எல்லாரும் மாட்னீங்க , கொஞ்சம் வெயிட் பண்ணுங்க notice வரும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாரும்னா யார் யாரு, தெளிவா சொல்லுப்பா.
நீங்க, உங்க மனைவி, உங்க பையனும், பொண்ணும்.
என்னய்யா மொத்த குடும்பத்தையும் குற்றவாளிக் கூண்டுல ஏத்திட்ட.

 

நோட்டீஸ்:

நோட்டீஸ்:

சரி நாங்க எல்லாம் யார்கிட்ட மாட்னொம், யார் கிட்ட இருந்து நோட்டீஸ் வரும், நாங்க என்ன தப்பு பண்ணோம்ன்னு எங்களுக்கு நோட்டீஸ் வருது.

வருமான வரித் துறை கிட்ட இருந்து தான் நோட்டீஸ் வரும்ணே.

வருமான வரித் துறையில் இருந்தாயா, அவங்களுக்கும் எங்களுக்கும் என்னய்யா வாய்க்கா தகராறு. அவங்க எதுக்கு எங்களுக்கு நோட்டீஸ் விடணும். விஜய் மல்லையாவ எல்லாம் லண்டன் வரப் போய் புடிச்சிட்டாங்களாமா? வேற வேலை இல்லன எங்கள மாதிரி மிடில் க்ளாஸ கசக்க கெளம்பிட்டாய்ங்களா?

அதெல்லாம் இல்ல அண்ணே. பிரச்னை வேற.

1. வரி கட்னீங்களா?

1. வரி கட்னீங்களா?

அண்ணே வரிகட்டிட்டீங்களா?

கட்டிட்டேன் தம்பி. அதான், என்னோட கம்பெனியே 5,500 ரூபாய் மாசாமாசம் டிடிஎஸ் (TDS) பிடிச்சி அரசுக்கு கட்டிடுதே. என்னொட சம்பளத்துக்கு பிடிச்ச வரி, என்னோட வரிக் கணக்குல கட்டிட்டாங்கன்னு எனக்கு வருமான வரித் துறையில் இருந்து எஸ்.எம்.எஸ் எல்லாம் வந்துச்சே. அப்புறம் என்ன?

2. வருமான வரி தாக்கல் பண்ணீங்களா?
 

2. வருமான வரி தாக்கல் பண்ணீங்களா?

சூப்பர், வரி கட்டுனத, முறைப்படி அரசாங்கத்துக்கு வருமான வரிப் படிவம், ITR - Income Tax Return மூலமா தாக்கல் பண்ணீங்களா?

தம்பி இது என்ன விளையாட்டா இருக்கு. அரசாங்கமே உங்க வரி எனக்கு வந்து சேர்ந்திருச்சுன்னு எஸ்.எம்.எஸ் அனுப்புது. இப்போ போய் வரி தாக்கல் பண்ணலையான்னு கேட்டுக்கிட்டு இருக்கீங்க. சுத்த லூசுத்தனமா இல்ல.

3. வருமான வரி செலுத்தல் Vs வருமான வரி தாக்கல்

3. வருமான வரி செலுத்தல் Vs வருமான வரி தாக்கல்

அண்ணே வரி கட்டுறது வேற வருமான வரி தாக்கல் பண்றதுங்கறது வேற. உங்க மனைவிய எடுத்துக்குங்க. அவங்க ஸ்கூல்ல வாத்தியாரா வேலை பாக்குறாங்கல்ல?

ஆமா.

அவங்களுக்கும், மாச சம்பளத்துல, உங்கள மாதிரி டிடிஎஸ் பிடிச்சு அரசாங்கத்து கிட்ட ஸ்கூலே வரி கட்டிடராங்கள்ள?

ஆமா.

அக்கா ஸ்கூல் விட்டு வந்து, தனியா டியூஷன் எடுக்குறாங்கள்ள.

ஆமா.

டியூஷனுக்காக தனியா அரசாங்கத்துகிட்ட அனுமதி வாங்கி இருக்கீங்கள்ள.

ஆமா.

இப்போ அக்கா டியூஷன் எடுத்து சம்பாதிக்கிற காசுக்கு யார் டிடிஎஸ் பிடிப்பா?

ஆமா தம்பி. பாயிண்ட்.

இதுக்காகத் தான் அரசாங்கம், வருமான வரிக் கணக்கத் தாக்கல் பண்ணச் சொல்லுது.

