வெறும் 44,000 ரூபாயில் 1,100 சதுர அடி வீடு (House)..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரகு. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அறநிலையத் துறை அதிகாரியாக இப்போது பணியாற்றி வருகிறார். வயது 51. தமிழ் நாடு அரசு ஊழியர். மாதம் 45,000 க்கு மேல் சம்பளம் வருகிறதாம்.

 

வழக்கம் போல 40 வயது கடந்தாலே வரக் கூடிய சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்பு நம் ரகு சாருக்கும் உண்டு. ஆக அதற்கு மாதா மாதம் 2,000 - 3,000 வரை மருத்து மாத்திரைகளுக்கு செலவு செய்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு ஒரு மகன் ராகவன். வயது 26. திருமணமாகி ஒரு மகளும் இருக்கிறாள். ராகவனுக்கு மதுரையிலேயே ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை. மாதம் 43,000 ரூபாய் சம்பளம். மனைவி நிவேதா ஆசிரியராக ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்கிறாள். இவருக்கு சம்பளம் 21,000 ரூபாய். எல்லோரும் மதுரையில் வாடகை வீட்டில் (House) வசிக்கிறார்கள்.

ஒரே வீட்டில்

ஒரே வீட்டில்

ரகுவின் மனைவி கடந்த மாதம் தான் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். ஆக ரகு, ராகவன், ராகவன் மனைவி மற்றும் ஒரு வயது மகளோடு மதுரையிலேயே ஒரு வாடகை வீட்டில் வாந்து வருகிறார்கள். ராகவனின் அம்மாவின் மருத்துவ சிகிச்சைகளுக்கு சில நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருக்கிறார்கள்.

சம்பளம்

சம்பளம்

ரகுவின் மாத சம்பளம் 43,000, நிவேதா சம்பளம் 21,000, அப்பா ரகுவின் சம்பளம் 45,000 என மொத்தம் 1,09,000 ரூபாய் வருகிறது. மொத்த வீட்டுச் செலவுகள் ஒரு 65,000 ரூபாய் போக மீதம் 44,000 ரூபாயை வங்கிக் கணக்கில் சேமித்து வருகிறார்கள். இப்படி செலவுகள் போக மீதப் பணம் என சுமார் 8 லட்சம் ரூபாய் கையில் இருக்கிறது.

பேசலாம்
 

பேசலாம்

அன்று மாலை வேலையை முடித்துவிட்டு நிவேதா வீட்டுக்கு குழந்தையோடு வருகிறாள். நிவேதாவுக்குப் பின் அப்பா ரகு வருகிறார். இரவு 7.15-க்கு ராகவன் வருகிறான். இன்ரு ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும். ஆக சாப்பிட்ட பின் பேசலாமென மருமகள் நிவேதாவிடம் சொல்லி விட்டு தன் நண்பர்களை சிலரைப் பார்க்கச் செல்கிறார்.

தொடக்கம்

தொடக்கம்

இரவு உணவு ஆன பின் என்னப்பா ஏதோ பேசணும்னு சொன்னீங்களா..?என ராகவன் மட்டும் வருகிறான். இல்லப்பா, நிவேதாவையும் கூப்பிடு. அவளும் இருந்தாத் தான் சரியா இருக்கும் என்கிறார் ரகு. இப்போது ராகவன், ரகு, மருமகள் நிவேதா என எல்லோரும் அமர்கிறார்கள்.

அம்மா ஆசை

அம்மா ஆசை

உங்கம்மாவ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப "நாம எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கணும்"-ன்னு சொன்னா. ஆனா அவ இருந்தப்பவே ஒரு நல்ல வீட்டை வாங்க முடியல. இப்பவும் நம்ம கிட்ட இருக்குற பணத்துல சொந்த வீடு வாங்க முடியாது. அதனால் வீட்டுக் கடன் வாங்கி ஒரு வீடு வாங்கலாம்னு தோணுதுப்பா என்கிறார் ரகு.

