18,500 கோடி மக்கள் பணத்தோடு, 11,500 கோடி எஸ்பிஐ வங்கி பணத்துக்கு நாமம் போட்ட DHFL..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

DHFL - Dewan Housing Finance Limited. இந்த நிறுவனத்தின் மீது சமீபத்தில் முறையற்ற ரீதியில் மக்கள் பணத்தையும், சாதாரண முதலீட்டாளர்கள் பணத்தையும் நூதனமாக ஏமாற்ரி ஊழல் செய்வதாக கோப்ராபோஸ்ட் என்கிற அமைப்பு ஆதாரங்களோடு வெளியிட்டது.

 

DHFL நிறுவனத்தின் நிறுவனர் வாதவான் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களுக்கு 14,300 கோடி ரூபாய் கடன் கொடுத்தது, கறுப்புப் பணமாக பதுக்கி இலங்கையில் ஒரு கிரிக்கெட் டீம் வாங்கியது, வெளிநாடுகளில் பலரின் பெயரில் சொத்துக்களை வாங்கியது.

பாஜகவுக்கு போலி நிறுவனங்கள் மூலம் சுமார் 19.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது. இன்சைடர் டிரேடிங் (நிறுவன உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்த ரகசியங்களை பகிர்ந்து பங்கு விலை ஏற்றத்தில் காசு பார்ப்பது) மூலம் 1,000 கோடி ஏமாற்றியது. இப்படி வரிசையாக புகார்கள் அடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அரசு நிறுவனங்கள் கடன்

அரசு நிறுவனங்கள் கடன்

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி, அதை விட அதிக வட்டிக்கு வங்கிகளில் கடன் நிராகரிக்கபப்ட்ட நபர்களுக்கு கொடுக்கும். கடன் கொடுக்கத் தேவையான நிதிக்காக சுமார் 97,000 கோடி ரூபாயை முதல் தொகையாக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி இருக்கிறது DHFL. குறிப்பாக 50,000 கோடியை பல்வேறு இந்திய அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி இருக்கிறது. இந்த ஏமாற்று நிறுவனத்துக்கு அரசு வங்கிகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ சுமார் 11,500 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது.

பங்கு விலை வீழ்ச்சி

பங்கு விலை வீழ்ச்சி

செப்டம்பர் மாதத்திலேயே ஏதோ பிரச்னை இருப்பதாக பங்குகளின் விலை வீழ்ச்சி காட்டியது. கடந்த செப்டம்பர் 2018 காலக்களில் திவான் ஹவுசிங் பங்குகள் சுமார் 610 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது. இவர்களுக்கு வர வேண்டிய கடன் வரவில்லை என யாரோ கொளுத்திப் போட பங்கு விலை கிடு கிடு சரிவு கண்டது. அதன் பின் பங்கு விலை 320 ரூபாயைத் தாண்டவில்லை.

ஜனவரி 2019 -ல்
 

ஜனவரி 2019 -ல்

செப்டம்பர் 2018-க்குப் பிறகு ஜனவரி 2019-ல் DHFL நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன்கள் வரவில்லை அதோடு வேறு பல மோசடிகளையும் செய்திருக்கிறது என கோப்ராபோஸ்ட் ஆதாரத்துடன் நிரூபித்தது. ஜனவரி 4, 2018 அன்று 238 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த பங்குகள் இப்போது வரை தொடர்ந்து விலை சரிந்தே வர்த்தகமாகி வருகின்றன. இப்போது ஒரு பங்கு விலை 114 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

எம்புட்டு நட்டம் தெரியுமா..?

எம்புட்டு நட்டம் தெரியுமா..?

செப்டம்பர் 2018-ல் இந்த பங்கின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு சுமார் 21,000 கோடி ரூபாய் இப்போது நித DHFL நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு வெறும் 3,600 கோடி ரூபாய். மக்கள் பணம் மட்டும் சுமார் 17,500 கோடி ரூபாய் எங்கு போனதென்றே தெரியவில்லை. எல்லாம் நட்டம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

dhfl is trading in its lowest price due to cobrapost exposition

Shares in Dewan Housing Finance Corp Ltd (DHFL) plunged on Monday to their lowest in over five years as claims of financial mismanagement and broader sectoral woes continue to plague the home loan provider.
Story first published: Monday, February 4, 2019, 11:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X