புதுசா வாகன இன்சூரன்ஸ் வாங்க போறீங்களா.. அப்படின்னா இந்த 5 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் விழாக்கால பருவம் என்பது களைகட்டத் தொடங்கி விட்டது. பலரும் தங்களது ஷாப்பிங்கினை ஏற்கனவே தொடங்கி விட்டனர். வழக்கம்போல இந்த விழாக்கால பருவத்திலும் பல சலுகைகள், தள்ளுபடிகள் என எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பல வாகன நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக தள்ளுபடி சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.

அப்படி ஒரு சலுகையினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்களா? புதியதாக கார் வாங்க அல்லது வேறு ஏதேனும் வாகனம் வாங்க இது தான் சிறந்த வழி.

 புதிய கார் வாங்குகிறீங்களா?

புதிய கார் வாங்குகிறீங்களா?

பொதுவாக புதிதாக ஒரு கார் வாங்கும்போது நாம் பார்க்கும் விஷயங்கள், அது என்ன மாடல், அதன் விலை என்ன? அதன் இன்ஜின் எந்த வகை, அதன் திறன், விலை என பல விவரங்களை தெரிந்து கொள்வோம். ஆனால் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய கார் இன்சூரன்ஸ் பற்றி கேட்க மாட்டோம். சொல்லப்போனால் அதனை பலரும் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவே மாட்டோம்.

 அவசியமானது?

அவசியமானது?

ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் இன்சூரன்ஸ் உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்சூரன்ஸ் சரியாக உங்கள் வாகனத்திற்கு சரியாக இல்லை எனில், அது உங்களுக்கு பிரச்சனை தான். ஆக இதனையும் கார் வாங்கும்போது முக்கிய விஷயமாக கருத்தில் கொண்டு எடுப்பது அவசியமான ஒன்று. அப்படி கார் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய 5 விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 ஒப்பிட்டு பாருங்கள்

ஒப்பிட்டு பாருங்கள்

இன்றைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் பற்றிய ஆன்லைன் தளங்கள் ஏராளம் உள்ளன. ஆக அதில் உங்களது பாலிசிகளை முதலில் ஒப்பிட்டு பார்ப்பது அவசியமான ஒன்று. இதன் மூலம் நீங்கள் சிறந்த பாலிசிகளை பெற முடியும். எந்த பாலிசி உங்களுக்கு ஏற்றது. உங்களின் தேவை என்ன? என்பதற்கு ஏற்ப உங்களால் தேர்வு செய்ய முடியும்.

சலுகையில் மயங்காதீர்கள்

சலுகையில் மயங்காதீர்கள்

கார் விற்பனையாளார்கள் நாங்கள் இலவசமாக இன்சூரன்ஸ் செய்து தருகிறோம் என்ற சலுகையை கொடுப்பார்கள். ஆனால் உங்கள் தேவைகளை எல்லாம் அந்த இன்சூரன்ஸ் பூர்த்தி செய்கிறதா? என்றால் நிச்சயம் இருக்காது. ஆக உங்களுக்கு தேவையானது நீங்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முதன் முறையாக கார் இன்சூரன்ஸ் எடுப்பவர்கள் இதில் மிக கவனமாக இருக்க வேண்டும் .

ஒரே இன்சூரன்ஸ் அனைத்துக்கும் செட் ஆகாது?

ஒரே இன்சூரன்ஸ் அனைத்துக்கும் செட் ஆகாது?

கார் விற்பனையாளர்கள் ஒரே இன்சூரன்ஸ் பாலிசியினை தான் பொதுவாக அனைத்து வாகனங்களுக்கும் பரிந்துரை செய்வார்கள். இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. ஆக உங்களுக்கு என்ன தேவையோ அதனை பெற முடிவு செய்யுங்கள், நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உங்கள் தேவையினை கூறி, அதற்கேற்ப வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையற்றதற்காக பணம் செலுத்தாதீர்கள்.

