அக்டோபர் 1 முதல் இந்த இரண்டு வங்கிகளின் செக் புக் செல்லாது.. பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்டோபர் 1 முதல் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளின் பழைய காசோலை புத்தங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.

இது பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை இணைக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த விதிகள் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 அமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..! அமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..!

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளார்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலை புத்தகத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும், புதிய புத்தகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஐஎஃப்எஸ்சி (IFSC code) கோடு மற்றும் எம் ஐ சி ஆர் கோடு (MICR code) உடன் வரும் எனவும் தெரிவித்துள்ளது.

புதிய செக் புக் எப்படி பெறுவது?

புதிய செக் புக் எப்படி பெறுவது?

மேற்கொண்டு புதிய காசோலைப் புத்தகத்தை சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை சென்று அணுகலாம் எனவும் தனது அறிக்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமாக தளங்களிலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ கட்டணமில்லா கஸ்டமர் கேர் நம்பரான 18001802222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கட்டண சலுகை

கட்டண சலுகை

மேலும் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி வரவிருக்கும் விழாக்கால பருவத்தையொட்டி, இதனுடன் கூடுதலாக சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. அது பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் பண்டிகையின் ஒரு பகுதியாக சில சில்லறை பொருட்களின் மீதான சேவை கட்டணங்களையும், செயல்பாட்டு கட்டணங்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

வீட்டுக் கடன்- கார் கடன்

வீட்டுக் கடன்- கார் கடன்

இவற்றோடு வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் 6.60% ஆகவும், கார் கடனுக்கான வட்டி விகிதம் 7.15%ல் இருந்து ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு புதிய வாடிக்கையாளர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்திய வாரங்களாகவே தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் என போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன.

 

இந்த நிலையில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியும் வட்டியை குறைத்துள்ளது. பஞ்சாப் வங்கியின் இந்த சலுகைகள் டிசம்பர் 31 2021 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் வங்கியின் அறிவிப்பு

அலகாபாத் வங்கியின் அறிவிப்பு

அலகாபாத் வங்கியும் அடுத்த மாதம் முதல் கொண்டு தனது வாடிக்கையாளார்களின் காசோலைப் புத்தகங்கள் மற்றும் எம் ஐ சி ஆர் குறியீட்டை செல்லாது என அறிவித்துள்ளது. புதிய செக் புக் மற்றும் புதிய சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள கிளையில் சென்று, புதிய காசோலை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதோடு வாடிக்கையாளர்கள் இணைய வங்கியின் மூலமாகவும், மொபைல் பேங்கிங் மூலமாகவோ கூட இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் அறிவிப்பு

ட்விட்டரில் அறிவிப்பு

இது குறித்து இவ்வங்கிகள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளன. ஆக உங்களது செக் புக் மற்றும் IFSC கோடு என செல்லாமல் போகும் முன்பே சென்று மாற்றிக் கொள்ளலாம். இல்லையெனில் உங்களது இணைய வங்கி பரிவர்த்தனைகள் கூட பாதிக்கப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank alert! Cheque book of these banks to become invalid from October 1,2021

Bank latest updates.. Bank alert! Cheque book of these banks to become invalid from October 1,2021
Story first published: Thursday, September 23, 2021, 14:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X