ஜனவரி 2019-ல் இருந்து டெபிட் கார்டுகள் மற்றும் க்ரெடிட் கார்டுகள் செல்லாது..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பதறாதீங்க... பழைய கார்டுகள் செல்லாது. அதாவது 2016 ஜனவரியில் இருந்து வங்கிகள் கொடுத்த புதிய EMV - Europay Mastercard and Visa ரக கார்டுகள் மட்டுமே செல்லும். பழைய காந்தப் பட்டைகள் உள்ள கார்டுகள் செல்லாது.

 

தேதி

தேதி

வரும் டிசம்பர் 31, 2018-ம் தேதிக்குள் பழைய காந்த பட்டைக் கார்டுகளை வங்கிகளிடமே கொடுத்து மாற்றி விட வேண்டும். புதிய EMV ரக கார்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதோடு EMV ரக கார்டுகளில் தான் பரிவர்த்தனைகளுக்கு பின் பாதுகாப்பு இருக்கும். வங்கி வாடிக்கையாளர்கள் சரியான பின் கொடுத்தால் ஒழிய அதை பயன்படுத்த முடியாது.

மாற்றிக் கொள்ளுங்கள்

மாற்றிக் கொள்ளுங்கள்

இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பது வங்கிகளைக் கட்டுப்படுத்தும் மத்திய ரிசர்வ் வங்கி. எனவே புதிய EMV ரக கார்டுகளை எந்த ஒரு விலையும் கொடுக்காமல் வங்கிகளிடம் இருந்து மாற்றிக் கொள்ளலாம். அப்படி ஒருவேளை பணம் கேட்டால் அப்படியே வீடியோ எடுத்து ஆர்பிஐக்கு அனுப்புங்கள்.

EMV என்றால் என்ன
 

EMV என்றால் என்ன

நமக்கு வழங்கப்படும் கார்டுகளின் இடது பக்கம் ஒரு சிம் கார்ட் இருப்பது போல இருக்குமே அது தான் புதிய EMV ரக கார்டுகள். Europay Mastercard and Visa என்பது தான் EMV-ன் சுருக்கம். இந்த சிறிய சிப் தான் அனைத்து பிரச்னைகளில் இருந்தும் வாடிக்கையாளர்களை காக்கும். இது காந்த பட்டை ரக கார்டுகளை விட பாதுகாப்பானது.

 எப்படி மாற்றுவது

எப்படி மாற்றுவது

பல்வேறு வங்கிகள் ஆன்லைனிலேயே புதிய அட்டையை பெற வழி வகை செய்து இருக்கிறார்கள். எனவே ஆன்லைனில் வசதி உள்ள வங்கிகளில் ஆன்லைனிலேயே புதிய அட்டைக்கான தேவையை குறிப்பிட்டுப் பெறலாம். சில வங்கிகள் இந்த வசதிகளைப் பற்றி தெளிவாக தங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்காமல் இருக்கின்றன.

நேரடியாக வங்கிக்கு

நேரடியாக வங்கிக்கு

அப்படிப்பட்ட வங்கிகளில் சேவை வைத்திருப்பவர்கள், தங்கள் வங்கிக் கிளைகளுக்கு சென்று எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்thu இந்தப் புதிய Europay Mastercard and Visa ரக அட்டையைப் பெற வேண்டும்.

அப்படிப் பெறாதவர்களின் அட்டைகள் வரும் ஜனவரி 01, 2019-ல் இருந்து செல்லுபடியாகாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: credit debit cards
English summary

magnetic strip credit and debit cards are not accepted from 2019

magnetic strip credit and debit cards are not accepted from 2019
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X