எப்படி எடுக்க போகிறீர்கள்?

எப்படி எடுக்க போகிறீர்கள்?

பொதுவாக புதியதாக கார் வாங்கும்போது விற்பனையாளர்களே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் பாலிசியினை போட கூறுவார்கள். அப்படியும் நாம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இல்லையேல் நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தினை அணுகியும் போட்டுக் கொள்ளலாம். எனினும் கார் விற்பனையாளார்கள் மூலமே போவது உங்களுக்கு சிறந்த வாய்ப்பினை கொடுக்கலாம். அவர்களிடம் சலுகையும் கிடைக்கும். பிரீமியம் குறைவாக இருக்கும். எனினும் அந்த பாலிசி உங்களுக்கு ஏற்றதா? என்பதை நீங்கள் பார்ப்பது அவசியமான ஒன்று.

சொல்லப்படாத உண்மைகள்

சொல்லப்படாத உண்மைகள்

பொதுவாக டீலர்கள் ஒரு விலையை நிர்ணயம் செய்து சில பாலிசியினை வைத்திருப்பார்கள். அதில் ஏதேனும் ஒன்றை வாடிக்கையாளார்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். பொதுவாக டீலர்கள் அவர்களுக்கு எதில் கமிஷன் தொகை கிடைக்குமோ அது போன்ற பாலிசிகளை நிறைய வைத்திருப்பார்கள். இதன் சுமையும் வாடிக்கையாளர்கள் தலையில் அரைக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்திய சட்டங்கள் ஒரு வாகனம் ரோட்டில் செல்லும்போது இன்சூரன்ஸ் அவசியம் என்பதை கட்டாயமாக வைத்துள்ளது. எனினும் அதனை கார் டீலரிடம் வாங்க வேண்டியது என்பது கட்டாயமாக்கப்படவில்லை.

irdai கருத்து?

irdai கருத்து?

irdai ஒரு வாடிக்கையாளர் எங்கு வேண்டுமானாலும் இன்சூரன்ஸ் வாங்கிக் கொள்ளலாம். அதற்கான உரிமைகள் அவர்களுக்கு உண்டு என்கிறது. ஆக வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலே கூட ஒப்பிட்டுபார்த்து உங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளலாம். இதனால் பிரீமியமும் சேமிக்க முடியும். ரீனிவள் மற்றும் செட்டில்மெண்ட் என பல பிரச்சனைகளையும் எளிதில் பெற்றுக் கொள்வதையும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

 என்னவெல்லாம் கவர் ஆகும்?

என்னவெல்லாம் கவர் ஆகும்?

பொதுவாக பல வாகன இன்சூரன்ஸ் பாலிசிகளும் அனைத்து வகையான அம்சங்களையும் உள்ளடக்குவதில்லை. ஆக அவற்றை சரியாக தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஆட் ஆன் திட்டங்களை சேருங்கள். உதாரணத்திற்கு சில திட்டங்களில் இன்ஜின்கள் கவர் ஆகியிருக்காது. இதனால் உங்கள் கார் இன்ஜின் எதுவும் பிரச்சனை எனில் அதனை கையில் இருந்து செலுத்த வேண்டியிருக்கும்.

ஆட் ஆன் திட்டங்களை யோசிக்கலாம்

ஆட் ஆன் திட்டங்களை யோசிக்கலாம்

ஆக நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் வாங்கும்போது அதனை படித்து முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு, உங்களின் வாகனத்திற்கு முழுமையாக கவர் ஆகவில்லை எனில் அதற்கேற்ப ஆட் ஆன் திட்டங்களை சேர்த்துக் கொள்ளலாம். இது கார் என்று மட்டும் அல்ல, அனைத்து வகையான வாகன இன்சூரன்ஸ்-களுக்கு பொருந்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 key things to remember before buying a new car insurance and other auto insurances

When buying a new car, what model is it and how much does it cost? Let's know many details like its engine type, its capacity, price. But we will not ask about insurance. You need to know about it completely.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X