Budget 2019: இந்த பட்ஜெட்டில், வருமான வரி சார்ந்த ஐந்து முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாமாம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாம் பட்ஜெட்டுகளிலும் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் ஒரு தேவை இருக்கும். ஆனால் சம்பளம் வாங்கும் சாமானியர்களின் பெரிய எதிர்பார்ப்பு வருமான வரி மாற்றம் தான்

 

வரி வரம்பு மாற்றம்

வரி வரம்பு மாற்றம்

இப்போது 60 வயதுக்குட்பட்ட தனி நபர்களுக்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டாம். இந்த வரம்பை 3 லட்சம் ரூபாய்க்கு உயர்த்த வாய்ப்பிருக்கிறது என பிரஸ் வாட்டர் கூப்பர் எனும் பெரிய நிறுவனம் கணித்திருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு வரம்பு மாற்றம்

மூத்த குடிமக்களுக்கு வரம்பு மாற்றம்

அதுவே 60 முதல் 80 வயதுட்பட்ட தனி நபர்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டாம். இந்த வரம்பை 3.5 லட்சம் ரூபாய்க்கு உயர்த்த வாய்ப்பிருக்கிறது எனவும் கணித்திருக்கிறது. பாஜக தலைமையிலான அரசு தான் 2014 தன் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அடிப்படை வருமான வரி வரம்பை 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சத்துக்கு உயர்த்தியது.

80சி
 

80சி

வருமான வரி வரம்பை மாறம் செய்தது போல 80சி- பிரிவிலும் 1 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக அதிகரித்ததும் பாஜக அரசு தான். இந்த தருணத்தில் 80 சி பிரிவை அதிகரிப்பது நாட்டில் சேமிப்பை அதிகரிக்கும் எனவே இந்த இடைக்கால பட்ஜெட்டில் 80சி வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என கேதான் அண்ட் கோவின் அபிஷேக் ரஸ்தோகி மற்றும் பிடபிள்யூசி நிறுவனத்தின் குல்தீப் குமார் சொல்கிறார்.

வருமான வரி விகித மாற்றம்

வருமான வரி விகித மாற்றம்

இப்போது 2.5 லட்சம் ரூபாய்க்கு 5% மற்றும் 5 - 10 லட்சம் ரூபாய்க்கு 20% என ஒரு பெரிய வரி விகித இடைவெளி இருக்கிறது. அதோடு தனி நபர் வருமான வரி 30% என்கிற அதிக வரி விகிதத்தில் இருந்து 25%-க்கு கொண்டு வர வாய்ப்பிருப்பதாக ரஸ்தொகி சொல்கிறார். இதையே சிஐஐ அமைப்பு 5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்களுக்கு முழு வரி விலக்கும், 5 - 10 லட்சம் ரூபாய்க்கு 10%, 10 - 20 லட்சத்துக்கு 20%, 20 லட்சத்துக்கு மேல் 25% வரி விதிப்பு மாற்றா வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அந்த வருமான வரிச் சட்டம் பிரிவு 24

அந்த வருமான வரிச் சட்டம் பிரிவு 24

வீட்டுக் கடனுக்கு திருப்பி செலுத்தும் வட்டியை இந்த பிரிவில் தான் காட்டி வரிக் கழிவு பெறுவார்கள். இப்போது இந்த பிரிவின் கீழ் 2 லட்சம் ரூபாய் மட்டுமே காட்டி கழிவு பெறலாம். ஆனால் நித பட்ஜெட்டில் இந்த தொகை 2.5 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கலாம் என பிடபிள்யூசி நிறுவனத்தின் குல்தீப் குமார் சொல்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the five important expectation in income tax

very important five expectation of income tax changes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X