ராகவன் கேள்விகள்

ராகவன் கேள்விகள்

சரி தான்ப்பா, ஆனால் இப்ப எப்படி கடன் வாங்குறது. மகளுக்கு அடுத்தடுத்து படிப்பு செலவு இருக்கு, நிவேதாவும் மேற்கொண்டு படிக்கணுங்குறா. உங்களுக்கும் உடம்பு ரொம்ப முடியல. அதனால கையில் இருக்குற பணத்தைக் கூட கடன் காரங்களுக்கு தராமா பத்திரமா வெச்சிருக்கேன். இந்த நேரத்துல எப்படி வீட்டுக் கடன் வாங்குறது என யோசிக்கிறான்.

இப்ப என்ன வேலை எல்லாம் இருக்கு

இப்ப என்ன வேலை எல்லாம் இருக்கு

1. உங்கம்மா ஆசை பட்ட அந்த வீட்ட வாங்கணும்.
2. நாம வாங்குன கடன் ஒரு 10 லட்சம் ரூபாய் இருக்கு அத அடைக்கணும்.
3. எதிர் காலத்துக்கு கொஞ்சம் பணம் வேணும். மாசா மாசம் செய்யுற 65,000 ரூவா செலவு போக, இது தான பெரிய செலவுங்க என எழுதுகிறார் ரகு. ராகவனும், நிவேதாவும் ஆமோதிக்கிறார்கள்.

ஸ்டெப் 1

ஸ்டெப் 1

இப்ப நம்ம கையில 8 லட்சம் ரூபாய் சேமிப்புப் பணம் இருக்கு. போன மாசம் நாம எல்லாரும் அம்மாவோட ஒரு வீட்ட பாத்தோமே..! அவளுக்கு அது ரொம்ப பிடிச்சிருந்துது. ஆனா வெளிய சொல்லிக்கல. அந்த வீட்டோட விலை 35 லட்சம் ரூபாய். ஆனா அடிச்சிப் புடிச்சி பேரம் பேசி 33 லட்சத்துக்கு கொண்டு வந்திருக்கேன். இப்ப நம்மை கை காசு 8 லட்சம் போக 25 லட்சம் வீட்டுக் கடன் போடணும்.

ஸ்டெப் 1.1

ஸ்டெப் 1.1

இப்ப ஹெச்டிஎஃப்சியில 8.5% வட்டிக்கு வீட்டுக் கடன் தர்றாங்க. ஆக 25 லட்சம் ரூபாய் கடன், 8.5% வட்டிக்கு, 20 வருஷம் மேனிக்கு வாங்குனா மாசம் 22,000 இ.எம்.ஐ கட்டுற மாதிரி இருக்கும். ஆக உனக்கு சம்பளம் 43,000-ங்குறதால உனக்கு மட்டுமே இந்த வீட்டுக் கடன கொடுத்திருவாய்ங்க. ஆக இனி மாசாமாசம் 22,000 ரூபாய் இ.எம்.ஐக்கு போகும். 20 வருஷ முடிவுல நமக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கும். இது தான் ஸ்டெப் 1. இதனால் உங்க அம்மா ஆசை பட்ட வீட்ட வாங்கிடலாம். ஆக மாசம் 1,08,000 - 65,000 - 22,000 = 21,000

ஹெச்டிஎஃப்சி திட்ட விளக்கம்

ஹெச்டிஎஃப்சி திட்ட விளக்கம்

இந்த HDFC-ல் ஒரு புதிய திட்டம் கொண்டு வந்திருக்காய்ங்க. அந்த திட்டத்துல நம்ம இ.எம்.ஐ-க்கு மேல இன்னொரு இ.எம்.ஐ காடுனா கடன் மொத்தமா முடியுறப்ப, ஒரு கோடி ரூபாய் அவங்க தருவாங்களாம். இந்த ஒரு கோடி ரூபாய் நம்ம இ.எம்.ஐ தொகையைப் பொருத்து மாறுமாம்.

