கவனிக்க வேண்டிய முக்கிய 5 விஷயங்கள்.. டாப் அப் லோன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நீங்கள் வீட்டுக் கடன் தொகைக்கு மேல் மற்றும் அதற்கு மேல் கூடுதல் கடனை எடுக்கும்போது, ஒரு டாப் கடன் வழங்கப்படுகிறது.

பொதுவாக கூடுதல் நிதி தேவைப்படுபவர்கள் இந்த டாப் அப் கடனை அணுகுவார்கள். இந்த டாப் அப் கடனுக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை.

அதோடு டாப் கடன்கள் உங்களது வீட்டுக் கடனை போலவே நீண்டகால தவணைக் காலத்தினை பெறுகிறது. இது தவணையை குறைக்க உதவுகிறது. இதனால் இஎம்ஐயும் குறைவாக இருக்கும்.

யார் தகுதியானவர்கள்?

யார் தகுதியானவர்கள்?

இந்த டாப் அப் லோன்களுக்கு 12 மாத தவணைகளை தவறாமல் கட்டிய வாடிக்கையாளர்கள் தான் தகுதியானவர்கள். இது உங்களது இஎம்ஐ எண்ணிக்கையை பொறுத்து வழங்கப்படும். உதாரணத்திற்கு 12 மாத இஎம்ஐ தவணைகளுக்கு பிறகு, கடன் வழங்குபவர் அசல் கடனில் 10% கொடுக்கலாம். 24 மாத தவணைக்கு பிறகு 20% தகுதியுடையவராக இருக்கலாம். எனினும் இது ஒவ்வொரு வங்கியை பொறுத்து மாறுபடும்.

கால அவகாசம் எவ்வளவு?

கால அவகாசம் எவ்வளவு?

டாப் அப் கடன்களும் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது போன்றது தான். கடன் வாங்குபவர் வீட்டுக் கடன் தொடர்பான ஆவணங்கள், முகவரி ஆவணம் மற்றும் வருமான ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். உங்களது கடனை திரும்ப செலுத்த வேண்டிய காலம் வங்கிக்கு வங்கி மாறுபடும். உதாரணத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 30 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்குகிறது. இதே நேரம் இந்தியன் வங்கி 10 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்குகிறது.

வட்டி விகிதம் எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

இதே பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் கடன் தொகையையும், வயதையும் அடிப்படையாக கொண்டு அவகாசத்தினை வழங்குகின்றன. எனினும் இதில் வீட்டுக் கடனை விட வட்டி விகிதங்கள் இந்த டாப் அப் கடனுக்கு சற்று அதிகமாக இருக்கலாம். இது கடன் வாங்குபவர்களின் சுயவிவரத்தினை பொறுத்து இருக்கலாம். உதாரணத்திற்கு ஆக்ஸிஸ் வங்கியில் டாப் அப் கடனுக்கான வட்டி விகிதம் 8.65%ல் தொடங்குகிறது. இதே பைசா பஜார் தரவின் படி, எஸ்பிஐயில் 7.50% - 9.80% வரை உள்ளது.

அதிகபட்ச டாப் அப் கடன் எவ்வளவு?

அதிகபட்ச டாப் அப் கடன் எவ்வளவு?


இதுவும் வங்கிகளை பொறுத்து மாறுபடும். ஏனெனில் சில வங்கிகள் அதிகபட்ச தொகை என நிர்ணயம் செய்துள்ளன. உதாரணத்திற்கு எஸ்பிஐ-யில் அதிகபட்சம் வரம்பு என்பது இல்லை. இதே இந்திய வங்கியில் அதிகபட்சம் 60 லட்சம் ரூபாயும், இதே ஆக்ஸிஸ் வங்கியில் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

வரி சலுகையும் உண்டு

வரி சலுகையும் உண்டு

உங்கள் வீட்டை பழுது பார்ப்பதற்காக அல்லது புதுப்பிக்க அல்லது கூடுதல் அறையை நிர்மாணிப்பதற்காக நீங்கள் டாப் அப் கடன் எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் வரி சலுகைகளையும் பெறலாம்.
சில வங்கிகள் இந்த டாப் அப் கடனுக்கு சில சலுகைகளை அளிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 things to know before taking a top up on home loan, check details

Top up home loan updates.. 5 things to know before taking a top up on home loan, check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X