ஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’ பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா?

By Vathimathi S
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் பங்களிப்பாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஃஎப்) திட்டத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. 1952ம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகளின் கீழ் வருங்கால வைப்பு நிதியை அரசு நிர்வகித்து வருகிறது.

இதில் வேலை அளிப்பவர் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு வரை 12 சதவீதத்தைப் பங்களிப்பாக அளிக்க வேண்டும். இதே சம அளவோ அல்லது கூடுதலாகவோ தொழிலாளர் செலுத்த வேண்டும்.

மாதாந்திர டெபாசிட் திட்டம்

மாதாந்திர டெபாசிட் திட்டம்

இந்த நிதி மாதாந்திர டெபாசிட் திட்டம் போன்று செயல்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட விகித வட்டி இதற்கு வழங்கப்படுகிறது. தற்போது 8.65 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. டெபாசிட் மூலம் சேகரிக்கப்பட்ட இந்தத் தொகை வயது முதிர்வின் காரணமாகத் தொழிலாளி ஓய்வுபெறும் போது வழங்கப்படும். சமூகப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் சம்பளம் பெறும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்குச் சாதகமாக எண்ணற்ற வரிப் சலுகைகள் அளிக்கப்படுகிறது.

3 நிலையிலான வரிவிதிப்பு முறை

3 நிலையிலான வரிவிதிப்பு முறை

முதலீடு அல்லது சேமிப்புத் திட்டங்கள் 3 நிலையிலான வரிவிதிப்பு முறையில் வருகிறது. முதலீடு என்ற அடிப்படையில் இந்தத் தொகை வரியைச் சேமிக்கும். முதலீட்டை பணமாகப் பெறும் போது அதன் வட்டிக்கு வரி விதிக்கப்படும். அதேசமயம் இந்தக் கணக்கை முடிக்கும் போது நீண்ட கால மூலதன ஆதாயமாகக் கருதப்ப டுகிறது. சேம நல நிதி மட்டுமே அரிதிலும் அரிதாக மேற்கண்ட எந்த நிலையிலும் வரி விதிக்கப்படுவது கிடையாது.

வரி விலக்கு

வரி விலக்கு

அதாவது விலக்கு..விலக்கு...விலக்கு (இஇஇ). பணம் எடுக்கும் போது வரிவிதிப்புக் கிடையாது. எனினும் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பது நல்ல விஷயம் கிடையாது. தொழிலாளர்களின் அதிகபட்ச பங்களிப்பு இதன் முழுப் பயனையும் கிடைக்கச் செய்யும்.

வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி

வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி

தொழிலாளர்களின் பங்களிப்பு 80 சி பிரிவின் கீழ் வருகிறது. கூட்டு வட்டி தொகை வரிவிதிப்பில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. கணக்கை முடிக்கும் போதும் இந்தத் தொகையும் வரிவிதிப்பின் கீழ் வராது. அதனால் வருங்கால வைப்பு நிதியைச் சிறந்த வழியில் எப்படிப் பயன்படுத்தவது? என்ற கேள்விக்குத் தற்போது வந்துள்ளோம். சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு உணர்வு நிலை சார்ந்ததாகும்.

பணி ஓய்வு

பணி ஓய்வு

பணி ஓய்வு என்பதை ஒவ்வொரு தொழிலாளரும் சந்திக்க வேண்டிய நேரம் வரும் என்பது உண்மையான விஷயமாகும். வருங்கால வைப்பு நிதி மீதான வரிவிதிப்பு கவலை என்பது ஓய்வுபெறும் நேரத்தில் தான் ஏற்படும். அப்போது தான் வருங்கால வைப்பு நிதி பணமாக மாறக்கூடிய நிலையை அடையும். ஓய்வுபெறும் போது வருங்கால வைப்பு நிதியோடு, பணிக்கொடை, விடுப்பு ஊதியம் உள்ளிட்டவை இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். இந்தச் சமயத்தில் சரியான முதலீடு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அடைந்திருக்க வேண்டும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 1984

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 1984

இது ஓய்வுபெறும் போது கிடைக்கும் நிதியை முதலீடு செய்யும் திட்டமாகும். இது தபால் நிலையங்களில் உள்ள திட்டம். இதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படமாட்டாது. 25 தனியார் மற்றும் அரசு வங்கிகளில் இந்தத் திட்டம் உள்ளது. இதற்கு 9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. தற்போதைய அரசு இதை 8.3 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் மூத்த குடிமக்களின் கோபத்தை அரசு நேரடியாகப் பெற்றது.

