தொடர் வைப்பு கணக்கு துவங்க எது சரியான இடம் எது..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

பெரிய முதலீடுகள் செய்வதற்குச் சிறு சேமிப்புத் திட்டங்கள் தான் தொடக்கப்புள்ளியாக இருக்கும். இது போன்ற ஒரு திட்டம் தான் தொடர் வைப்புநிதி கணக்கு. மொத்தமாகப் பணத்தை முதலீடு செய்வதைக் காட்டிலும் இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பணம் செலுத்தி வைப்புநிதிக்கான வட்டிச் சலுகைகளை அனுபவிக்கலாம்.

இந்தத் தொடர் வைப்புநிதி கணக்கில் தனிநபர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் செலுத்திவர வேண்டும். ஆனால் நிரந்தர வைப்புநிதியை போல இதிலும் பணம் முடக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு பழக்கமும் வளரும்.

இந்தியாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்திய அஞ்சல் ஆகிய இரண்டும் சேமிப்பு அல்லது தொடர் வைப்புநிதி கணக்குகளைத் துவங்க மிகவும் பிரபலமான வாய்ப்புகள். இவை இரண்டும் இந்தியா முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பரந்தவிரிந்து கிளைகளைக் கொண்டுள்ளன.

உங்கள் பணத்தைச் சேமிக்க, இந்த இரண்டு வாய்ப்புகளில் எது சிறந்தது என இங்கே அலசி ஆராயலாம்.

கிளைகளின் எண்ணிக்கை

இந்தியா முழுவதும் எஸ்.பி.ஐ 18,354 கிளைகளும் (2016 கணக்கு படி), இந்தியா அஞ்சல் 1,54,882 அஞ்சலகங்களும்(31.03.2014 நிவவரப் படி) வைத்துள்ளன. இந்திய தபால் நிலைய அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய பரந்துவிரந்த அமைப்பு ஆகும். மற்றொரு புறம்,எஸ்.பி.ஐ வங்கியும் இந்த இந்தியா முழுவதும் பரந்து விரிந்து மேலும் உலக நாடுகளிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.

தொடர் வைப்புநிதி கணக்கை திறக்கத் தேவையானவை

எஸ்.பி.ஐ அல்லது இந்தியா அஞ்சலில் கணக்கை திறக்க, கே.ஒய்.சி (KYC -Know your customer) தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதமாகத் தனிநபர் மற்றும் இருப்பிட ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆதார் அட்டை மற்றும் ஃபான் அட்டை போன்ற ஆவணங்களுடன், உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் தேவைப்படும்.

நீங்கள் ஏற்கனவே எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர் எனில், இணையவழி வங்கிச்சேவையின் மூலம் எளிதில் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். எனவே தொடர் வைப்புநிதி கணக்கை துவங்க சேமிப்பு/நடப்பு கணக்கு அவசியம்.

எந்தவொரு தனிநபரும் இந்த இரு நிறுவனங்களிலும் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்குகளும் அனுமதிக்கப்படுகின்றன. தபால் நிலையங்களில் குழந்தைகளின் பெயரில் கூடத் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். 10வயது குழந்தைகள் தங்கள் கணக்குகளைத் தாங்களே பராமரிக்கலாம்.

 

எஸ்.பி.ஐ:

எஸ்.பி.ஐ வங்கியை பொறுத்தவரை இரண்டு வித தொடர் வைப்புநிதி கணக்குகளை வழங்குகிறது. வழக்கமான மற்றும் விடுமுறை காலச் சேமிப்புக் கணக்குகள்.

பெயருக்கேற்றாற் போல், வழக்கமான கணக்குகள் (Regular account) வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப தொடர் வைப்புநிதியை முதலீடு செய்ய வழிவகுக்கிறது. எஸ்.பி.ஐ மற்றும் தாம்சன் கூக்-ன் கூட்டு முயற்சியால் துவங்கப்பட்ட விடுமுறைகாலக் கணக்குகள் மூலம், எதிர்காலத் தாம்சன் கூக் விடுமுறை காலத் திட்டத்திற்குத் தேவையான பணத்தைச் சேமிக்கலாம்.

'எஸ்.பி.ஐ பிளக்ஸி டெபாசிட்'என்ற பெயரில் இன்னொரு வகைக் கணக்கும் உள்ளது. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்யும் பணத்தின் அளவை மாற்றிக்கொள்ளலாம். தொடர் வைப்புநிதி கணக்கை போலவே இருக்கும் இத்திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக இருக்கலாம். மேலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ5,000 லிருந்து அதிகபட்சமாக ரூ50,000வரை முதலீடு செய்யலாம்.

 

இந்தியா அஞ்சல்:

தபால் நிலையங்களில் 5ஆண்டுக்காலத் தொடர் வைப்புநிதி கணக்குகள் திறக்கமுடியும்.