வருமான வரித் தாக்கல்

வருமான வரித் தாக்கல்

"இந்த வருஷத்துக்கு எனக்கு சம்பளத்துல இருந்து இவ்வளவு வருமானம், என்னோடு சைடு இன்கம் இவ்வளவு, என்னோட ஃபிக்ஸாட் டெபாசிட்ல் ஐருந்து இவ்வளவு வட்டி வருமானம், எனக்கு பிசினஸ்ல இருந்து இவ்வளவு வருமானம், அதுல செலவுகள் போக என் லாபம் இவ்வளவு தான். இந்த லாபத்துக்கு, இவ்வளவு ரூபாய் வரியாக் கட்டிட்டேன் கட்டுனதுக்கான ஆதாரங்களோட இந்த வருமான வரிப் படிவத்த சமர்பிக்கிறேன்னு" எழுத்து மூலமா, அதாவது அவங்க கொடுக்குற பார்ம் மூலமா பண்ணா தான் ஒரு முழுமையான வருமான வரித் தாக்கல்.

ஆக வருமான வரி செலுத்துறதுங்குறது வருமான வரித் தாக்கல் செய்றதுல பாதி முடிஞ்சிருக்குன்னு தான் அர்த்தம். மீதிய நாம வரித் தாக்கல் பண்ணி முடிச்சாத் தான் முடியும்.

ஆஹா இது தெரியாமா நான் வருமான வரி தாக்கல் பண்ணலையே, சரி இப்ப போய் எப்புடியாவது வரி தாக்கல் பண்ணிடறேன்.

யாருக்கு எல்லாம் பண்ணப் போறீங்க.

இதென்ன கேள்வி. எனக்கும் என் மனைவிக்கு மட்டும் தான்.

அது சரி அப்ப உங்க பையனுக்கு யார் பண்ணுவா.

டேய் தம்பி, அவன் இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கல டா. அதுக்குள்ள போய் அவனுக்கு வருமான வரி கட்டச் சொல்ற ஏன்?

க்ரெடிட் கார்ட்:

க்ரெடிட் கார்ட்:

போன நவம்பர் மாசம் அவன் பொறந்த நாளக்கி நீங்க ஒரு க்ரெடிட் கார்ட் கிஃப்டா கொடுத்தீங்கள்ள. அந்த க்ரெடிட் கார்ட் அவன் பேர்ல தான இருக்கு.

ஆமா. அதுக்கும் வருமான வரிக்கும் என்ன தொடர்புன்றேன்.

க்ரெடிட் கார்டுங்குற வார்த்தை தான் தொடர்பே. க்ரெடிட் கார்ட் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வரி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறான். இது நான் சொல்லல, வருமான வரித் துறைச் சட்ட பிரிவு 139 உட்பிரிவு 1 சொல்லுது.

என் பையனுக்கு வயசு வெறும் 20 தான்யா ஆகுது. அவன எப்படியாச்சும் இந்த வருமான வரி தாக்கல் இருந்து தப்பிக்க வைக்க முடியாதா.

சார், க்ரெடிட் கார்ட் மட்டும் இல்ல, உங்க பையன பிடிக்க வேற ஒரு காரணமும் இருக்கு.

அதென்ன?

ஃபாரின் ட்ரிப்:

ஃபாரின் ட்ரிப்:

இது என்ன புதுப் பிரச்னை. அதையும் கொஞ்சம் விவரமாச் சொல்லு.

உங்கப் பையன் சம்மர் ஹாலிடேஸுக்கு எந்த நாட்டுக்கு ட்ரிப் போனாரு.

நேபாள், பிரான்ஸ், ஜெர்மனி.

நேபாள்-ல தப்பிச்சாலும், பிரான்ஸ் & ஜெர்மனியில மாட்டிப்பார்.

தயவு செஞ்சி என்னோட ரத்தக் கொதிப்ப ஏத்தாது. முழுசா விவரமா சொல்லு.

எதெல்லாம் ஃபாரின் ட்ரிப் கிடையாது:

எதெல்லாம் ஃபாரின் ட்ரிப் கிடையாது:

"ஒரு இந்தியர் வங்காள தேசம், பூட்டான், மாலத் தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்கு பயணம் செய்திருந்தால், அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதாகக் கருதி வருமான வரிச் சட்டத்தின் படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்."

