இனி வாட்ஸ் அப்பில் பேமென்ட் ஆப்பும் வருகிறது.. தகவலை மட்டும் அல்ல பணத்தையும் பரிமாறிக் கொள்ளலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு : நாளுக்கு நாள் டிஜிட்டல் பேமென்ட் முறை மேம்பட்டு வரும் இந்த நிலையில், கூகுள் பே, போலவே வாட்ஸ் பேயும் விரைவில் வரப்போகிறதாம்.
ஆமாங்க.. வாட்ஸ்அப் பே நடப்பு ஆண்டின் 2019 இறுதியில் வெளியாகும் என அந்த நிறுவனத்தின் தலைவர் கேத்கார்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் UPI அடிப்படையிலான பணம் செலுத்தும் சேவையை இந்தியாவில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்கிறது. மேலும் டிஜிட்டல் பேமண்ட் முறைகளுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் தான் வாட்ஸ்அப் பே வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

டிஜிட்டல் பேமென்டு பரிவர்த்தனைக்கு மாறி வரும் மக்கள்

டிஜிட்டல் பேமென்டு பரிவர்த்தனைக்கு மாறி வரும் மக்கள்

கூகுள் பே மற்றும் யுபிஐ போன்ற இ-வாலட்கள் போல, வாட்ஸ் அப் நிறுவனமும் வாட்ஸ் அப் பே என்ற பெயரில் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தாண்டு இந்தியாவில் துவக்க உள்ளதாம். நாளுக்கு நாள் பொருட்களுக்கு காசு கொடுத்து பொருட்களை வாங்கும் போக்கு சிறிதுசிறிதாக குறைந்து வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடம், கூகுள் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகமாக உள்ளது.

400 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்

400 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்

இந்தியாவில் பேஸ்புக்கிற்கு 400 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களை மற்ற இ-வாலட்களை பயன்படுத்துவதில் இருந்து தன் பக்கம் திருப்ப வாட்ஸ்அப் தீவிரமாக உள்ளது. இதன் மூலம் பேடிஎம்மின் 230 மில்லியன் வாடிக்கையாளர்களை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் பெண்கள் தொழில் முனைவோருக்கான திட்டங்களை வகுக்க வாட்ஸ் அப் நிறுவனமும் கைகொடுக்கிறது. இந்த நிலையிலேயே இது தொடர்பாக நடந்த கருத்தரங்கில் பங்கேற்க பெங்களூர் வந்தார் வாட்ஸ்அப் நிறுவனத்தின் சர்வதேச தலைவர் வில் கேத்கார்ட்.

எல்லாவித பாதுக்காப்புடனும் இந்த சேவையை கொண்டு வருவோம்!
 

எல்லாவித பாதுக்காப்புடனும் இந்த சேவையை கொண்டு வருவோம்!

கேத்கார்ட் இது குறித்து கூறுகையில் வாட்ஸ்அப் பே பணப்பரிவர்த்தனை சேவையை துவக்க எல்லா விதமான பரிசோதனைகளையும் செய்து முடித்து விட்டோம். இந்தாண்டு இந்த சேவையை அமல்படுத்துவோம். இந்தியாவில் எல்லாவித பாதுகாப்புடனும் இந்த சேவையை நடத்துவோம். இந்த நிலையில் மத்திய அரசு சில விதிகளை கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த எல்லா டிஜிட்டல் டேட்டாக்களும் இந்தியாவில் தான் பாதுகாக்க வேண்டும் என்ற விதியை நாங்களும் பின்பற்றுவோம்.

எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் பாதிபேர் வாடிக்கையாளர் ஆகலாம்!

எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் பாதிபேர் வாடிக்கையாளர் ஆகலாம்!

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எல்லா வித தேவைகளுக்கான டிஜிட்டல் அம்சங்களை நாங்கள் தருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு கேத்கார்ட் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்திய நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2023-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஓமிடியார் நெட்வொர்க் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) ஆகியவற்றின் அறிக்கையின்படி,ரூ.3 லட்சம் முதல் ரூ.75 கோடி வரை ஆண்டு வணிக வருவாய் வைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இந்த திட்டம் முழுமையாக அறிமுகமான பின், வாட்ஸ்அப் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்துவார்கள் எனவும் கூறியுள்ளது.

வாட்ஸ் அப் ஆப் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும்

வாட்ஸ் அப் ஆப் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும்

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க இந்தியாவின் ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார். இந்தியாவில் பேஸ்புக் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் பே-யைத் தொடங்கினால் இது அதிகளவிலான வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

வாட்ஸ்அப் விதிமுறைகளை பூர்த்தி செய்யும்

வாட்ஸ்அப் விதிமுறைகளை பூர்த்தி செய்யும்

நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு பூர்த்தி செய்துவிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WhatsApp Payments Launch by year end

WhatsApp Payments Launch by year end
Story first published: Sunday, July 28, 2019, 16:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X