உஷார் ‘பேப்பர் பத்திரங்கள்’ இந்தத் தேதிக்கு பிறகு செல்லாது.. எப்படி டிரான்ஸ்பர் செய்வது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தையில் ஏற்படும் மோசடிகளைத் தவிர்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி பேப்பர் பத்திரங்களை (physical shares) 2018 டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு டிமேட்டாக மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது.

பேப்பர் பத்திரங்களானது டிமேட் கணக்குகள் அறிமுகப்படுதுவதற்கு முன்பு பங்குகளை வாங்க நடைமுறையில் இருந்த வழியாகும். இப்படிப் பங்குகளை வாங்கும் போது முத்திரதாள் கட்டணங்களையும் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. டீமேட் வந்ததற்குப் பிறகு மின்னணு முறையில் பங்குகளை வாங்கி இந்தக் கட்டணங்களைக் குறைக்க முடிந்தது. அது மட்டும் இல்லாமல் ஆன்லைனில் எங்கு இருந்து வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம் என்ற நிலையும் உறுவானது.

டீமேட் முறை வந்த பிறகு பெரும்பாலான முதலீட்டாளர்கள் எல்க்டானிக் முறைக்கு மாறிய நிலையில் நிறுவனங்களால் முதலீட்டாளர்களின் கணக்குகளுக்கு டிவிடண்ட் தொகையினைச் செலுத்துவதிலும் சிக்கல் இருந்து வந்தது.

தற்போது இந்தப் பத்திரங்களை டிசம்பர் 25-ம் தேதிக்குள் டிமேட் பங்குகளாக மாற்ற வேண்டும் என்பதால் அதனை எப்படிச் செய்ய வேண்டும் என்று இங்குப் பார்க்கலாம்.

கோரிக்கை

கோரிக்கை

பேப்பர் பங்குகளை டிமேட் கணக்குகளுக்கு மாற்ற DRF எனப்படும் டிமெட்டிரியலைசேஷன் கோரிக்கை படிவத்தினைப் பூர்த்திச் செய்து DP எனப்படும் டெபாசிட்டரி பார்டிசிபண்ட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். டெபாசிட்டரி பார்டிசிபண்ட் என்பவர் பங்குதார்கள் மற்றும் டெபாசிட்டரி இடையில் உள்ள தரகர் ஆவார். என்எஸ்டிஎல் மற்றும் சிஎஸ்டிஎல் இருவரும் தான் டெபாசிட்டரி பார்டிசிபண்ட் ஆவார்கள்.

சரிபார்ப்பு

சரிபார்ப்பு

பேப்பர் பங்குகளை டீமேட்டாக மாற்ற கோரிக்கை படிவத்தினைச் சமர்ப்பித்த பிறகு உங்களிடம் பத்திர வடிவில் உள்ள பங்குகள் சரிபார்க்கப்படும்.

கால அவகாசம்

கால அவகாசம்

சரிபார்ப்பு முடிந்து பேப்பர் பங்குகள் டீமேட் பங்குகளாக மாற 3 முதல் 4 வாரங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும்.

பங்குதாரர் இறப்பு
 

பங்குதாரர் இறப்பு

ஒருவேலைப் பங்குதாரர் இறந்து இருந்தால் பேப்பர் பங்குகளைச் சட்டப்பூர்வமான வாரிசு பெயருக்கு மாற்றிய பிறகு டீமேட்டாக மாற்றலாம். இது கூட்டு கணக்காக இருந்து ஒருவர் இறந்து இருந்தால் ஒருவர் பெயரில் மற்றும் டிரான்ஸ்பர் கோரிக்கையினை அளித்தால் போது.

தொலைந்து போனால்

தொலைந்து போனால்

ஒருவேலைப் பேப்பர் பங்கு பத்திரங்கள் தொலைந்து போனால் டூப்ளிகேட் நகலுக்கு விண்ணப்பித்துப் பத்திரங்களைப் பெற்ற பிறகு டீமாட்டாக டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: demat deadline
English summary

Convert Physical Shares into Demat Form Before This Deadline; How to do it

Convert Physical Shares into Demat Form Before This Deadline; How to do it
Story first published: Wednesday, July 11, 2018, 18:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X