இந்தியாவில் அரசு பத்திரங்களை வாங்குவது எப்படி?

Posted By: Vivek Sivanandam
Subscribe to GoodReturns Tamil

நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவரா? இல்லை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது நிரந்தர வைப்பு நிதியில் பாதுகாப்பாக முதலீடு செய்பவரா? முதலீடு செய்த பிறகு வருத்தப்படுவதைக் காட்டிலும் பாதுகாப்பாக முதலீடு செய்வது நல்லது என்றாலும், இந்தக் காலகட்டத்தில் அதிக லாபம் வேண்டும் என்றால் ரிஸ்க் எடுப்பது மிகவும் முக்கியம்.

இந்தக் கட்டுரையில் அரசு பத்திர முதலீடு பற்றி விரிவாகக் காணலாம்.

யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

அரசு பத்திரங்களைப் பற்றி நினைக்கும் போது உற்சாகம் மட்டுமல்ல குழப்பமும் சேர்ந்தே வரும். தொழிலதிபர்கள் மற்றும் வங்கிகள் மட்டுமே அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில்லை. சிறு முதலீட்டாளர்கள், தனிநபர்கள் கூட முதலீடு செய்ய முடியும். ஆச்சர்யமாக இருக்கிறதா! எப்படி என்று இங்கே காணலாம்.

டீமேட் கணக்கும் முதலீடு காலமும்

அதற்கு முன், நீங்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால முதலீடு செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால் டிமேட் வங்கி கணக்கு கண்டிப்பாக வேண்டும். அதன் மூலமே பங்குகள் மற்றும் மியூட்சுவல் பண்டில் வர்த்தகம் செய்ய முடியும்.

கவலை வேண்டாம்

பங்குச்சந்தை என்பது உங்களைப் பயமுறுத்தும் ஒன்றாக இருக்கலாம். கவலை வேண்டாம். அரசாங்க பங்குகளோ, பத்திரங்களோ பங்குச்சந்தைகளின் வாயிலாக வர்த்தகம் செய்யப்படுவதில்லை. அவை முற்றிலும் பிரபல வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டுமே கிடைப்பவை.

எங்கு முதலீடு செய்வது?

நீங்கள் முதலீடு செய்யவிரும்பினால்,எளிதாக அருகிலுள்ள வங்கி கிளைக்குச் சென்று தேவையான ஆவணங்களைப் பூர்த்திச் செய்தால் போதும். சிறிது கால இடைவெளியில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு உங்கள் பெயரில் பத்திரங்கள் வழங்கப்படும்.

மிகவும் எளிதாக இருக்கிறது அல்லவா? யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்,அதற்கான வழிமுறை என்ன என்பதைக் காணலாம்.

ஆர்பிஐ

ஏற்கெனவே கூறியபடி,குறுகிய கால முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய முடியாது. ஆனால் ஆர்.பி.ஐ-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். Negotiated dealing system - order matching (NDS-OM)platform என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அனைத்து வங்கிகள், அரசு பத்திரங்களின் முக்கிய டீலர்கள் அனைவரும் ஆர்.பி.ஐ திட்டமான NDS-OM ன் உறுப்பினர்கள் மற்றும் தனிநபர்களும் அவர்களின் மூலம் பத்திரங்களை வாங்கி விற்க முடியும்.

பொது மானிய கணக்கு

அனைத்து அரசு பத்திரங்களும் பொது மானிய கணக்கின்(subsidiary general ledger -SGL)கீழ் வருவன. வங்கிகளோ அல்லது டீலர்களோ ஒரு ஆர்டரை அளித்தால், அரசு உடனே SGL லிருந்து டிமேட் கணக்காக மாற்றி, பணத்தையும் அனுப்ப வேண்டும்.

இதில் உள்ள நன்மை என்னவென்றால்,NDS-OMல் டீலராகப் பதிவு செய்யாத யாரும், உங்கள் சார்பாக வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

எவ்வளவு லாபம் கிடைக்கும்?

மற்றுமொரு நன்மை யாருக்கு என்றால் நீண்ட கால முதலீட்டாளர்கள் மற்றும் பணிஓய்வு பெற்றவர்களுக்கு. 20-30 ஆண்டுகள் நீண்ட கால முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் அதிகமாக 8% வட்டிவிகிதம் தரப்படுகிறது.

வரிச் சலுகை

அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிகம் சேமிப்பது மட்டுமல்லாது வரிச்சலுகைகளும் கிடைக்கும்.

ஏன் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்?

பங்குச்சந்தை நிலையில்லாமல் இருக்கும் இக்காலக் கட்டத்தில் அனைவரும் மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யும் பாதுகாப்பான வழிமுறையைத் தேடுகின்றனர். எனவே முதலீடு செய்யும் முன் அரசு பத்திரங்களைப் பற்றிப் படித்து, நன்கு ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Buy Government Bonds In India?

How To Buy Government Bonds In India?
Story first published: Thursday, April 5, 2018, 10:00 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns