இன்று முதல் அமலுக்கு வந்துள்ள பாசிட்டிவ் பே சிஸ்டம்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேங்க் ஆப் பரோடா இன்று முதல் தனது பாசிட்டிவ் பே சிஸ்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளது.

 

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த பாசிட்டிவ் பே சிஸ்டத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.

இந்த பாசிட்டிவ் பே சிஸ்டத்தினை கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது காசோலைகள் மூலம் நடக்கும் மோசடிகளை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாசிட்டிவ் பே என்றால் என்ன?

பாசிட்டிவ் பே என்றால் என்ன?

ரிசர்வ் வங்கி அறிவித்த பாசிட்டிவ் பே என்பது, அதிக மதிப்புடைய செக்கில் கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியானவையா? என்று மறுபரிசீலனை செய்யப்படுவதாகும். இதில் செக் கொடுப்பவர், செக்கின் விவரங்களை வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக செக் நம்பர், செக் தேதி, செக் யாருக்கு கொடுக்கப்பட்டதோ அவருடைய பெயர், அக்கவுண்ட் நம்பர், எவ்வளவு தொகை என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

இன்று முதல் அமல்

இன்று முதல் அமல்

பேங்க் ஆப் பரோடா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று முதல் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட செக்-கள் மறுபரீலனை செய்யப்பட்டு, அதன் பின்னரே நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என தெரிவித்துள்ளது.

பரிசீலனை செய்யலாம்
 

பரிசீலனை செய்யலாம்

பேங்க் ஆப் பரோடாவின் நடைமுறைப்படி, இன்று முதல் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகைகள், செக் மூலமாக பரிமாற்றம் செய்யப்படும்போது பரிசீலனை செய்யப்படலாம்.

இதில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை மாற்றம் செய்யவும், நீக்கவும் ஆப்சன் இல்லை.

செக்கினை நிறுத்தி வைக்கலாம்

செக்கினை நிறுத்தி வைக்கலாம்

வாடிக்கையாளர்கள் செக்கினை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முன்பு, அதனை எந்த நேரத்திலும் நிறுத்தி வைக்கலாம்.

செக் கொடுத்த வாடிக்கையாளர்கள் கொடுத்த விவரமும், வங்கியில் கொடுக்கப்படும் வாடிக்கையாளர் விவரமும் பொருந்தினால் மட்டுமே காசோலை செயல்படுத்தப்படும். இல்லையெனில் நிறுத்தப்படும். அதேபோல போதுமான நிதி மற்றும் கையெப்பம் போன்றவை இருக்க வேண்டும்.

நேரடியாகவும் விவரங்களை அப்டேட் செய்யலாம்

நேரடியாகவும் விவரங்களை அப்டேட் செய்யலாம்

மேலும் சமர்பிக்கபிட்ட விவரங்கள் தினசரி 6 மணிக்குள் சரிபார்க்கப்படும். அதன் பிறகு அடுத்த அமர்வில் தான் செயல்படுத்தப்படும். அதன் பிறகு தான் உங்களது செக் கிளியரிங் செய்யப்படும்.

வங்கி வேலை நேரங்களில் கிளைகள் மூலம் உங்களது விவரங்களை உறுதிப்படுத்தலாம்.

மற்ற ஆப்சன்கள்

மற்ற ஆப்சன்கள்

இதே மற்ற ஆப்சன்கள் மூலம் நீங்கள் 24 மணி நேரமும் உங்களது காசோலை குறித்தான விவரங்களை அனுப்பலாம்.

பாசிட்டிவ் பே-வுக்கான விவரங்கள் சமர்பிக்கப்பட்டவுடன், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பப்படும்.

மூன்று மாதத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும்

மூன்று மாதத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும்

வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட செக்கினை செயல்படுத்த போதுமான தொகை கணக்கில் உள்ளதா என்பது வரை அப்டேட் செய்ய வேண்டும்.

செக்கில் தேதியிடப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதத்திற்கும் மேல் ஆகி விட்டால், ஏற்றுக் கொள்ளப்படாது.

மோசடிகள் குறையும்

மோசடிகள் குறையும்

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள் காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், குறிப்பாக வங்கி மோசடிகளைத் தடுப்பதற்கும் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. உண்மையில் இதன் மூலம் பல மோசடிகள் தடுக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதனை பற்றி தெரிந்து கொள்ள டோல் ப்ரீ எண்ணான 18002584455/ 18001024455 என்ற எண்ணினை தொடர்புகொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank of baroda’s new rule for cheque payments from today: key things to know

New rule for cheque payments.. Bank of baroda’s new rule for cheque payments from today: key things to know
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X