரு பகுதி பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்கிறது. உங்களுடைய மொத்த பணிக்காலம் 6 மாதங்களுக்கு அதிகமாகவும் 9.5 ஆண்டுகளுக்குக் குறைவாகவும் இருந்தால், நீங்கள் சேமித்த ஓய்வூதிய நிதியை திரும்பப் பெற இயலும். உங்களுடைய பணிக்காலம் 9.5 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் ஓய்வூதியத் திட்டத்திற்குத் தகுதி உடையவர் ஆகின்றீர்கள். எனவே 9.5 ஆண்டிற்கு மேல் உங்களுடைய பணிக் காலம் இருந்தால், இந்த நிதியை விலக்கிக் கொள்ள இயலாது.

ஓய்வூதிய திட்டத்திற்கு எவ்வளவு பணம் செல்கிறது?

வருங்கால வைப்பு நிதியின் 8.3 சதவீதம் ஓய்வூதியத் திட்டத்திற்குச் செல்கிறது. உங்களுடைய மொத்த பணிக்காலம் 9.5 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால், உங்களுடைய ஓய்வூதிய நிதியை விலக்கிக் கொள்ள இயலும். இதற்கு நீங்கள் பூர்த்திச் செய்யப்பட்ட 19 மற்றும் 10-சி படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஓய்வு நிதியை திரும்பப் பெறும் வகைகள் மற்றும் முறைகள்

வருங்கால வைப்பு நிதியை மொத்தமாக விலக்கிக் கொள்வது - இதற்கு நீங்கள் படிவம் 19 ஐ பயன்படுத்த வேண்டும். ஓய்வூதிய நிதியை விலக்கிக் கொள்வது - இதற்குப் படிவம் 10-C ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதியில் ஒரு பகுதியை விலக்கிக் கொள்வது - வருங்கால வைப்பு நிதி ஆணையம், நீங்கள் வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைத்துள்ள மொத்த நிதியில் ஒரு பகுதியை மிகவும் சிறப்பான தருணங்களில் அதாவது திருமணம், அல்லது வீடு கட்டுவது போன்ற தருணங்களில் விலக்கிக் கொள்ள உங்களுக்கு அனுமதி அளிக்கின்றது. இதற்கு நீங்கள் படிவம் 31 ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

வருங்கால வைப்பு நிதியை விலக்கிக் கொள்ளும் முறைகள்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், தன்னுடைய வலைத்தளத்தின் மூலம் உங்களுடைய வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் திரும்பப் பெற அனுமதிக்கிறது. ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்த உங்களிடம் கணினி வசதி இல்லையெனில் நீங்கள் இந்திய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த UMANG மொபைல் ஆப்பை பயன்படுத்தலாம்.

முக்கியக் குறிப்புகள்

உங்களுடைய வருங்கால வைப்பு நிதியின் யு.என்.என்.என் எண் ஆதார் உடன் இணைக்கப்படாவிட்டாலும் கூட உங்களுடைய வருங்கால வைப்பு நிதியை ஆன்லைம் மூலம் திரும்பப் பெறலாம். எனினும் உங்கள் ஆதார் எண்ணை வருங்கால வைப்பு நிதியின் யு.என்.என்.என் எண்ணுடன் இணைப்பது உங்களுடைய முயற்சிகளை மிகவும் எளிமையாக மாற்றும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஒரு முறை கடவுச்சொல்லை பெற செயலாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஆதார் எண்

உங்களிடம் ஆதார் எண் இல்லை என்றால், நீங்கள் வருங்கால வைப்பு நிதி ஆணைய இணையத்தளம் மூலம் கலப்புப் படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். வருங்கால வைப்பு நிதி ஆணைய அலுவலகத்திற்குச் சென்று படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது உங்களுடைய PF எண் மற்றும் PAN எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்களிடம் ஆதார் எண் இருந்து நீங்கள் உங்களுடைய வருங்கால வைப்பு நிதியை ஆஃப்லைனில் திரும்பப் பெற விண்ணப்பிக்க விரும்பினால், நீங்கள் உங்களுடைய முதலாளியின் சான்றிதழின்றி அதே கூட்டுப் படிவத்துடன் விண்ணப்பிக்கலாம். உங்களுடைய வருங்கால வைப்பு நிதி விலக்கல் விண்ணப்பத்துடன் உங்களுடைய வங்கிக் கணக்கின் ரத்துச் செய்யப்பட்ட காசோலையை இணைக்கவும்.

 

ஓய்வூதிய நிதியை விலக்குதல்

9.5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வூதிய நிதியை திரும்பப் பெறுதல்

இதற்கு நீங்கள் மேலே குறிப்பிட்ட கலப்புப் படிவத்தைப் பயன்படுத்தலாம். மேலும் அந்தப் படிவத்தில் வருங்கால வைப்பு நிதியை மொத்தமாக விலக்கிக் கொள்ளுதல் என்கிற கட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு வேளை நீங்கள் வேறு பணிகளில் சிறிது காலத்திற்குப் பிறகு சேர உத்தேசித்திருந்தால், படிவம் 10C ஐ அளிப்பதன் மூலம் 'திட்ட சான்றிதழைப் பெற முடியும்.

 

9.5 வருட சேவையின் பின்னர் ஓய்வூதிய நிதியை திரும்பப் பெறுதல்:

உங்களுடைய மொத்த பணிக் காலம். 6 மாதங்களுக்கும் குறைவாகவோ அல்லது 9.5 வருடங்களுக்கும் அதிகமாகவோ இருந்தால் உங்களால் உங்களுடைய ஓய்வூதிய நிதியை திரும்பப் பெற முடியாது. உங்களுக்கு 58 வயதாக இருக்கும்போது மட்டுமே உங்களுடைய ஓய்வூதியத்தைப் பெறு இயலும். அல்லது 50 வயதின் ஆரம்பத்தில் நீங்கள் குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்யலாம்.

நீங்கள் 50 வயதுக்குட்பட்டவராக இருந்து, குறைக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், படிவம் 10 டி நிரப்பிச் சமர்ப்பிக்கவும். நீங்கள் 58 வயதிற்கு மேல் இருந்து, நீங்கள் முழு ஓய்வூதிய நிதியைத் தேர்வு செய்தால், படிவம் 10D ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 

பணியை விட்டு விட்டு வியாபாரத்தை ஆரம்பிக்கப் போகின்றீர்களா?

வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு வகையான கட்டாயச் சேமிப்பு ஆகும். எனினும் இந்தச் சேமிப்பை உங்களால் அணுக இயலாது. ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் பொழுது புதிய அலுவலகத்திற்கு உங்களுடைய வருங்கால வைப்பு நிதிக் கணக்கை மாற்றுவது மிகவும் சிறந்தது. ஒருவேளை உங்களுடைய வேலையை நீங்கள் துறந்து விட்டு சொந்த தொழில் தொடங்க நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய வருங்கால வைப்பு நிதியில் உள்ள மொத்த தொகையும் ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்பட்டு விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How and Why You Should Withdraw Your PF After Quitting Job?

How and Why You Should Withdraw Your PF After Quitting Job?
Story first published: Thursday, March 29, 2018, 14:15 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns