என்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா? என்னய்யா சொல்றீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆமாங்க... இந்த வசதி எல்லாம் க்ரெடிட் கார்ட்ல மட்டும் தான் கிடைக்கும். நம்ம கிட்ட பத்து டெபிட் கார்ட்... அதாங்க ஏடிஎம் கார்ட் இருக்கலாம், ஆனா ஒரு க்ரெடிட் கார்ட் மாதிரி வருமா..? வராது. அந்த என்னது எல்லாம் கிடைக்கும்னு பாப்போம் வாங்க

 

க்ரெடிட் ஸ்கோர்:

க்ரெடிட் ஸ்கோர்:

இதுவரை நீங்க கடன் வாங்குனதே இல்ல. அவ்வளவு நல்லவரு. உங்களுக்கு ஏதோ ஒரு வேகத்துல ஒரு பெரிய தொகை தேவைப்படுது. அப்ப பேங்குல போய் "சார் நான் கடனே வாங்குனது இல்ல. நான் அவ்வளவு நல்லவன். எனக்கு கடன் குடுங்க"ன்னு கேட்டுப் பாருங்க. அப்ளிகேஷன நம்ம கண் முன்னாடியே குப்ப தொட்டில போடுவாங்க. கடன் வாங்கி இருக்கணும், அதை ஒழுங்க திரும்ப கட்டியும் இருக்கணும். அவங்களுக்குத் தான் கடனே தருவாங்க. நாம எவ்வளவு நல்லா கடன் வாங்கி இருக்கோம், எப்படி கட்டி இருக்கோமுன்னு க்ரெடிட் ஸ்கோர் பாத்து தான் சொல்வாங்க. அதாங்க சிபில் ஸ்கோர். இந்த க்ரெடிட் ஸ்கோர சம்பாதிக்க, க்ரெடிட் கார்ட் வாங்குங்க சார்.

வட்டி வருமானம்

வட்டி வருமானம்

நீங்க சரியான சிக்கனவாதியா... அட கஞ்சக் கூமுட்டியாக் கூட இருங்க சார். உங்க கிட்ட க்ரெடிட் கார்ட் இல்லன்னா நீங்க மாசம் மினிமம் 100 ரூவாயாச்சும் சம்பாதிக்காம விடுறீங்கன்னு சொல்லலாம்.

 எப்படின்னு கேக்குறீங்களா...?
 

எப்படின்னு கேக்குறீங்களா...?

உங்களுக்கு மாச சம்பளம் 30,000 ரூவான்னு வெச்சுக்குவோம். அக்டோபர் 01-ம் தேதி செப்டம்பர் மாச சம்பளம் உங்களுக்கு 30,000 ரூவா பேங்க் அக்கவுன்ட்ல இருக்கு. இப்ப உங்க டெபிட் கார்ட யூஸ் பண்ணாம எல்லா செலவையும் க்ரெடிட் கார்டுலேயே பண்றீங்க. மாசம் முடியும் போதும் உங்க கையில அந்த 30,000 ரூவா அப்புடியே இருக்கும். இப்ப நவம்பர் மாசம் சம்பளமும் உங்க பேங்க் அக்கவுண்டுக்கு வந்துருச்சு. இப்ப மொத்தமா 60,000 ரூவா உங்க பேங்க் அக்கவுண்ட்ல் இருக்கு.

க்ரெடிட் கார்ட் கணக்க முடிங்க

க்ரெடிட் கார்ட் கணக்க முடிங்க

இப்ப அக்டோபர் மாசம் க்ரெடிட் கார்ட்ல பண்ண செலவுங்க பில்லு வருது. மொத்த பில் தொகை 28,500-ன்னு வெச்சுக்குவோம். இந்த 28,500 ரூவாய ஒரு ஆன்லைன் டிரான்ஸ்ஃபர்ல முழுசா கட்டிடுங்க. இப்ப மறுபடியும் உங்க சம்பள கணக்குல 31,500 ரூபாய் இருக்கும். இப்புடி வருஷம் பூரா மெயிண்டெயின் பண்ணா 30,000 ரூவாக்கு 4 சதவிகித வட்டி 1200 ரூவா. இப்ப சொல்லுங்க நீங்க மாசம் 100 ரூவா செலவு பண்ணாமலேயே செலவழிக்கிறீங்களா இல்லயா..?

 ஆஃபர்கள் & கேஷ்பேக்குகள்

ஆஃபர்கள் & கேஷ்பேக்குகள்

இந்த சப்ஜெக்ட நாம அதிகம் பேச வேண்டாம். எல்லாருக்கும் தெரியும். பெரிய ஷாப்பிங் மால் ஆரம்பிச்சு, ஆன்லைன் ஷாப்பிங் வர எல்லாத்துலயும் க்ரெடிட் கார்டுக்கு ஒரு ஆஃபர், கேஷ்பேக் இருக்கத் தான் செய்யுது. ஸொ க்ரெடிட் கார்ட் வெச்சிருந்தா இதையும் ஃப்ரீயா அனுபவிக்கலாம். ஆதலால் க்ரெடிட் கார்ட் வாங்குவீராக.

 வட்டி இல்லாக் கடன்

வட்டி இல்லாக் கடன்

என்னமோ ஒரு அவசர தேவ. குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு வெச்சுக்கங்க. அவசரமா ஒரு 25,000 ரூவா தேவைப்படுது. ஆனா கையில காசு இல்ல. க்ரெடிட் கார்டுல ஆஸ்பத்திரி பில்ல பே பண்ணுங்க. சம்பளம் வந்த உடனேயே கட்டிக்கலாம். அதுவும் வட்டியே இல்லாம. பொதுவா எந்த க்ரெடிட் கார்டும் 45 நாட்களுக்கு வட்டி போடாது. ஆக 45 நாள் கடன் காலத்தை முறையா பயன்படுத்தி கடனை சம்பளம் வந்ததும் அடச்சிடுங்க.

நோ காஸ்ட் இ.எம்.ஐ

நோ காஸ்ட் இ.எம்.ஐ

இன்னொரு கடன் ரகம் இ.எம்.ஐ. ஒரு பொருள் வாங்கணும். உண்மையாவே தேவ இருக்கு. இதனால் நான் நாலு காசு சம்பாதிக்க முடியும்-ன்னு நினைக்கிறவங்க மட்டும் இந்த ஆப்ஷன பயன்படுத்தி பொருளை வட்டி இல்லாம இ.எம்.ஐ-ல வாங்கி பயன்படுத்திக்குங்க. ஜமாயிங்க. தயவு செஞ்சி தேவ இல்லாத ஆணி எல்லாம் வாங்கி மாச வருமானத்தை கொறச்சிக்காதீங்க.

பிகு: கண்டிப்பாக க்ரெடிட் கார்ட் பில் வந்த உடன் மொத்த கடன் தொகையையும் ஒரே முறையில் செலுத்தி விடவும். கடனை ரோல் ஓவர் செய்யும் பட்சத்தில் மேலே சொன்ன பயன்பாடுகள் கிடைக்காமல் நீங்கள் ஒரு கடனாளி ஆக வேண்டி இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five benefits of using credit cards

Five benefits of using credit cards
Story first published: Thursday, October 4, 2018, 9:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X