பார்க்க வருமான வரி சுற்றறிக்கை:

பார்க்க வருமான வரி சுற்றறிக்கை:

அட ஆமா. ஏன்யா இதெல்லாம் ஒரு மாசம் முன்னாடியே வந்து சொல்லி இருந்தா எல்லாத்துக்கு கண்ண மூடிக்கிட்டு வருமான வரித் தாக்கல் பண்ணி இருப்பேன்ல. இப்ப வந்து சொல்றியப்பா? சரி போனது போகட்டும், என் பொண்ணுக்கு எதுக்கு தம்பி நோட்டீஸ் வரும்.

http://bit.ly/2Ow1kZp

2000 சதுர அடி வீடு Or 300 சதுர அடி கடை:

2000 சதுர அடி வீடு Or 300 சதுர அடி கடை:

போன வருஷம் தான உங்கள் பொன்னுக்கு பெங்களூருல ஒரு பொடிக் வெச்சிக் கொடுத்தீங்க.

ஆமா, கடை நடத்துறது கூட இந்தியாவுல குத்தமாயா?

இல்லங்க. பெங்களூருல, வொயிட் ஃபீல்டுல 5BHK வீட்ட வாடகைக்கு எடுத்து தங்கி இருக்குறதா தான சொன்னீங்க.

ஆமாயா.

எத்தனை சதுர அடி வீடு அது. சுமாரா ஒரு 3000 சதுர அடி வரும்.

சூப்பர் சார், கட எங்க வெச்சிக் கொடுத்திருக்கீங்க. எவ்வளவு சதுர அடி வரும்.

ஜெய நகர் 3rd Block-ல ஒரு 700 சதுர அடி வரும்யா.

சார் இந்த ரெண்டு பாயிண்ட்லயுமே உங்க பொண்ணு மாட்டிக் கிட்டாங்க.

"ஒரு இந்தியர் 2000 சதுர அடிக்கு மேல் கட்டடப்பட்டு இருக்கும், கான்கிரிட் வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தாலோ, சொந்தமாக வைத்திருந்தாலோ அவர்கள் கட்டாயம் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

அதே போல் ஒரு இந்தியர் 300 சதுர அடிக்கு மேல் கடை நடத்தினால் (கான்க்ரிட் ஆக இருக்க வேண்டும் என்று அவசியல் இல்லை) அவர்களும் கட்டாயமாக வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்." இது சட்டம். வருமான வரித் துறையின் சுற்றறிக்கையை பார்க்க: http://bit.ly/2NkOJMc சட்டம் சொன்னது போதும். ஆனா என் பொண்ணு இருக்குற வீட்ல கார்ப்பெட் ஏரியா ரொம்பச் சின்னது. நிச்சயமா 2000 சதுர அடி தாண்டாது. இப்ப தப்பிச்சாலா இல்லையா.

இல்ல சார்.

கார்பெட் ஏரியாவா Vs பில்ட் அப் ஏரியாவா

கார்பெட் ஏரியாவா Vs பில்ட் அப் ஏரியாவா

சட்டத்துல கார்ப்பெட் ஏரியாவா, பில்ட் அப் ஏரியாவா, சூப்பர் பில்ட் அப் ஏரியாவான்னு சொல்லல. ஆக நாம அமைதியா போய் வருமான வரி தாக்கல் பண்றது தான் நல்லது.

போங்க தம்பி. இதுக்கு எல்லாம் என்னால் வருமான வரித் தாக்கல் பண்ண முடியாது.

சரி அது உங்க விருப்பம். இருந்தாலும் உங்க பொண்ணு இன்னொரு விஷயத்துலயும் மாட்டுவாங்க...?

ரூ. 25,000 க்ளப்களுக்கு:

ரூ. 25,000 க்ளப்களுக்கு:

ஒரு இந்தியர் ஆண்டுக்கு ரூ. 25,000 ரூபாய்க்கு மேல் செலுத்தி க்ளப்களில் உறுப்பினராக இருந்தால், அவர்களும் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஒரு பாயிண்ட்ல தான்யா எங்க குடும்பத்துல யாருமே வரல.

யாரெல்லாம் வருமான வரித் தாக்கல் செய்யணும்ன்னு ஒரு லிஸ்ட் இருந்தா அதையே தந்துடேன். எனக்கு இல்லன்னாலும், மத்தவங்களூக்கு பயன்படும்.

நீங்க கேட்டு இல்லன்னு சொல்லுவேனா சார். - யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் வருமான வரித்துறை சட்டம் - http://bit.ly/2xhT48N

கார்.

கார்.

"ஒரு இந்தியர் இருசக்கர மோட்டார் வாகனம் தவிர எந்த மாதிரியான மோட்டார் வாகனம் வைத்திருந்தாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்." இது சட்டம்.

இது போக வேற ஏதாவது இருந்தா வருமான வரி தாக்கல் பண்ணணுமா...?

ஆமாங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: income tax itr income tax returns
English summary

Income tax will send the notice very shortly

Income tax will send the notice very shortly
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X