பர்சனல் லோன் வாங்க நினைக்கிறீங்களா.. எங்கு குறைவான வட்டி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலக்கட்டத்தில் வீட்டுக் கடன், வாகன கடன், நகைக் கடன் என பல கடன் திட்டங்கள் இருந்தாலும், பெரும்பாலும் அதிக, விரும்புவது தனி நபர் கடன் எனும் பர்சனல் லோன் தான்.

ஆவணங்கள் குறைவு, விரைவில் கிடைக்கும், எளிதில் கிடைக்கும் என பல சாதகமான விஷயங்கள் உள்ளன. இதனால் வட்டி விகிதம் அதிகமாக இருந்தாலும் கூட, பலரும் மற்ற திருமணம், கல்வி, ஏன் வீடு கட்டவோ அல்லது புதுபிக்கவோ கூட பர்சனல் கடனை வாங்குகின்றனர்.

அப்படி வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி? எங்கு குறைவான வட்டி என்பதை பலரும் யோசித்திருப்போமா என்றால் நிச்சயம் இல்லை.

குறைந்த வட்டியில் வாகன கடன் வாங்க 5 வழிகள்.. என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! குறைந்த வட்டியில் வாகன கடன் வாங்க 5 வழிகள்.. என்னன்னு தெரிஞ்சுக்கோங்க!

 பர்சனல் லோன்

பர்சனல் லோன்

பொதுவாக பர்சனல் லோனை பொறுத்தவரையில் உங்களது வங்கி பரிவர்த்தனை, கடன் மதிபெண் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு வட்டி விகிதம் இருக்கும். எனினும் வங்கிகள் குறைந்தபட்ச விகிதம் எவ்வளவு? அதிகபட்ச விகிதம் எவ்வளவு என்பதையும் பார்க்க வேண்டும்.

எங்கு எவ்வளவு வட்டி?

எங்கு எவ்வளவு வட்டி?

ஐடிபிஐ வங்கி - 25,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையில் - கடன் கால அவகாசம் - 12 - 60 மாதங்கள் - வட்டி விகிதம் - 8.90% - 14%

பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.10 லட்சம் வரையில் கடன் - 60 மாதம் வரை அவகாசம் - 9.33 - 15.35% வரையில் வட்டி விகிதம்

இந்தியன் வங்கி - 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் வரையில் கடன் - 12 - 60 மாதங்கள் அவகாசம் - 9.40% - 9.90% வரையில் வட்டி

கரூர் வைஸ்யா வங்கி - 10 ரூபாய் வரையில் கடன் - 12 - 60 மாதங்கள் அவகாசம் - 9.40% - 19%

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 25,000 ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை - 06 - 72 மாதங்கள் - வட்டி விகிதம் 9.80% - 12.80%

வட்டி நிலையானதா?
 

வட்டி நிலையானதா?

கடன் வாங்கும்போது கொடுக்கப்படும் வட்டி நிலையானதா? அல்லது மாறக்கூடியதா என்பதை கேட்டுக் கொள்ளுங்கள். இது எம் சி எல் ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், ரெப்போ விகிதம் மாறும்போது, வட்டியிலும் மாற்றம் இருக்கலாம். இதனால் மாத தவணை தொகையில் மாற்றம் இருக்கலாம். ஏற்கனவே மற்ற கடன்களை காட்டிலும் இதில் வட்டி அதிகம்.

யார் கடன் வழங்குகிறார்கள்?

யார் கடன் வழங்குகிறார்கள்?

பர்சனல் லோனை வங்கிகள், நிதி நிறுவனங்கள் என பலவும் வழங்குகின்றன. இதற்கும் விதிக்கப்படும் கட்டணம் வட்டி விகிதத்தினையும் பார்த்து கடன் வாங்கிக் கொள்ள பழகுங்கள். அதே போல கடனுக்கான கால அவகாசத்தினையும் அதிகமாக எடுக்க வேண்டாம். இதுவும் உங்கள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். மாத தவணை தொகையையும் அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 banks offering lowest personal loan interest rates

Although there are many types of debt consolidation today, the most sought after items are usually the personal loans. How much interest is there on such a purchase loan? In this post we are going to look at where the low interest is.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X