கிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா? பாதிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமது நிதி தேவைக்குத் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட கிரெட்டி கார்டுகள். இதனைச் சரியாகப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்துவதன் மூலம் நல்ல கடன் வரலாற்றைப் பராமரிக்க முடியும்.ஒன்றுக்கும் மேற்பட்ட கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது பொதுவான ஒன்றுதான் என்றாலும்,அவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து தான் உங்கள் நிதி தேவை மேலாண்மையில் செய்வதில் மாற்றங்கள் வரும்.

 

உங்கள் கடன் சுமைகளைக் குறைக்கும் வகையில் கடன் அட்டைகளைத் திருப்பி அளித்துவிடலாம் எனக் கூட நினைத்திருக்கலாம். உண்மையாகவே அவற்றை ரத்துச் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது அப்படியே வைத்து விட்டு அவசரக்காலத்தில் கூடப் பயன்படுத்தாமல் இருக்கப் போகிறீர்களா?.

கடன் அட்டைகளை ரத்துச் செய்வது சரியான வழியா மற்றும் அது எப்படி உங்களைப் பாதிக்கும் என்பதை இங்கே காணலாம்.

கடன் மதிப்பெண்ணை இது எப்படிப் பாதிக்கும்?

கடன் மதிப்பெண்ணை இது எப்படிப் பாதிக்கும்?

கடன் அட்டைகளை ரத்துச் செய்வது உங்களின் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கும் என்றாலும், கடன் அட்டை உச்ச மதிப்பு, அதன் வயது மற்றும் உங்கள் மொத்த கடன் அட்டை தொகுப்பில் இதன் விகிதம் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தது.

உங்கள் கடன் அட்டை கணக்கை மூடும் போது, உங்களின் மொத்த கடன் வரம்பும் குறையும் என்பதால், கடன் மதிப்பெண்ணும் குறையும். குறையக்கூடிய மதிப்பெண்ணின் அளவு, உங்களின் மற்ற கடன் அட்டைகளில் உள்ள கடனின் அளவைப் பொறுத்தது. அதாவது, அதிகக் கடன் வரம்புள்ள அட்டையை ரத்து செய்யும் போது, குறைந்த வரம்புள்ள அட்டையை ரத்து செய்வதைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்படும்.

உங்கள் கடன் அட்டையின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதால், கடன் அட்டையில் எப்போதும் பாக்கி வைக்காமல் பார்த்துக்கொள்வது, கடன் மதிப்பெண்ணிற்கு உதவியாக இருக்கும்.

 குறைந்தளவு கடன்

குறைந்தளவு கடன்

குறைந்த அளவு கடனுள்ள கடன் அட்டைகளை மூடலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது. நீங்கள் கடன் அட்டையை மூட விரும்புகிறீர்களோ இல்லையோ, பாக்கியுள்ள கடனை கட்டியே ஆக வேண்டும். வெறுமனே கடன் அட்டை கணக்கை மூடாமல், பாக்கி கடனை கட்டிமுடித்துவிட்டு அட்டையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தாலும் கடன் வரம்பு அப்படியே இருக்கும். நீங்கள் மூடியே ஆகவேண்டும் என்றால், அதே அளவு அல்லது அதைவிட அதிக வரம்புள்ள அட்டையை வாங்காத வரை உங்களின் ஒட்டுமொத்த கடன் வரம்பு குறைந்துவிடும்.

கண்டிப்பாக ரத்துச் செய்ய வேண்டுமா?
 

கண்டிப்பாக ரத்துச் செய்ய வேண்டுமா?

அதிகபட்ச கடன் வரம்பு வைத்திருப்பது எப்போதும் உதவும் என்றாலும், கீழ்கண்ட சில நேரங்களில் கடன் அட்டைகளை மூடலாம்.

1) உங்களால் செலவு செய்யவதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து, அதைப் பயன்படுத்த துண்டுவதைத் தவிர்க்க

2) நீங்கள் பயன்படுத்தாத கடன் அட்டைகளுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும் போது அல்லது உங்களின் கடன் அட்டையில் அதீத வட்டிவிகிதம்/தேவையற்ற கட்டணங்கள் வசூலிக்கும் போது

3) உங்களின் தேவைக்கு ஏற்றவாறும், அதிகச் சலுகைகள் தரும் கடன் அட்டை கிடைத்தால், நீங்கள் இதே அளவு வரம்புள்ள அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்.

பாக்கிகளைச் செலுத்துதல்

பாக்கிகளைச் செலுத்துதல்

உங்கள் செலவு செய்தோ அல்லது கடந்த கால வட்டியோ பாக்கி இருந்தால், அவற்றைச் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தவறாகக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதினால், அதற்குண்டான இடத்தில் முறையிட்டு, கடன்நிறுவனத்தில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

 சலுகை புள்ளிகளைப் பயன்படுத்துதல்

சலுகை புள்ளிகளைப் பயன்படுத்துதல்

சில வங்கிகள் கடன் அட்டையைப் பயன்படுத்தும் போது வழங்கப்படும் சலுகைப்புள்ளிகள் பாக்கியிருந்தால் , அட்டையை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின்பு பயன்படுத்த முடியாது என்பதால் முன்னரே பயன்படுத்தவும். சில நிறுவனத்தில் அட்டையை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின் குறிப்பிட்ட காலத்திற்கு அந்தச் சலுகை புள்ளிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன அல்லது அதே வங்கியில் வேறு கடன்அட்டை பெற்றால், சலுகைப்புள்ளிகளை அதற்கு மாற்றவும் வழிவகைச் செய்கின்றன.

தானாகப் பணம் கழித்தலை ரத்து செய்தல்

தானாகப் பணம் கழித்தலை ரத்து செய்தல்

ஏதேனும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில் தானாகப் பணம் கழிக்கும் வசதியை தேர்வு செய்திருந்தால், அட்டை ரத்துச் செய்தபின் பிரச்சனை ஏற்படும் என்பதால் மறக்காமல் இவ்வசதியை நீக்க வேண்டும்.

கடன் அட்டை கணக்கை மூடுவது எப்படி

கடன் அட்டை கணக்கை மூடுவது எப்படி

கடன் அட்டைகளை இரத்துச் செய்யப் பல்வேறு வழிகள் உள்ளன.

1) வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்துக் கடன் அட்டையை இரத்துச் செய்வது பற்றித் தெரிவிக்கலாம்.

2) மின்னஞ்சல் வாயிலாக ரத்துச் செய்யக் கோரலாம்.

3) இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம்.

4) வங்கி கிளைக்கு நேரிடையாகச் சென்று விண்ணப்பம் அளிக்கலாம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Before Closing Credit Card, Check Out How Cancelling It Will Impact Your Financial Portfolio?

Before Closing Credit Card, Check Out How Cancelling It Will Impact Your Financial Portfolio?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X