உதாரணம்

உதாரணம்

இப்ப நம்ம இ.எம்.ஐ எவ்வளவு சொன்னோம் மாசம் 22000 ரூபாய். அதே 22,000 ரூபாயை முழு வீட்டுக் கடனும் கட்டி முடிக்கிற வரை நாம செலுத்திக் கிட்டே இருக்கணும். ஆக மாசம் 44,000 ரூபாய் இ.எம்.ஐ கட்டுனா..! 20 வருஷ முடிவுல நம்ம கையில் 2 கோடி ரூபாய் இருக்கும்.

எப்படி

எப்படி

HDFC காரங்க நாம கட்டுற 44,000 ரூபாயில வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ போக மீதமுள்ள 22,000 ரூபாயை HDFC மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமா பங்குச் சந்தையில முதலீடு பண்ணிடுவாங்களாம். அதுல இருந்து வர்ற வருமானத்துல தான் நம்ம வங்கிக் கடன் முடியுறப்ப நமக்கு 2 கோடி ரூபாய் தர்றாங்க.

அடடா..!

அடடா..!

ஆனா இதுல ஒரு கண்டிஷன் உண்டு, பங்குச் சந்தை சரியான ஏற்றம் காணலன்னா, நம்ம பணம் நஷ்டத்துல கூடப் போகலாம். அதனால் இந்த 2 கோடி ரூபாய் உறுதியா கிடைக்கும்னு சொல்ல முடியாது. அதே மாதிரி சந்தை நல்லா இருந்தா நமக்கு இந்த 2 கோடி ரூபாய் நாலு கோடி ரூபாயாக் கூட கிடைக்கலாம்.

எதிர் காலம் ஓகே

எதிர் காலம் ஓகே

ஆக நாம 50,00,000 ரூபாய் முதலீடு பண்ணி, நமக்கு 2 கோடி ரூபாய் வரை கிடைக்குமாம். இது நல்லா இருக்குள்ள..? ஆக இந்த 2 கோடி ரூபாய வெச்சி என் பேத்தி வாழ்கைய நல்ல படியா அமச்சிக்கலாம். அதோட உனக்கு என்ன மாதிரி வயசான காலத்துல உதவும் என்கிறார் ரகு. நிவேதாவும் ஆமோதிக்கிறாள்.

இன்க்ரிமெண்டுகள்

இன்க்ரிமெண்டுகள்

இந்த வருஷத்துக்கு அப்புறம் வர்ற இன்க்ரிமெண்டுங்க மூலமா நிவேதா மேற்படிப்பு செலவுங்கள பாத்துக்கலாம். என்னோட ரிட்டயர்மெண்ட் பெனிஃபிட் மட்டும் ஒரு 30,00,000 ரூபாய் வரை கிடைக்கும். ஆக இத வெச்சி நம்ம சொந்தகாரங்களோட கடன்களை எல்லாம் தீர்த்துக்கலாம் என திட்டத்தை விளக்கினார் ரகு. ராகவனும், நிவேதாவும் மிரண்டே போய்விட்டார்கள்.

HDFC

HDFC

அடுத்த நாளே அருகில் இருந்த HDFC வங்கிக்குச் சென்று அப்பா சொன்ன திட்டத்தை விசாரித்தான் ராகவன். அப்படி ஒரு திட்டம் இல்லவே இல்லை எனச் சொன்னார்கள். இதை மேலாளரிடம் விசாரித்த போது, அது ஒரு வழிகாட்டுதல் தான். நீங்கள் வேண்டுமானால் இ.எம்.ஐ-க்கு சமமான தொகையை HDFC மியூச்சுவல் ஃபண்டுகளிலோ அல்லது வேறு ஏதாவது நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளிலோ கூட முதலீடு செய்து கொள்ளலாம். அப்படி முதலீடு செய்து ரகு சார் சொன்னது போல வரும் வருமானத்தைப் பெறலாம் என்றார். அடுத்த நாளே 44,000 ரூபாயை முதலீட்டுக்கு ஒதுக்கிவைத்தது ரகுவின் குடும்பம் உங்களுக்கு எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1100 square feet house plus 2 crore rupees money for 44000 rupees emi

1100 square feet house plus 2 crore rupees money for 44000 rupees emi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X