பிஎஃப் கணக்கோடு ஆதார் இணைக்கவில்லையா..? எத்தனை பிரச்னைகள் வரும் பாருங்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி நிறுவனங்களின் தலையீடு அதிகம் இல்லாமல் ந பிஎஃப் கணக்குகளையும், பிஎஃப் தொகையினையும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு ஆதார் அவசியம் EPFO கணக்குகளோடு இணைத்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் EPFO அலுவலகம் அதன் 6 கோடி பயனாளர்கள் மற்றும் கணக்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு "Anywhere Service" என்கிற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. இந்த திட்டத்துக்கும் ஆதாரை கேட்கிறது மத்திய அரசு.

அப்படிக் கொண்டு வந்து விட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் EPFO கணக்காளர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை புதிய கணக்கோடு சேர்த்துக் கொள்ளலாம். எளிதில் க்ளெய்ம் வாங்கலாம், முறையாக பென்ஷன் பெறலாம்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி, அதானி... அடிவாங்கும் அனில் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி, அதானி... அடிவாங்கும் அனில் அம்பானி

யூ.ஏ.என்

யூ.ஏ.என்

ஏற்கனவே யூ.ஏ.என் கொண்டு வந்த பின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை கணக்குகளை உடனடியாக புதிய கணக்குகளோடு இணைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களுக்கு பழைய நிறுவனத்தில் இருந்து கிடைத்த பிஎஃப் தொகையை புதிய பிஎஃப் கணக்கோடு இணைத்துக் கொள்ள முடிவதில்லை. அதற்கு தனியாக EPFO அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டி இருக்கிறது.

அலுவலகங்களுக்கே போக வேண்டும்

அலுவலகங்களுக்கே போக வேண்டும்

இன்னும் ஒரு க்ளெய்ம் வாங்க வேண்டும் என்றாலோ அல்லது பிஎஃப் தொடர்பான சில பிரச்னைகள் என்றாலோ, பென்ஷன் கணக்கீடுகள் என்றாலோ பிஎஃப் அலுவலகங்களுக்கே நேரடியாக வர வேண்டி இருக்கிறது. அதுவும் நம் பிஎஃப் கணக்கு எங்கு இருக்கிறதோ அங்கு செல்ல வேண்டும். இப்படி EPFO கணக்குதாரர்களுக்கு வழங்கும் சேவைகள் இன்னும் அலுவலகங்களிலேயே செய்யப்படுகிறது.

கணக்கு உள்ள அலுவலகங்கள்

கணக்கு உள்ள அலுவலகங்கள்

ஒரு உதாரணம். ரஞ்சித் சென்னையில் கடந்த 2018 டிசம்பர் வரை வேலை பார்த்துவிட்டு இப்போது ஒரு பிசினஸ் தொடங்க பெங்களூரூ வந்துவிட்டார். ஆனால் அவரின் பிஎஃப் கணக்கு சென்னையில் தான் இருக்கிறது என்றால், பெங்களூரூ பிஎஃப் அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு க்ளெய்மும் ரஞ்சித்தால் வாங்க முடியாது. இப்படி கணக்கு எங்கு இருக்கிறதோ அந்த பிஎஃப் அலுவலகத்துக்குச் சென்று தான் வாங்க வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் இனி வரும் காலங்களில் "Anywhere service" முறையில் ஆதார் உதவியோடு சரி செய்ய இருக்கிறது EPFO.

வேறு பிரச்னைகள்

வேறு பிரச்னைகள்

இப்போது வரை பிஎஃப் கணக்குகளுக்கு யூ.ஏ.என் எண்கள் வழங்கப்பட்டிருப்பது கூட தெரியாமல் பல்வேறு பிஎஃப் கணக்குகளை வைத்திருப்பவர்களும் உண்டு. அதில் சில கணக்குகள் யூ ஏ என் கீழ் இணைத்திருப்பார்கள். இன்னும் பல பிஎஃப் கணக்குகளை புதிய யூ ஏ என் உடன் இணைத்திருக்கமாட்டார்கள். ஆக அந்த கணக்குகள் எல்லாம் அப்படியே தேங்கி நிற்கும். உதாரணத்துக்கு ஒரு நபருக்கு 20க்கு மேலான பிஎஃப் ஐடிகள் இருக்கும். அதில் 12 புதிய யூ ஏ என் உடன் இணைத்திருப்பார்கள். மீதமுள்ள 8 கணக்குகளை யூ ஏ என் உடன் இணைத்திருக்க மாட்டார்கள். அதோடு இந்த 20 கணக்கில் 10-க்குத் தான் ஆதாரும் இருக்கும். ஆக இந்த 20 கணக்கு ஒரு நபருடையது தானா என கண்டு பிடிப்பதே பெரிய சிரமமாக இருக்கும். இவைகளை என்ன செய்வது. இதை எல்லாம் சரி செய்து நிர்வகிக்கத் தான் "Anywhere Service" சேவையை தொடங்க இருக்கிறது பிஎஃப் அலுவலகம். சுருக்கமாக பிஎஃப் அலுவலகங்களை அதிகம் நம்பாமல் நேரடியாக ஆன்லைனிலேயே அனைத்து சேவைகளையும் செய்து முடித்துக் கொள்ள விரும்புகிறது EPFO.

முதல் முறையிலேயே

முதல் முறையிலேயே

ஒரு நபர் தன்னுடைய புதிய வேலையில் சேர்ந்த பின் ஒரே ஒரு முறை பிஎஃப்-க்கு பணத்தை போட்டால் போதும், அவர்களின் பழைய பிஎஃப் கணக்குகளில் உள்ள பாக்கி தொகைகள் மற்றும் இபிஎஸ் அடிப்படையில் வரும் பென்ஷன் சலுகைகள் அனைத்தும் மீண்டும் புதிய கணக்கோடு இணைக்கப்பட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இனி வரும் காலங்களில் இவை எல்லாமே பிஎஃப் அலுவலகத்திடம் விண்ணப்பிக்காமலேயே தானாகவே நடக்கும். ஆனால் இப்போது விண்ணப்பித்தால் தான் நடக்கிறது.

செயலியில் கோளாறு

செயலியில் கோளாறு

இப்போது இருக்கும் மென்பொருளில் சில பிரச்னைகள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றன. EPFO கணக்குதாரர்கள் கொடுக்கும் சேவை விண்ணப்பங்கள், EPFO கணக்கு இருக்கும் அலுவலகங்களுக்கே செல்லும். நம் EPFO கணக்கு இருக்கும் அலுவலகம் தான் நமக்கான EPFO சேவைகளைச் செய்ய முடியும். இதில் பிரச்னையே இந்த மென்பொருள் யூஏஎன் மென்பொருளோடு ஒத்துப் போகாமல் இருப்பது தான். அதிலும் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குகளோடு சேர்க்காமல் இருந்தால் பிரச்னை இன்னும் அதிகமாகிவிடுகிறது. மீண்டும் யார் கணக்கு எனத் தெரியாமல் தொகைகள் அப்படியே பெண்டிங்கில் நிற்கும்.

ஆதார் இணைப்பு

ஆதார் இணைப்பு

ஆக EPFO அலுவலகம் தன்னால் முடிந்த வரை தன் கணக்குதாரர்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்கிறது. ஆனால் ஒரு நபரின் பிஎஃப் கணக்குகளை முழுமையாக சரிபார்க்க முடியவில்லை. காரணம் 40 சதவிகித EPFO கணக்குகளுக்கு ஆதார் எண் இணைக்கவில்லை. தயவு செய்து ஆதாரை EPFO கணக்கோடு சேருங்கள், உங்களுக்கு அதிவிரைவாக சேவை செய்ய உதவுங்கள் என வேண்டுகோள் வைத்திருக்கிறது EPFO அலுவலகம். ஆக ஆதாரை இணைப்போம், பிஎஃப் பணத்தை முறையாக நிர்வகிப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If you did not link your aadhar with your pf account, then everything would be complicated

If you did not link your aadhar with your pf account, then everything would be complicated
Story first published: Thursday, March 7, 2019, 12:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X