குறைந்தபட்ச மாதாந்திர வைப்புநிதி

எஸ்.பி.ஐ கணக்கைப் பொறுத்தவரை, மாதம் குறைந்தபட்சமாக ரூ.100 முதலீடு செய்யவேண்டும். அதற்கு அதிகமாக முதலீடு செய்யும் போது அந்தத் தொகை ரூ10 ன் பெருக்குத்தொகையாக இருப்பது அவசியம்.

தபால்நிலையங்களில் மாதாமாதம் குறைந்தபட்சமாக ரூ10 முதலீடு செய்யவேண்டும். அதற்கு அதிகமாக முதலீடு செய்யும் போது அந்தத் தொகை ரூ5 ன் பெருக்குத்தொகையாக இருப்பது அவசியம்.

இவை இரண்டிலும் அதிகபட்ச முதலீடு இவ்வளவு தான் என்று இல்லை.

 

கால அளவு

எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் தொடர் வைப்புநிதியின் கால அளவு குறைந்தபட்சம் 12 மாதங்களும் அதிகபட்சமாக 120 மாதங்களாக இருக்கலாம். தபால் நிலையங்களைப் பொறுத்தமட்டில் 5 ஆண்டுத் தொடர் வைப்புநிதி கணக்குகள் மட்டுமே உள்ளன.

முதிர்ச்சியடையும் முன்பே திரும்பப் பெறுதல்

எஸ்.பி.ஐ மற்றும் தபால் நிலைய தொடர் வைப்புநிதி. கணக்குகளில் முதிர்ச்சியடையும் முன்பே திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எஸ்.பி.ஐ-யை பொறுத்தவரையில் பகுதி வைப்புநிதியை திரும்பப் பெற முடியாது. தபால் நிலையங்களில் குறைந்தபட்சம் ஓராண்டு கடந்தபின்னர் 50% தொகையைத் திரும்பப் பெறமுடியும்.

பணம்செலுத்தும் வழிகள்

எஸ்.பி.ஐ வங்கியின் தொடர் வைப்புநிதி கணக்கில் இணையவழியில் பணத்தைச் செலுத்தமுடியும். தபால்நிலைய கணக்குகளில் இந்தவசதி கிடையாது. ஆனாலும் தபால் நிலைய ஏஜெண்டுகள் மூலம் இணையவழியில் பணம் செலுத்தலாம்.

பணம் செலுத்த தவறுதல்

உங்கள் மாதாந்திர வைப்புநிதியை செலுத்த தவறும் போது அதற்குக் கட்டணம்/அபராதம் விதிக்கப்படும்.

எஸ்.பி.ஐ:

5ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ள தொடர் வைப்புநிதிக்கு மாதத்திற்கு ஒவ்வொரு100 ரூபாய்க்கும் ரூ1.50 என்ற விகிதத்திலும், 5ஆண்டுகளுக்கு அதிகமாக உள்ள தொடர் வைப்புநிதிக்கு மாதத்திற்கு ஒவ்வொரு100 ரூபாய்க்கும் ரூ2 என்ற விகிதத்திலும் அபராதம் விதிக்கப்படும்.

தபால் நிலையம்:

தொடர் வைப்புநிதியின் ஒவ்வொரு 5 ரூபாய்க்கும் 5பைசா என்ற விகிதத்திலும் அபராதம் விதிக்கப்படும். 4 தடவைக்கு மேல் வைப்புநிதியை செலுத்தத் தவறினால் தொடர் வைப்புநிதி கணக்கு முடித்துவைக்கப்படும். அடுத்தச் சில மாதங்களில் கணக்கை மீட்கவில்லை என்றால் நிரந்தரமாக முடக்கப்படும்.

வட்டிவிகிதம்

இந்தியா அஞ்சலின் வட்டிவிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கப்படும். சமீபத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் வட்டிவிகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

எது சிறந்தது?

தொடர் வைப்புநிதி கணக்கை துவங்குவது அவரவர் தனிப்பட்ட உரிமை. கால அளவைப் பொறுத்தவரையில், எஸ்.பி.ஐ ஓராண்டுக்கும் குறைவான கணக்குகளை அனுமதிக்கிறது. ஆனால் தபால் நிலையங்களில் ஒரே ஒரு வகைக் கணக்கு மட்டுமே உள்ளது . மேலும் எஸ்.பி.ஐ வங்கியில் இணையவழி பணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

வட்டிவிகிதங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தபால் நிலையங்களின் விகிதங்கள் சிறப்பாக உள்ளன. இவை 5 ஆண்டுகாலக் கணக்கிற்கு 6.9%வட்டி தரும் அதே நேரம் எஸ்.பி.ஐ 6.5% தருகிறது. மேலும் தபால் நிலையங்களில் 10 ரூபாயை கூடத் தொடர் வைப்புநிதி கணக்கில் குறைந்தபட்சமாக முதலீடு செய்ய முடியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Post Office and SBI Recurring Deposit Account A Comparison

Post Office and SBI Recurring Deposit Account A Comparison
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns