பொதுவாக 31 ஜூலை தான், வருமான வரிப் படிவங்களை சமர்பிக்க கடைசி தேதியாக இருக்கும்.
ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் பிரச்சனையால், வரி செலுத்துவது, வரிப் படிவங்களைச் சமர்பிப்பது என எல்லாவற்றுக்குமான கடைசி தேதிகளும் ஒத்திப் போய் இருக்கிறது.
வருமான வரி தொடர்பாக சில கழிவுகளைப் பெறவும், வருமான வரி தொடர்பான சில விஷயங்களைச் செய்து முடிக்கவும் 31 ஜூலை 2020 தான் கடைசி தேதி. எதை எல்லாம் இந்த 31 ஜூலைக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
2019 - 20 வரி செலுத்துதல்
2019 - 20 நிதி ஆண்டு காலத்துக்கு, நாமே கணக்கிட்டுச் செலுத்தும் வரி (Sef Asessment Tax) யாருக்காவது 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர்கள், தங்களின் மொத்த Sef Asessment Tax தொகையையும் 31 ஜூலை 2020-க்குள் செலுத்தி விட வேண்டும். இல்லை என்றால், செலுத்த வேண்டிய வரி தொகைக்கு, மாதம் 1 சதவிகிதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டி இருக்கும்.
2018 - 19 வரி தாக்கல்
நிதி ஆண்டு 2018 - 19 கால கட்டத்தில் சம்பாதித்த பணத்துக்கு, 31 மார்ச் 2020-க்குள் வருமான வரிப் படிவங்களைச் சமர்பிக்க வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்ததால், 31 ஜூலை 2020 வரை காலக் கெடுவை நீட்டித்து இருக்கிறது அரசு.
எப்போதுமே முடியாது பாத்துக்குங்க
யாராவது 2018 - 19 நிதி ஆண்டுக்கு இன்னமும் வருமான வரிப் படிவத்தை சமர்பிக்கவில்லை என்றால், அடுத்த 2 நாட்களுக்குள் சரியாக வரிப் படிவங்களை நிரப்பி சமர்பித்துவிடுங்கள். 2018 - 19 நிதி ஆண்டுக்கான வருமான வரிப் படிவத்தை, இப்போது இந்த 2 நாட்களுக்குள் நீங்கள் சமர்பிக்கவில்லை என்றால், இனி எப்போதும் சமர்பிக்க முடியாது.
திருத்தப்பட்ட வரிப் படிவம் 2018 - 19
2018 - 19 நிதி ஆண்டுக்கான வருமான வரிப் படிவத்தை நிரப்பி சமர்பித்துவிட்டீர்கள். ஆனால் அதில் தவறு இருப்பது தெரிய வருகிறது. ஆக 2018 - 19 நிதி ஆண்டுக்கு, புதிதாக திருத்தப்பட்ட வருமான வரிப் படிவத்தை சமர்பிக்க 31 ஜூலை 2020 தான் கடைசி தேதி. இந்த வாய்ப்பை தவறவிட்டால் அதன் பின், 2018 - 19 நிதி ஆண்டுக்கு திருத்தப்பட்ட வருமான வரிப் படிவத்தை சமர்பிக்க வாய்ப்பு கிடைக்காது.
வரிக் கழிவுகள் & சலுகைகள்
லைஃப் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ், இ எல் எஸ் எஸ் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், தேசிய சேமிப்புப் பத்திரம், கிஷான் விகாஸ் பத்திரம்... என பல வரிக் கழிவு பெறும் முதலீடுகளில் இருக்கின்றன. 2019 - 20 நிதி ஆண்டில் நீங்கள் வரிக் கழிவு பெற ஏதாவது முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றால் அதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2020.
சிறு சேமிப்புத் திட்டங்கள்
அஞ்சலக ஆர்டி திட்டங்களில், மாதா மாதம் பணம் செலுத்துபவர்கள், மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான தவணைகளை 31 ஜூலை 2020-க்குள் எந்த வித கூடுதல் கட்டணங்களும் இன்றி செலுத்தலாம்.
25 மார்ச் 2020 முதல் 30 ஜூன் 2020-க்குள் 10 வயதை அடைந்த பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டக் கணக்கை 31 ஜூலை 2020-க்குள் தொடங்கலாம்.
டிடிஎஸ் & டிசிஎஸ் வரிகள்
வருமான வரித் துறையினரிடம், டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் தொடர்பான ஸ்டேட்மெண்ட்களைச் சமர்பிக்க 31 ஜூலை 2020 தான் கடைசி தேதி. ஆக டிடிஎஸ் பிடித்தம் செய்து இருப்பவர்கள் அல்லது டிசிஎஸ் பிடித்தம் செய்து இருப்பவர்கள் இந்த 31 ஜூலைக்குள் ஸ்டேட்மெண்டை சமர்பிக்கவும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications