Compound Interest..! ஆப்பிள் ஐபோன் 10-க்கு 1,00,000 கொடு! வாழ்நாள் முழுக்க Smartphone இலவசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறிப்பு: இந்த கட்டுரை கூட்டு வட்டியின் பலத்தைச் சொல்வதற்காக, சக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான, உணர்ச்சிகரமான, உண்மைச் சம்பவங்களைச் சொல்கிறோம். இந்த திட்டத்தை எந்த ஒரு நிறுவனமோ அல்லது ரீடெயிலர்களோ கொடுக்கவில்லை. இந்த திட்டத்தை நீங்கள் தான் உங்களுக்கு தகுந்தாற் போல வகுத்துக் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

 

பன்னீர் செல்வம். இவருக்கு வயது 21. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை. சொந்த ஊர், செஞ்சி. நவம்பர் 2017-ல் வேலைக்கு சேர்ந்து க்ரெடிட் கார்ட் கிடைத்த உடனேயே, சுமார் 1,00,000 ரூபாய் கொடுத்து Apple Iphone 10 Smartphone வாங்கினார்.

பன்னீர் செல்வத்தின் அப்பா குப்பன் அரசு அதிகாரி. வயது 45. மகா சிக்கனவாதி (நம் மொழியில் கஞ்சன்). 10 ரூபாய்க்கு பிஸ்கெட் வாங்க வேண்டும் என்றால் கூட அதை அநாவசியச் செலவில் சேர்ப்பவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரும் ஒரு Lenovo K3 Note Smartphone-ஐ 2017 ஜனவரியில் வாங்கினார். மகன் ஐஃபோன் ஆசையை, ஊதாரித் தனத்தை முடிந்த வரை கண்டித்தார், கண்டித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பன்னீர் கேட்பதாகத் தெரியவில்லை. மகனுக்கு முன் உதாரணமாக இருக்க நினைக்கிறார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிதித்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைந்துள்ளது - மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிதித்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைந்துள்ளது - மத்திய அரசு

செய்யலாம்

செய்யலாம்

மகனின் 1,00,000 ரூபாயை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் என கணக்கிட்டவர், ஒரு அதிரடி முடிவில் இறங்கினார். இந்த 1,00,000 வைத்தே இனி தன் வாழ்நாளில் தேவையான எல்லா ஸ்மார்ட்போனையும் வாங்கலாம், வட்டிக் காசே போதும் எனக் கணக்கிட்டார். பன்னீருக்கு பணத்தின் அருமையைப் புரிய வைக்க இது தான் நல்ல வழி என முடிவே செய்துவிட்டார்.

விலை நிலை இல்லை

விலை நிலை இல்லை

இப்போது மளிகை சாமான்கள் வாங்குவதைப் போல, செல்போன்களையும் 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது புதிதாக வாங்க வேண்டி இருக்கிறது. ஆக இரண்டு வருடங்களுக்கு ஒரு ஸ்மார்ட்போனனை, 10,000 ரூபாய் விலையில் வாங்கப் போவதாக முடிவும் செய்துவிட்டார். இந்த 10,000 ரூபாயை நாம் உயர்த்தப் போவதில்லை. காரணம் இன்றைய ஸ்மார்ட்ஃபோன் சந்தை, உண்மையாகவே நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு ஸ்மார்ட்போன் வெளியான அடுத்த சிலவாரங்களிலேயே, அதை விட அதிக வசதிகள் கொண்ட இன்னொரு மாடல் ஸ்மார்ட்போன் சந்தைக்கு வந்து விடுகிறது. ஆக, முன்பைப் போல ஒரு ஸ்மார்ட்போன் மாடலின் விலை சில மாதங்களுக்கு மேல் நிலைப்பதில்லை.

இது போதும் எனக்கு
 

இது போதும் எனக்கு

ஆக, அதே 10,000 ரூபாய் விலைக்கு, அன்றைய டிரெண்டில் எல்லா நவீன வசதிகளோடும் உள்ள செல்போன்கள் இப்போது கிடைக்கின்றன, இனி வருங் காலங்களிலும் கிடைக்கும். எனவே ஸ்மார்ட்போன் விலை ஏற்றத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் முடிவு செய்துவிட்டார் குப்பன். சரி இப்போது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தனக்கு 10,000 ரூபாய் வேண்டும், அதுவும் வரிப்பிடித்தம் எல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என யோசிக்கிறார்.

முதலீடு

முதலீடு

மோடி இந்தியாவின் ரட்சகனாக வந்து கொண்டிருக்கிறார் என மே 2014-ல் அவர் பதவி ஏற்ற போது சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் பங்குச் சந்தையும் பலமாக ஏறியது. அதனால் அப்போது சில ஷேர் மார்க்கெட் நண்பர்கள் ஆலோசனைப் படி, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 100 பங்குகளை ஒரு பங்குக்கு 190 ரூபாய் என 19,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கினார். 2016 செப்டம்பரில் ஒரு பங்கின் விலை 1,150-ஐத் தொட்ட உடனேயே ஒரு பயத்தில் விற்று விட்டார். லாபம் மட்டும் 1,15,000 (விற்ற விலை) - 19,000 (வாங்கிய விலை) - 675 (தரகுக் கட்டணம்) = 95,325 ரூபாய் நிகர லபம். மொத்தமாக இந்த 95,325 லாபம் + அசல் 19000 = 1,14,325 ரூபாயில் 10,525 ரூபாயை தன் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்துக்கு எடுத்துக் கொள்கிறார் குப்பன். ஆக 2016 டிசம்பர் 31-ம் தேதி கணக்குப் படி குப்பன் சார் கையில் 1,03,800 ரூபாய் இருக்கிறது.

மறு முதலீடு

மறு முதலீடு

2017 ஜனவரியில், குப்பன், மீதமிருந்த 1,03,800 ரூபாயை 8% வட்டிக்கு, ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டாக, தன் மனைவியின் பெயரில் போடுகிறார். காரணம், ஒரு வருடத்தில் 40,000 ரூபாய் வரை வரும் வங்கி வட்டி வருமானத்துக்கு வரிப் பிடித்தம் செய்யத் தேவை இல்லை. அதனால் தான் மனைவி பெயரில் டெபாசிட். 2018 ஜனவரியில் முதலாமாண்டு வட்டியோடு 1,12,104 ரூபாய் வருகிறது. இப்போது வரை தன் லெனோவா கே 3 நோட் ஓகே. ஆகையால் மாற்றம் செய்யவில்லை. மீண்டும் 2018 ஜனவரியில் கிடைத்த வட்டியோடு 1,12,104 ரூபாயை அப்படியே மீண்டும் குப்பன் சார் தன் மனைவி பெயரில் 8% வட்டிக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டாகப் போடுகிறார்.

இலவச ஸ்மார்ட்போன்

இலவச ஸ்மார்ட்போன்

2019 ஜனவரியில் 1,12,104 ரூபாய்க்கு 8% வட்டியாக 8,968 ரூபாயோடு 1,21,072 ரூபாய் வருகிறது. அதில் 10,000 ரூபாயை புது ஸ்மார்ட்போன் வாங்க எடுத்துக் கொள்கிறார். மீதமுள்ள 1,11,072 ரூபாயை, அடுத்த நாளே மீண்டும் 9% வட்டிக்கு ஃபிக்ஸட் டெபாசிட் போடுகிறார். அதெப்படி 9 சதவிகிதம்..? இந்த முறை குப்பன் சார், தன் அம்மாவின் பெயரில் டெபாசிட் செய்கிறார். அதுவும் சில தனியார் வங்கிகளில். பொதுவாகவே மூத்த குடிமக்கள் எனும் போதும் டெபாசிட்டுக்கான வட்டி கூடும் தானே..? அதைப் பயன்படுத்திக் கொண்டார். இதை தன் மகன் பன்னீரிடமும் விளக்குகிறார். தான் வட்டி மூலம் வாங்கிய புதிய Redmi Note 5-வையும் காட்டுகிறார். பன்னீர் மனத்தளவில் கலங்கினாலும், விவாதத்துக்காக கணக்கு போட்டு காட்டச் சொல்கிறான்.

கணக்கீடுகள்

கணக்கீடுகள்

Please see the Calculation table in the last slide.

வாயடைத்த பன்னீர்

வாயடைத்த பன்னீர்

பன்னீருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்பாவின் கணக்கீடுகளைப் பார்த்தால் சொன்னது போலவே இனி வாழ்நாள் முழுக்க வட்டிக் காசிலேயே செல்போன் வாங்கிவிடுவார் போலிருக்கிறதே. 2022-ல் இருந்து ஒவ்வொரு வருடமும் 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி மட்டுமே வருகிறதே. அப்போது எல்லாம் அப்பாவால் இன்னும் விலை உயர்ந்த ஸ்மார்ட்ஃபோன்களைக் கூட செலவழிக்காமல் வாங்க முடியும் தானே..? என தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்கிறான். கொஞ்சம் பன்னீருக்கு கூசுகிறது.

வாயடைத்த பன்னீர்

வாயடைத்த பன்னீர்

பன்னீருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்பாவின் கணக்கீடுகளைப் பார்த்தால் சொன்னது போலவே இனி வாழ்நாள் முழுக்க வட்டிக் காசிலேயே செல்போன் வாங்கிவிடுவார் போலிருக்கிறதே. 2022-ல் இருந்து ஒவ்வொரு வருடமும் 10,000 ரூபாய்க்கு மேல் வட்டி மட்டுமே வருகிறதே. அப்போது எல்லாம் அப்பாவால் இன்னும் விலை உயர்ந்த ஸ்மார்ட்ஃபோன்களைக் கூட செலவழிக்காமல் வாங்க முடியும் தானே..? என தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்கிறான். கொஞ்சம் பன்னீருக்கு கூசுகிறது.

சுய பரிசோதனை

சுய பரிசோதனை

நாம் அத்தனை விலை உயர்ந்த செல்போனை வைத்துக் கொண்டு என்ன சாதித்தோம், என்ன செய்தோம், என தன்னைத் தானே கேட்டுக் கொள்ளத் தொடங்கினான். மகன் தன் தவறை உணர்ந்ததைப் புரிந்து கொண்ட அப்பா, மெளனமானார். அப்பா வட்டிக் காசில் வாங்கிய Redmi note 5, தன் சம்பளக் காசில் வாங்கிய Apple iphone 10-ஐ விட 10 மடங்கு மதிப்பானதாகத் தோன்றியது பன்னீருக்கு. கண்களின் ஓரத்தில் கண்ணீர் வரத் தொடங்கியது. "பன்னீரு வாயா, அப்பத்தா மட்டன் பிரியாணி சமச்சிருக்கு" என குப்பன் சார் மகன் தோளில் கை போட்டார், அந்த அணைப்பு பன்னீரை என்னமோ செய்தது..! Apple iphone 10-க்கு ஸாரிப்பா என்றான். சிரித்துக் கொண்டே "வாடா பிரியாணி சூடு ஆரிடப் போகுது" என்றார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

give 100000 rupee you will get smartphone for your whole life time due to compound interest

give 100000 rupees you will get smartphone for you whole life time due to compound interest effect
Story first published: Saturday, May 4, 2019, 15:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X