விழாக்கால பருவத்தில் இப்படி ஒரு சலுகையா.. இது ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய மாதங்களாகவே வங்கிகள் தொடர்ந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது கடன் வாங்கியோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

குறிப்பாக இந்த விழாக்கால சமயத்தில் இன்னும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த காலகட்டத்திலும் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வீட்டுக் கடன் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது.

 சவுதி அரேபியாவின் முக்கிய முடிவு.. இந்தியர்களுக்கு பாதிப்பா? சவுதி அரேபியாவின் முக்கிய முடிவு.. இந்தியர்களுக்கு பாதிப்பா?

பயனுள்ள நடவடிக்கை

பயனுள்ள நடவடிக்கை

இது விழாக்கால பருவத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒரு விஷயமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கியின் இந்த நடவடிக்கையானது வாடிக்கையாளர்கள், மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது. பேங்க் ஆப் மகராஷ்டிரா வங்கியின் இந்த நடவடிக்கையின் மூலம், வீட்டுக் கடன், தனிநபர் கடன் என வட்டி குறைவாக பெற வழிவகுக்கலாம்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

இந்த சலுகையானது அக்டோபர் 17, 2022முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இனி பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் இனி வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.30% ஆக இருக்காது. 30 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், 8% வட்டி விகிதத்தில் பெறலாம். இதன் மூலம் மாத தவணை விகிதமும் குறையலாம்.

தனி நபர் கடன்

தனி நபர் கடன்

தனி நபர் கடனுக்கான வட்டி விகிதமானது 11.35%ல் இருந்து, 8.9% ஆக குறைந்துள்ளது. 245 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதமானது குறைந்துள்ளது. இதன் மூலம் மாத சம்பளதாரர்கள் பெரும் பலன் அடையலாம். குறிப்பாக இந்த விழாகால பருவத்தில் இது பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் மாத தவணை தொகையும் மிகப்பெரிய அளவில் குறையலாம்.

சிறப்பு திட்டம்

சிறப்பு திட்டம்

இது மட்டும் அல்ல துணை ராணுவ படைகள் உட்பட பாதுகாப்பு பணியாளர்களுக்கான வீட்டுக் கடனுக்கான சிறப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 8% ஆக வட்டி விகிதத்தினை பெறலாம். இது மாதம் சமபளம் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி

செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி

தீபாவளி தமாக்கா என்ற இந்த திட்டத்தில் செயல்பாட்டு கட்டணமும், தங்கம் மற்றும் வீட்டுக் கடன், கார் கடன்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சில்லறை வாடிக்கையாளர்கள் பெரும் பலன் அடையலாம், குறிப்பாக EMI குறையலாம்.

ஏற்கனவே இதுபோன்ற விழாக்கால பருவத்தில் எஸ்பிஐம் பேங்க் ஆப் பரோடாவும் விழாகால சலுகைகளை அறிவித்துள்ளன,

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank of Maharashtra cut interest on home and personal loans

Bank of Maharashtra reduced interest rates on home loans and personal loans. It has come into effect from October 17. This can reduce EMI.
Story first published: Sunday, October 16, 2022, 19:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X