8 வயதில் விபத்து.. 48 வயதில் இழப்பீடு.. வட்டியுடன் ரூ.1.42 கோடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : மும்பையை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஒருவன் கார் விபத்தில் தனது சுய நினைவை இழந்து விடுகிறான் பின் ஆறு மாதமாக கோமாவிலிருந்தவன் பின்பு சுய நினைவுக்கு வருகிறான்.

 

இந்த நிலையில் அவனது மூளை நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அவனது பெற்றோர் இன்சூரன்ஸ் அலுவலகத்தை நாடுகிறார்கள்.

தற்போது மீண்டும் 40 வருடங்கள் கழித்து இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சரி 40 வருஷம் கழித்து எதுக்கு என்கிறீர்களா? அதைப் பற்றித் தான் பார்க்க போகிறோம்.

கவலைபடாதீங்க.. தொழில்துறையை ஊக்குவிக்க விரைவில் புதிய திட்டம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!

கோமாவிற்கு சென்ற ஷா

கோமாவிற்கு சென்ற ஷா

மும்பையை சேர்ந்த விபத்துகுள்ளான ரூபேஸ் ஷா அளித்துள்ள மனுவில், கடந்த 1978ம் ஆண்டு ரூபேஷ் ஒரு சாலையை கடக்கும் போது, ஒரு கார் அவரை தாக்கியது. இந்த நிலையில் ஆறு மாதம் கோமா என்ற நிலைக்கு செல்கிறார் ஷா. ஆறு மாதங்களுக்கு பின்பு சுய நினைவுக்கு வரும் ஷா, நிரந்தரமாக மூளை பாதிப்புக்கு உள்ளாகிறார். அதோடு கடுமையான காயாங்களோடும் பாதிப்புகளோடும் இருந்துள்ளார்.

காப்பீடு வேணும்

காப்பீடு வேணும்

இந்த நிலையில், விபத்துகுள்ளான காரை இன்சூரன்ஸ் செய்த நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம், காப்பீடு வழங்குமாறு ஷாவின் பெற்றோர் அணுகிறார்கள். அப்போதைக்கு அவர்களின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இன்சூரன்ஸ் நிறுவனமோ மேல் முறையீட்டுக்காக நீதிமன்றத்தை நாடுகின்றனர். முதலில் உயர்நீதி மன்றத்துக்கும், பின்னர் உச்ச நீதி மன்றத்திற்கும் செல்கின்றனர்.

9% வட்டியுடன் இழப்பீடு
 

9% வட்டியுடன் இழப்பீடு

எனினும் ஷாவுக்கு ஆதரவாக, உயர் நீதி மன்றம் 39.92 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க கோரி, மும்பை உயர் நீதி மன்றம் தீர்பளித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2015ல் உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்தது. அதிலும் காப்பீட்டு தொகைக்காக ஷா என்றிலிருந்து கோரிக்கை வைத்தாரோ, அன்றிலிருந்து இழப்பீடு வழங்கும் வரை அவருக்கு 9 சதவிகித வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரூ.1.42 கோடி இழப்பீடு

ரூ.1.42 கோடி இழப்பீடு

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்புக்கு பிறகு ஷாவுக்கு 1.42 கோடி ரூபாய் இழப்பீடாக வட்டியுடன் கிடைத்தது. இதில் கேளிக்கை என்னவெனில் 30 சதவிகித வரி பிடித்தம் செய்தது போக மீதம் தான் ஷாவுக்கு கிடைத்துள்ளது. இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவெனில், ஷா வருமான வரி கணக்கு தாக்கல் செய்த போது, அவருக்கு இழப்பீடாக கிடைத்த பணத்திற்கு, கிடைத்த வட்டி பணத்துக்கும் வரி செலுத்தும் படியாக நோட்டிஸ் அனுப்பட்டு இருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷா மீண்டும் நீதிமன்றத்தை நாடுகிறார்.

வரி பிடிக்காதீங்க?

வரி பிடிக்காதீங்க?

இந்த நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாற்போல், ஷா தற்போது கிடைத்துள்ள புதிய அறிவிப்போடு சேர்த்து, ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட வரியும் பிடித்தம் செய்ய கூடாது என்றும் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையின் முதன்மைத் தொகைக்கு வரி விதிக்கப்படாது என்றும், எனவே அதற்கான வட்டி விதிக்கப்படக் கூடாது என்றும் வாதிட்டுள்ளார். எனினும் வருமான வரி துறையோ அதை ஏற்றுக் கொண்ட பாடாக இல்லை.

இது வருமானம் அல்ல இழப்பீடு

இது வருமானம் அல்ல இழப்பீடு

மோட்டார் விபத்து உரிமைகோரல் வழக்குகளில் வழங்கப்பட்ட வட்டி, உரிமைக் கோரல் மனுவின் தேதி முதல், மேலு முறையீட்டின் தீர்ப்பு வரை வரிக்கு தகுதியற்றதாக இருக்காது என்றும் நாங்கள் கருதுகிறோம். மேலும் ஒரு வருமானம் அல்ல என்றும் கருதப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மீண்டும் மதிப்பீடு செய்யுங்கள்!

மீண்டும் மதிப்பீடு செய்யுங்கள்!

இந்த நிலையில் வருமான வரித் துறை, ஷாவுக்கு அனுப்பிய இந்த நோட்டிஸ் தவறாக உள்ளது என்றும், இந்த நோட்டிசை திருப்பியும் அனுப்பியது. இந்த நிலையில் வருமான வரித்துறையிடம் இதை மீண்டும் மதிப்பீடு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income tax should not have been deducted from the interest on the accident compensation

Income tax should not have been deducted from the interest on the accident compensation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X