இன்சூரன்ஸில் முதலீடு செய்தால் வரி சேமிப்புடன் அதிக வருமானமும் பெறலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018 -19 நிதியாண்டு தொடங்க உள்ளது, வழக்கமாக நிதியாண்டு முடிவதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருக்கும்போதே, தாங்கள் செலுத்த வேண்டிய வரியின் அளவைக் குறைப்பதற்கான முதலீடுகளை அனைவரும் பார்த்து பார்த்துச் செய்வர்.

தேவையான முதலீடுகளைச் செய்வதற்கு நடப்பு நிதியாண்டின் மார்ச் 31-ம் தேதியே இறுதி நாளாகும். இதுவரை, பெரும்பாலோனார், வரிச்சுமையைக் குறைப்பதற்குப் பி.பி.எஃப் என்னும் பொதுச் சேம நிதி, ஈஎல்எஸ்எஸ் என்னும் ஈக்விட்டி சேமிப்புத் திட்டம், எஃப்.டி என்னும் வைப்பு நிதி ஆகிய முதலீட்டுத் திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தி வந்தனர்.

புதிய வரி
 

புதிய வரி

2018-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில், நீண்ட கால முதலீடுகள் மேலான வரி (எல்டிசிஜி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலிருந்து வரும் ரிட்டர்ன் என்னும் ஈட்டு பலனுக்கு இந்த வரி பொருந்தும்.

ஆகவே, ஈஎல்எஸ்எஸ் என்னும் ஈக்விட்டி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பிபிஎப் திட்டம்

பிபிஎப் திட்டம்

பி.பி.எஃப் என்னும் பொதுச் சேம நிதியில் செலுத்தப்படும் வைப்புத் தொகை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் ஈட்டு பலன் அனைத்தும் வரி விலக்குக்கு ஏற்புடையவை என்றாலும் அவற்றுக்கான அரசின் காப்பு வீதங்கள் போதுமானவையாக இல்லை.

 வைப்பு நிதி

வைப்பு நிதி

வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீடுகள் வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின்படி வரி விலக்கு பெறத்தக்கவை என்றாலும், அவற்றின் மூலமாகப் பெறப்படும் வருமானத்திற்குக் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே விலக்கு உண்டு.

உங்கள் பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கும், கூடிய மட்டும் அதிக வரி விலக்கு பெற்றிடவும் தேவைக்கேற்றபடி கீழ்க்காணும் முதலீட்டு வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

 டேர்ம் இன்ஷூரன்ஸ்
 

டேர்ம் இன்ஷூரன்ஸ்

இது முதலீட்டுக்கு ஏற்றத் திட்டமாக வகைப்படுத்தப்படாவிட்டாலும், இதை எடுக்கும் நபர் இறக்க நேரிட்டால், காப்பீட்டு நிறுவனம், வாரிசுதாரருக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையை அளிக்கும். இது குறிப்பிட்ட அந்த நபரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்குப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும். இதற்குக் கட்டப்படும் பிரிமீயம் தொகை வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின்படி வரி விலக்கு பெறும். இந்தக் காப்பீட்டிலிருந்து ஈட்டுப் பலனும் வரி விலக்கு உரியது.

 யூலிப் பாலிசி

யூலிப் பாலிசி

முதலீடு செய்யும் சமயம், அதன் மூலம் பெறும் ஈட்டு பலன், திரும்பப் பெறும் சமயம் என மூன்று வேளைகளிலும், அதாவது மும்மடங்கு வரி விலக்கு தருவது யூலிப் பாலிசி ஆகும். இதன் முதலீடு 80C பிரிவின் படியும், திரும்பப் பெறும் தொகை 10(10D) பிரிவின் படியும் விலக்கு பெற ஏற்றது. நீண்ட கால முதலீடுகள் மேலான வரி (எல்டிசிஜி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மியூச்சுவல் ஃபண்டுக்கு மாற்றாக யூலிப் பாலிசிகள் அமையும். நிரந்தர வைப்பு நிதியில் பெறக்கூடிய ஈட்டுப் பலன் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதிகமாகும்போது டி.டி.எஸ் பிடிக்கப்பட நேரிடுவதால், யூலிப் பாலிசி மக்களைக் கவரக்கூடியதாக உள்ளது.

மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

சிலர், தாங்கள் பணியாற்றும் நிறுவனம் தரும் மருத்துவக் காப்பீட்டை மட்டுமே நம்பியிருப்பர். மருத்துவக் காப்பீட்டிற்கான பிரிமீய தொகையில் ரூ.25,000 வரை வருமான வரிப் பிரிவு 80Dயின்படி விலக்கு பெற முடியும்.2018 மத்திய பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு வரி விலக்கு விகிதம் வருமான வரிப் பிரிவு 80Dயின்படி, முப்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் உங்கள் பெற்றோர் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், மருத்துவக் காப்பீடு அதிக வரிச் சேமிப்பை தரும்.

வருமானம் ஈட்டும்போது, வரி செலுத்த வேண்டிய பொறுப்பும் வருவதால், சட்டத்திற்கு உட்பட்டு, அதிக ஈட்டுப் பலனை தரக்கூடிய முதலீட்டை செய்ய வேண்டியது அவசியம். அதற்கு யூலிப் பாலிசி ஏற்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investing in Insurance: can save more tax and get goodreturns

Investing in Insurance: can save more tax and get goodreturns
Story first published: Wednesday, March 7, 2018, 20:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X