வரியும் சேமிக்கலாம்.. பணத்தையும் பெருக்கலாம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..!

Written By: Staff
Subscribe to GoodReturns Tamil

ஒரே சமயத்தில் வரிகளையும் சேமித்து உங்கள் பணத்தையும் பெருக்க விரும்புகிறீர்களா? ஈஎல்எஸ்எஸ் மியூட்டுவல் ஃபண்ட்ஸ் உங்களுக்கு உதவும்.

மார்ச் மாதம் துவங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் வரவிருக்கும் நிதியாண்டில், ஒரே சமயத்தில் பணத்தைச் சேமிக்கவும் வரிகளை மிச்சப்படுத்தும் வகையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுடைய இலக்கை அடைய ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் உதவும்

ஈஎல்எஸ்எஸ் திட்டம்

ஈஎல்எஸ்எஸ் திட்டம் என்பது பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தின் சுருக்கப் பெயராகும். குறிப்பாக, இந்தத் திட்டம் பன்முகப்படுத்தப்பட்ட பங்குச் சந்தைத் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்.

வரி விலக்குத் திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ், வரிவிதிப்பு பெறும் இதர வழக்கமான பங்குச் சந்தைத் திட்டங்களைப் போல் அல்லாமல், ஈஎல்எஸ்எஸ் பங்குச் சந்தை வெளியீட்டை வழங்கும் அதே சமயத்தில் வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி இன் கீழ் வரி ஆதாய நற்பயன்களையும் வழங்குகிறது.

ஏனென்றால் இது வரி விலக்குக்காக வடிவமைக்கப்பட்ட முதலீடுகளில் ஒன்றாகத் தகுதி பெறுகிறது. ஈஎல்எஸ்எஸ் நிதிகளின் சிறப்பியல்புகளை நாம் கவனமாகப் பார்க்கலாம்.

 

வரிப் பயன்கள்

ஈஎல்எஸ்எஸ் நிதிகளில் முதலீடு செய்ய அதிகபட்ச வரைமுறை என்று எதுவுமில்லை என்கிற அதே சமயத்தில், ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரித்தடை தகுதி உடையது. இந்த வருமான வரி சட்டப் பிரிவின் கீழ் இதர முதலீடுகள் மற்றும் பொருந்தக்கூடிய வரித்தள்ளுபடிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஎல்எஸ்எஸ் திட்டம் வரிச் சேமிப்பு மற்றும் நீண்ட கால வரையறையில் செல்வப் பெருக்கம் ஆகியவற்றின் சிறந்த கலவையாகும்.

 

பூட்டுக் காலம் (Lock-in period)

மற்ற வரிச் சேமிப்பு முதலீடுகளைப் போலவே ஈஎல்எஸ்எஸ் பூட்டுக் காலத்தைக் கொண்டிருக்கிறது. பொதுச் சேமிப்பு வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (என்எஸ்சி) போன்ற முதலீடுகளுக்கு முறையே 15 வருடங்கள் மற்றும் 5 வருடங்கள் பூட்டுக் காலம் இருக்கின்றது, ஈஎல்எஸ்எஸ் க்கு 3 வருடங்கள் பூட்டுக் காலத்தைக் கொண்டிருக்கிறது.

அதைப் பொறுத்து முதலீட்டாளர்கள் இந்தக் காலம் நிறைவடைவதற்கு முன்பாக யூனிட்டுகளை விற்க முடியாது.

 

SIP முதலீடு

சிப் முதலீட்டு வழக்கில், ஒவ்வொரு தொடர்ச்சியான முதலீடும் ஒரு புத்தம்புதிய முதலீடாகக் கருதப்படுகிறது மற்றும் அதைப் பொறுத்து பூட்டுக் காலம் முதலீடு செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது.

எனவே, முதலீடு செய்யப்பட்ட சிப், மார்ச் 1, 2018 என்று வைத்துக் கொண்டால், பூட்டுக் காலம் மார்ச் முதல் 3 வருடங்களுக்கு இருக்கும். டிசம்பர் 1, 2018 அன்று செய்யப்பட்ட முதலீட்டிற்கு அதன் பிறகு 3 வருடங்களுக்குப் பூட்டுக் காலம் தொடங்கும். ஒருமுறை அந்த 3 வருட காலக்கெடு தீர்ந்த பின் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அணுகலாம் மேலும் திறந்த முனைகளைக் கொண்ட இதர பங்குச் சந்தை பரஸ்பர நிதிகளைப் போலவே கையாளலாம்.

 

நீண்ட கால மூலதன ஆதாய வரிகள்

2018 ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட்டிற்குப் பிறகு, ஒரு நிதியாண்டின் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 இலட்சத்திற்கு மேல் இருந்தால், பங்குச் சந்தை பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் நீண்ட கால மூலதன முதலீட்டு ஆதாய வரியை (எல்டிசிஜி) செலுத்த வேண்டும்.

வரி எச்சரிக்கை

எனவே, ஈஎல்எஸ்எஸ் நிதிகளில் கூட, நீண்ட கால மூலதன லாபங்கள் எந்த வருடத்திலாவது ரூ. 1 இலட்சத்தைத் தாண்டினால் முதலீட்டாளர்கள் எல்டிசிஜி வரிகளைச் செலுத்த வேண்டும். மூன்று வருடப் பூட்டுக் காலம் முடிவடைந்த பின்னர், ஈஎல்எஸ்எஸ் இதர திறந்த முனைகளைக் கொண்ட நிதிகளைப் போலச் செயல்படும் என்பதால் முதலீட்டாளர்கள் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்பினால் விலகலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

save tax and grow your money: ELSS mutual funds

save tax and grow your money: ELSS mutual funds
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns