ITR V படிவத்தை எல்லோரும் பெங்களூருக்கு அனுப்ப வேண்டுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லோரும் தங்கள் ITR V படிவத்தை சொந்தக் காசை செலவழித்து பெங்களூருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இன்று இந்த அஞ்சல் வேலையைக் குறைக்க வருமான வரித் துறையினர் E Verification என்று ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த வசதி மூலம் தங்கள் வருமான வரிப் படிவங்களை E Verify செய்யாதவர்கள் மட்டும் தங்கள் ITR V படிவத்தை பெங்களூருக்கு அனுப்ப வேண்டும்.

நான் என்னுடைய வருமான வரிப் படிவத்தை E Verification செய்துவிட்டேனா..? இதை எப்படிக் கண்டு பிடிப்பது..?

ITR V படிவத்தை எல்லோரும் பெங்களூருக்கு அனுப்ப வேண்டுமா..?

1. முதலில் Portal Login என்கிற ஆப்ஷனைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும் (https://portal.incometaxindiaefiling.gov.in/e-Filing/UserLogin/LoginHome.html?lang=eng)

2. பான் அட்டை எண், கடவுச் சொல் (பாஸ்வேர்ட்), கேப்சா வார்த்தைகள் எல்லாம் கொடுத்த பின் உள்ளே சைன் இன் ஆகும்.

3. டேஷ் போர்டில் உள்ளே வந்த உடன் View Returns / Forms என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை சொடுக்கினால் Select an Option எனக் கேட்கும். அதில் Income tax Returns-ஐ தேர்வு செய்து Submit கொடுக்கவும்.

4. அதன் பின் பான், நம்முடைய Assessment Year, எந்த வருமான வரிப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்திருக்கிறோம், எந்த தேதியில் சமர்பித்திருக்கிறோம், நாம் சமர்பித்திருப்பது ஒரிஜினலா அல்லது ரிவைஸ்ட் வருமான வரிப் படிவமா, வருமான வரிச் சட்டப் படி எந்த பிரிவின் கீழ் சமர்பித்திருக்கிறோம், நாம் வருமான வரி தாக்கல் செய்ததற்கான அத்தாட்சி எண் மற்றும் ஸ்டேட்டஸ் என வரிசையாக இடம் இருந்து வளமாக இருக்கும்.

5. அதில் ஸ்டேட்டஸைப் பார்க்கவும். அதில் ITR Processed என்று இருந்தால் நாம் E Verify செய்துவிட்டோம் என்று பொருள். அப்படி இல்லை என்றால் Pending for E verification என்று வரும். அப்படி வந்தால், நாம் நம்முடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி E verify செய்ய வேண்டும்.

6. ஒருவேளை இன்னும் சந்தேகம் தீரவில்லை என்றால், நம்முடைய Ack.No மீது ஒரு க்ளிக் செய்தால் E Verification செய்திருக்கிறோமா இல்லையா..? என்பதை தேதி வாரியாகக் காட்டி விடும். இதிலும் E Verification தொடர்பாக எதுவுமே இல்லை என்றால் நாம் E Verification செய்யவில்லை என்று பொருள்.

புதிய முறைப்படி ஆன்லைனிலேயே E Verification செய்வது சாலச் சிறந்தது. அப்படி ஒருவேளை ஆன்லைனில் E Verification செய்ய முடியவில்லை என்கிற பட்சத்தில் மட்டும் நம் ITR V-ஐ Income Tax Department, Centralized Processing Centre, பெங்களூருக்கு அனுப்பவும்.

ஏற்கனவே E Verification செய்தவர்கள் தங்கள் ITR V படிவத்தை மீண்டும் பெங்களூருக்கு அனுப்ப வேண்டாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

do all have to send their itr v to cpc bengaluru

do all have to send their itr v to cpc bengaluru
Story first published: Monday, August 12, 2019, 17:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X