18 பேரைக் கொன்ற வெள்ளை யானை, யானைக்கான செலவு 1.46 லட்சம் கோடி ரூபாய்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு போகாது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஆட்கள் போக உதவும். இந்த யானைக்கு தேவையானதை செய்யும் போது 18 பேர் உயிர் இழந்தார்கள். அதோடு சுமார் 90 பேருக்கு மேல் பலத்த காயமடைந்தார்கள்.

 

அந்த வெள்ளை யானை

அந்த வெள்ளை யானை

சீனாவைச் சேர்ந்த பொருளாதாரத வல்லுநர்கள் தான் சீனாவின் ஹாங்காங் - ஜிகாய் பாலத்தை வெள்ளை யானை என்று அழைக்கின்றனர். காரணம் இந்த பாலத்தைத் கட்டுமானிக்க ஆன செலவை சீன வரலாற்றில் எப்போதுமே மீட்கவே முடியாது. அத்தனை செலவ்வு எடுக்கும் இந்த கட்டுமானம், சீனாவின் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்காது என்று அடித்துச் சொல்கிறார்கள். அதனால் தான் இதை வெள்ளை யானை என்று ஓட்டுகிறார்கள்.

யாரை இணைக்கும்

யாரை இணைக்கும்

இந்த பாலம் ஹாங்காங் நகரின் மகாவ் (Macau) நகர் மற்றும் சீனாவின் சுகாய் (Zhuhai) நகரை கடல் வழியில் இணைக்கும். இந்த பாலத்தின் தூரம் 55 கிலோமீட்டர். இதில் சுமாராக 40 - 50 நிமிடங்களில் சீனாவில் இருந்து ஹாங்காங்குக்கு சென்று விடலாம்.

செலவு
 

செலவு

இந்த பாலத்தை கடந்த 10 வருடங்களாக கட்டுமானித்து வருகிறார்கள். இதற்கு நான்கு லட்சம் டன் இரும்பு மற்றும் டன் கணக்கில் எக்கு போன்ற அடிப்படைக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த இரும்பைக் கொண்டு 60 ஈஃபில் டவர்களை அசால்டாக கட்டலாமாம்.

பயணப் பாதை

பயணப் பாதை

55 கிலோமீட்டர் வரை நீளும் இந்த பாலத்தின் முதல் 30 கிலோமீட்டர் ஒரு பாலம் போலவே வெளியே தெரியும், அடுத்த ஏழு கிலோமீட்டர் கடலுக்கு அடியில் பயணம் செய்ய வேண்டி இருக்கும். மீண்டும் கடைசி 18 கிலோமீட்டர் பாலம் போல வெளியே தெரியும். இந்த இடைப்பட்ட ஏழு கிலோமீட்டர் கப்பல் போக்குவரத்துக்காக 44.7 மீட்டர் கடல் ஆழத்தில் சுரங்கப் பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

யார் எல்லாம் பயணிக்கலாம்

யார் எல்லாம் பயணிக்கலாம்

சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே இங்கு பயணிக்க முடியும். அப்படி அனுமதி பெறுபவர்கள் தங்கள் வாகனங்களுக்கான டோல் கட்டணங்களையும் செலுத்த வேண்டி இருக்கும். மிக முக்கியமான விஷயம் இந்த பாலத்தில் எந்த அரசு போக்குவரத்து வசதிகளும் இருக்காது.

 டோல் வரிக் கட்டணம்

டோல் வரிக் கட்டணம்

சீன அரசு இந்த பாலத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 9200 வாகனங்கள் பயணிக்கும் என்று கணித்திருக்கிறது. ஆக தற்போது இருக்கும் கட்டணங்களைக் கணக்கிட்டால் கூட ஆண்டுக்கு 85 மில்லியன் டாலர் தாண்டாது என்று சீன பொருளாதார வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள்.

பராமரிப்புச் செலவுகள்

பராமரிப்புச் செலவுகள்

ஆக கடல் பாலத்தின் மொத்த பட்ஜெட்டான 20 பில்லியன் டாலரை திரும்பப் பெற குறைந்த பட்சம் 24 ஆண்டுகள் ஆகும். அதுவரை இந்த பாலம் பயன்படுத்த போதுமான பராமரிப்புகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் எனவே வரும் 86 மில்லியன் டாலரில் சுமாராக 20 மில்லியன் டாலராவது பராமரிப்புச் செலவுக்கு ஒதுக்க வேண்டி இருக்கும். இப்படி பராமரிப்புச் செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது சுமார் 30 ஆண்டுகளாவது ஆகும். இத்தனை காலம் எல்லாம் காத்திருந்து ஒரு கட்டுமானத்தின் செலவுகளை மீட்பது அரசுக்கு நல்லது அல்ல என்று மேலும் எச்சரிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

சூழலியல் பிரச்னை

சூழலியல் பிரச்னை

இந்த கடல் பாலம் போடப்பட்டிருக்கும் இடங்களில் வெள்ளை டால்பின்கள் வாழ்விடங்களாம். இந்த டால்பின்களின் எண்ணிக்கை 148ல் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் (பால வேலை தொடங்கப்பட்டதில் இருந்து) 47 ஆக குறைந்திருக்கிறது. இனி எப்போதும் இந்த பகுதியில் பழைய எண்ணிக்கையில் டால்பின்களைப் பார்க்க முடியாது என்று World Wide Fund for Nature (WWF)-ன் உதவி இயக்குநர் சமந்தா லீ வருத்தத்தைத் தெரிவித்து இருக்கிறார்.

நம் முதலீட்டுக் கல்வி

நம் முதலீட்டுக் கல்வி

இப்படிப் பல பிரச்னைகளைத் தாண்டியும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) இந்தப் பாலத்தை திறந்து வைத்துவிட்டார். நாளை முதல் சீனாவில் இந்தப் பிரமாண்ட கடல் பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

இப்படி பல ரிஸ்குகளைத் தாண்டி முதலீடு செய்வதும் பெரிய கலை தான், ஆனால் மற்றவர்கள் தலையில் அடித்துக் கொண்டு நீங்கள் செய்யும் முதலீடு ஒரு போதும் லாபம் ஈட்டாது அல்லது 30 வருடங்களுக்குப் பின் தான் உங்கள் முதலீடு லாபம் ஈட்டும் என்று சொன்னாலும் பிடிவாதமாக உங்கள் முதலீடுகளை மேற்கொள்வது... தவறான முடிவு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

An white elephant, which cost 18 mens death and 20 billion american dollar

An white elephant, which cost 18 mens death and 20 billion american dollar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X