ஆர்பிஐ அறிவிப்பின் எதிரொலி.. தடாலென வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 21 நாள் ஊரடங்கினை அறிவித்துள்ளது.

 

இதனையடுத்து வீட்டிற்குள் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில், பெரும்பாலான மக்களின் கோரிக்கை, இஎம்ஐ, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க வேண்டும் என பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதன் எதிரொலியாக மத்திய ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 27 அன்று வங்கிகளுக்கான கடன் விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் குறைந்தது. மேலும் ரிவர்ஸ் ரெபோ விகிதத்தினையும் 0.90% குறைத்துள்ளது.

ஆர்பிஐயின் அதிரடி நடவடிக்கை

ஆர்பிஐயின் அதிரடி நடவடிக்கை

ரெபோ விகிதம் குறைந்துள்ளதால் வங்கிகளுக்கு திரும்ப செலுத்தும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மத்தியில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் மக்கள் எதிர்பார்த்ததைப் போலவே இஎம்ஐ செலுத்த மூன்று மாத காலம் அவகாசம் வழங்க அனுமதி கொடுத்தது.

கடன்களுக்கான வட்டி குறைப்பு

கடன்களுக்கான வட்டி குறைப்பு

இந்த நிலையில் ஆர்பிஐ அறிவிப்புக்கு இணங்க பேங்க் ஆப் பரோடா தனது சில்லறை மற்றும் தனி நபர், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தினை 7.25% ஆக குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது மார்ச் 28ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி குறையலாம்
 

வட்டி குறையலாம்

பேங்க் ஆப் பரோடா ரெபோ விகிதத்துடன் இணைகப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4.40% ஆக குறைந்துள்ளது. இது முன்பு 5.15% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அனைத்து வகையான தனி நபர் கடன், சில்லறை கடன்கள், எம்எஸ்எம்இ கடன், அடமான சொத்துக் கடன் என அனைத்துக்கும் வட்டி விகிதம் குறையலாம் எனவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளார்களுக்கு பலன்

வாடிக்கையாளார்களுக்கு பலன்

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கையின் படி, வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இதன் பயன் அளிக்குமாறு பேங்க் ஆப் பரோடா தனது கடன்களுக்கான விகித்தினை ரெபோ விகிதத்துடன் இணைத்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் சலுகையை மக்களுக்கு நேரடியாக மக்களுக்கு அளிக்கும் விதமாக ரெபோ விகிதத்துடன் கடன் விகிதம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்பிஐயின் பலனை உடனடியாக பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank of Baroda cut credit rates by 75 bps to 7.25%

Bank of Baroda slashed the interest rate on loans for retail, personal and Micro Small and Medium Enterprises to 7.25% percent with effect from March 28.
Story first published: Monday, March 30, 2020, 14:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X