இது விலக்கு&வரி&விலக்கு (இடிஇ) திட்டமாகும். இதற்கான வட்டி வரி விதிப்புக்கு உட்பட்டதாகும். இதில் அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை செலுத்தலாம். ஆனால், ஒருவர் பல திட்டங்களில் சேர்ந்து கொள்ள முடியும். இதற்கான காலம் 5 ஆண்டுகளாகும். 10 ஆண்டு வரை நீட்டிக்கலாம். 60 வயதுக்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் மற்றும் இந்த அந்தஸ்த்துக்கு நிகரானவர்களுக்கு இது பொருந்தும்.

 

எப்போது வரை டெபாசிட் செய்யலாம்?

எப்போது வரை டெபாசிட் செய்யலாம்?

எனினும் 60 வயதுக்கு முன்னதாகவே ஓய்வுபெற்ற தொகையை இதில் டெபாசிட் செய்யலாம். இது ராணுவம் உள்ளிட்ட இதர சேவைகளில் இருந்து பணி நிபந்தனை அடிப்படையில் 60 வயதுக்கு முன்னரே ஓய்வுபெறுவோருக்குப் பொருந்தும். பென்சனை அதிகரிக்கும் நோக்கத்தோடு வருவாய் பெற இது கவர்ச்சிகரமான திட்டமாகும்.

கால வைப்பு நிதி மற்றும் என்எஸ்சி

கால வைப்பு நிதி மற்றும் என்எஸ்சி

சேமிப்பில் இருந்து சேமிப்பு பெறும் போது பென்சனுடன் கூடிய கூடுதல் வருவாய் கிடைக்கும். தனிப்பட்ட நிதி தீர்வுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். இத்தகைய சமயத்தில் கூட்டு வட்டி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கால வைப்பு நிதி திட்டம் உகந்ததாகும். காலவைப்பு (டிடிஇ) மற்றும் என்எஸ்சி (டிஇஇ) போன்றவற்றை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்.

வரி விலக்குடன் கூடிய ஈக்விட்டி இணைந்த சேமிப்புத் திட்டங்கள் (ஈஎல்எஸ்எஸ்)

வரி விலக்குடன் கூடிய ஈக்விட்டி இணைந்த சேமிப்புத் திட்டங்கள் (ஈஎல்எஸ்எஸ்)

ஈஎல்எஸ்எஸ் என்பது காலவைப்பு நிதி திட்டத்தில் உள்ள அம்சங்களை உள்ளடக்கியதாகும். முதலீடு அதிகப் பயனுடன் திரும்பி வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஏற்றது. ஆனால், அதே சமயம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதாகும். இது வரி&விலக்கு&வரி (டிஇடி) திட்டத்தில் வரக்கூடியதாகும்.

7வது ஊதிய குழு

7வது ஊதிய குழு

7வது ஊதிய குழுவுக்குப் பின்னர் இது இதன் நோக்கத்தைப் பகுதி மட்டுமே நிறைவு செய்துள்ளது. எனினும் இந்தியர்களின் முதலீட்டுக்கு மியூச்சுவல் பண்ட்ஸ், எஸ்ஐபி, யூஎல்ஐபி, பங்கு வர்த்தம் போன்று பல வழிகள் உள்ளது. இந்திய நிதியாகச் சந்தையில் சூட்சமம் மற்றும் அணுகுமுறை தெரிந்தவர்கள் பங்குபெற்றனர்.

முதிர்வு பயன்கள்

முதிர்வு பயன்கள்

வருங்கால வைப்பு நிதியின் முதிர்வு பயன்கள் விரிவிதிப்புக்கு உட்பட்டது கிடையாது. இதன் பயனை முழுமையாக அனுபவிக்கச் சரியான முறையில் அதை வேறு வழிமுறைகளுக்கு மாற்றி முதலீடு செய்ய வேண்டும். அனைத்துத் திட்டங்களிலும் பல சிறப்பம்சங்கள் உள்ளது.

கையில் உள்ள நிதி, கடமை, எதிர்காலத் தேவை, அபாயம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஒன்றோ அல்லது பலதரப்பட்ட முதலீடு திட்டங்களைத் தேர்வு செய்யலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திட்டங்கள் உள்ளன. ஒருவர் தேர்வு செய்யும் திட்டம் அனைவருக்கும் பொருந்தாது. ஓய்வூதிய தொகை முக்கியத்துவம் கொடுத்துச் சந்தையில் உள்ள வாய்ப்புகளைப் புரிந்து தேர்வு செய்ய வேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is PF Amount On Retirement Taxable?

Is PF Amount On Retirement Taxable?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X