ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்.. இனி இதற்கு அபராதம் இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் முதலீடுகளில் வங்கிக்கு தான் எப்போதும் முதலிடம். ஏனெனில் வட்டி மிக குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கம் இல்லை. வருமானம் குறைவாக இருந்தாலும் நிரந்தர வருமானம் உண்டு. இதனால் தான் இன்றைய காலக்கட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது.

 

எனினும் இதில் ஒரு பிரச்சனை என்னவெனில் பிக்ஸட் டெபாசிட்டுகள் முதிர்வு காலத்திற்கு பின்பு தான் கிடைக்கும்.

ஆனால் சில வங்கிகளில் முன்கூட்டியேவும் எடுக்கும் வாய்ப்புண்டு. ஆனால் அதற்கும் அபாரதம் செலுத்த வேண்டியிருக்கும்.

அபராதம் உண்டா?

அபராதம் உண்டா?

இப்படி முன் கூட்டியே வித்டிராவல் செய்யப்படும் தொகைக்கு வட்டியும் குறைவாக இருக்கும். எனினும் இன்றைய காலகட்டத்தில் சில வங்கிகள் எந்தவித அபராதமும் விதிப்பதில்லை. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஆக்ஸிஸ் வங்கி தான்.

அபராதம் இல்லை

அபராதம் இல்லை

ஆக்ஸிஸ் வங்கியின் சில்லறை வாடிக்கையாளர்கள் டிசம்பர் 15க்கு பிறகு டெபாசிட் செய்த ரீடெயில் டெர்ம் டெபாசிட்டுக்களுக்கு (retail term deposits) முன்கூட்டியே மூடுவதற்கான அபராதத்தினை நீக்குவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த வாடிக்கையாளர்கள் தீடீர் தேவை பற்றி கவலைபட வேண்டியதில்லை. இது நீண்டகால சேமிப்புக்கும் வழிவகுக்கும் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கு அபராதம் உண்டு?
 

இதற்கு அபராதம் உண்டு?

ஆக்ஸிஸ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பானது அனைத்து வகையான பிக்ஸட் டெபாசிட் மற்றும் தொடர்சியான வைப்புகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது. இதே 2 வருட காலத்திற்கு மேலாக பிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்டால், அதனை 15 மாதங்களுக்கு பின்பு எடுக்கப்பட்டால் அபராதம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

எவ்வளவு வட்டி விகிதம்?

எவ்வளவு வட்டி விகிதம்?

ஆக்ஸிஸ் வங்கி இந்தியாவின் மூன்றாவது தனியார் வங்கியாகும். இவ்வ்வங்கியில் வட்டி விகிதம் 2.5% முதல் 5.50% வரை வழங்கப்படுகிறது இந்த டெபாசிட்டுகளுக்கான கால வரம்பு 7 நாட்கள் முதல் 10 வருடம் வரையில் வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு 2.5% முதல் 6.05% வரை வட்டி வழங்கப்படுகிறது.

புதிய சலுகை

புதிய சலுகை

இதோடு மற்றொரு புதிய அம்சம் என்னவெனில் டெர்ம் டெப்பாசிட்டில் 25% வரை திரும்ப பெறுவதற்கு எந்த அபராதமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் என பல அம்சங்களையும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Axis bank announces no penalty on premature closure of FDs

Axis bank updates.. Axis bank announces no penalty on premature closure of FDs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X