பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015-ம் ஆண்டு மே மாதம் மோடி அரசால் தொடங்கப்பட்டதே பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டங்கள். இந்த விபத்து இறப்பு காப்பீடு திட்டத்தில் 2018 ஜூலை வரை நாடு முழுவதில் இருந்தும் 13.74 கோடி நபர்கள் இணைந்துள்ளனர்.

 

இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் ஆண்டுக்கு 12 ரூபாய்ச் செலுத்தினால் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு கிடைக்கும் என்பதே ஆகும்.

 பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா என்றால் என்ன?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா என்றால் என்ன?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா ஒரு டெர்ம் லைப் இன்சூரன்ஸ் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் 18 முதல் 70 வயதிற்குள் உள்ள இந்திய குடிமக்கள் யார் வேண்டும் என்றாலும் இனையலாம்.

இந்தப் பாலிசியை வாங்கிவரகள் விபத்துக் காரணமாக இறக்கும் போது 2 லட்சம் ரூபாய் வரையிலும், உடல் உருப்புகள் இழப்பின் போது 1 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு தொகையினைப் பெற முடியும்.

 தகுதி

தகுதி

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் வயது 18 ம் முதல் 70 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு ஒன்றும் இருக்க வேண்டும்.

 பிரீமியம் தொகை
 

பிரீமியம் தொகை

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது.

கவரேஜ்

கவரேஜ்

இந்தப் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா காப்பீட்டை வாங்கியுள்ளவர்கள் விபத்துக் காரணமாக இறக்க நேர்ந்தால் 2 லட்சம் ரூபாயினை அவர்களது நாமிக்கலால் பெற முடியும். இதுவே இரண்டு கை, கால், கண் உள்ளிட்டவை இழந்தாலும் 2 லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும்.

ஒரு வேலை விபத்தின் போது ஒரு கண், கை, கால் போன்றவை இழக்க நேர்ந்தால் 1 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை கிடைக்கும்.

பிரீமியத்தினைச் செலுத்துவது எப்படி?

பிரீமியத்தினைச் செலுத்துவது எப்படி?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா காப்பீட்டை வங்கி கணக்கு மூலம் மட்டுமே வாங்க முடியும். எனவே ஒரு முறை பிரீமியத்தினைச் செலுத்திய பிறகு ஒவ்வொரு ஆண்டும் தானாகவே வங்கி கணக்கில் இருந்து பிரீம்யத்திற்கான தொகை பிடித்தம் செய்யப்படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை எனப் பாலிசி காலம் கணக்கிடப்பட்டுப் பிரிமியம் தொகை மே 31-ம் தேதி வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

இதுவே ஜாயிண்ட் சேமிப்பு கணக்கு என்றால் இருவர் பெயரிலும் தனித்தனியாகப் பிரீமியம் செலுத்தி பாலிசியை வாங்க முடியும்.

 கவரேஜ் காலம்

கவரேஜ் காலம்

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி 12 ரூபாய் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட அடுத்த நாள் முதல் பாலிசி புதுப்பிக்கப்பட்டு அடுத்த ஒரு வருடத்திற்குக் கவரேஜை அளிக்கும்.

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா காப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா காப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா காப்பீட்டினை வாங்க வேண்டும் என்றால் நீங்கல் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியை அணுகி அதற்கான படிவத்தினைப் பூர்த்திச் செய்து அளிக்க வேண்டும். அனைத்துப் பெரிய வங்கி நிறுவனங்களின் வங்கிகளிலும் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.

இடையில் வெளியேற முடியுமா?

இடையில் வெளியேற முடியுமா?

ஆம், பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் மூலம் பாலிசியை வாங்கியவர்கள் ஒரு வருடம் முடிந்த பிறகு தேவையில்லை இன்றால் வெளியேறலாம். ஒருவேலை மீண்டும் சேர வேண்டும் என்றாலும் பிரீமிய தொகையினைச் செலுத்தி இனையலாம்.

காப்பீடு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதா?

காப்பீடு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதா?

காப்பீடு பாலிசி வாங்கியவர்களின் வயது 70 அல்லது வங்கி கணக்கை மூடினால் அல்லது வங்கி கணக்கில் பிரீமியத்தினைப் புதுப்பிக்கத் தேவையான பணம் இல்லாத போது காப்பீடு கிடைக்காமல் போக வாய்ப்புகள் உள்ளது.

பிற இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க முடியுமா?

பிற இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்க முடியுமா?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தினை வாங்கியவர்கள் வேறு இன்சூரன்ஸ் பாலிசிகளையும் வாங்கலாம். அதில் எந்தத் தடையும் இல்லை.

இயற்கை பேரழிவில் இறந்தால் காப்பீடு கிடைக்குமா?

இயற்கை பேரழிவில் இறந்தால் காப்பீடு கிடைக்குமா?

வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளில் இறக்க நேர்ந்தாலும் / ஊனம் ஆனாலும் காப்பீடு தொகை கிடைக்கும்.

மருத்துவச் செலவுகள் ஏற்கப்படுமா?

மருத்துவச் செலவுகள் ஏற்கப்படுமா?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் மருத்துவச் செலவுகளை ஏற்காது. அதற்கு ஆயூஷ்மான பாரத் திட்டத்தில் கூடுதலாகச் சேர வேண்டும்.

காப்பீடு பணம் எப்படிக் கிடைக்கும்?

காப்பீடு பணம் எப்படிக் கிடைக்கும்?

விபத்தில் ஊனம் ஏற்பட்டால் காப்பீடு தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதுவே இறந்துவிட்டால் நாமினியின் சேமிப்பு கணக்கு மூலம் செலுத்தப்படும்.

எப்ஐஆர் ஆவணம் தேவையா?

எப்ஐஆர் ஆவணம் தேவையா?

வாகன விபத்து அல்லது கொலை ஏதேனும் செய்யப்பட்டு இருந்தால் எப்ஐஆர் எனப்படும் முதல் திகவல் அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுவே மிருகம் தாக்கி, மரம் விழுந்து இறந்து இருந்தால் மருத்துவச் சிகிச்சை ஆவணங்கள் தேவை. இறந்த பிறகு அவர் எப்படி இருந்தார் என்ற விவரம் கண்டிப்பாகத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் என்ஆர்ஐ-கள் சேர முடியுமா?

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் என்ஆர்ஐ-கள் சேர முடியுமா?

ஆம், வெளிநாட்டில் உள்ள என்ஆர்ஐ எனப்படும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் வங்கி கணக்கு இருந்தால் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் சேர முடியும். காப்பீடும் வழங்கப்படும்.

காப்பீட்டு நிறுவனங்கள்

காப்பீட்டு நிறுவனங்கள்

பொதுவாக இந்த இன்சூரன்ஸ் பாலிசியைப் பொதுத் துறை ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கின்றன. சில வங்கி நிறுவனங்கள் பிற ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்தும் காப்பீட்டினை அளிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things To Know About Pradhan Mantri Suraksha Bima Yojana In Tamil

Things To Know About Pradhan Mantri Suraksha Bima Yojana In Tamil
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X