இதை செய்யாட்டி வங்கி கணக்கு முடங்கலாம்.. PNB வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 1க்குள் இதை செய்திடுங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களது வங்கிக் கணக்கு இருக்கா? அப்படின்னா? செப்டம்பர் 1-க்குள் உங்களது கே ஒய் சி அப்டேஷனை செய்ய வேண்டும்.

இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அப்டேட் செய்துள்ளது. அதில் KYC பற்றிய முக்கிய அறிவிப்பு இது தான்.

அதில் ரிசர்வ் வங்கியின் கே ஒய் சி அப்டேஷன் கடந்த மார்ச் 2022க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் பலரும் செய்யாதிருந்த நிலையில், ஆகஸ்ட் 31 ஆக காலக்கெடு அதிகரிப்பட்டது. ஆக வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 31-க்குள் கட்டாயம் கேஓய்சி-யினை அப்டேட் செய்ய வேண்டியிருக்கும்.

விரைவில் அப்டேட் செய்ங்க

விரைவில் அப்டேட் செய்ங்க

ஆகஸ்ட் 31-க்குள் கே ஒய் சி அப்டேஷன் செய்யாவிடில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படலாம். இதனால் உங்களது பண பரிவர்த்தனை பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது பரிவர்த்தனையை சரியான நேரத்தில் செய்ய முடியாமல் போகலாம். ஆக அதனை தவிர்க்க முன் கூட்டியே அப்டேட் செய்து விடுவது நல்லது.

மீண்டும் அப்டேட் செய்து கொள்ளலாமா?

மீண்டும் அப்டேட் செய்து கொள்ளலாமா?

முடக்கப்பட்ட உங்களது வங்கி கணக்கு மீண்டும் கே ஓய் சி அப்டேஷனை செய்யும்போது, மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும்.

கே ஓய் சி ஆவணம் மூலம் உங்களது முழு விவரங்களையும் வங்கிகள் பெறுகின்றன. அதில் உங்களது பெயர், வங்கிக் கணக்கு எண், பான் எண், ஆதார் எண், மொபைல் எண், முழு முகவரி என அனைத்தும் கொடுக்க வேண்டியிருக்கும்.

வீட்டில் இருந்து செய்யலாமா?
 

வீட்டில் இருந்து செய்யலாமா?

இன்று தான் அப்டேட் செய்ய கடைசி நாள். இன்று வங்கி விடுமுறை. ஆக இதனை வீட்டில் இருந்து செய்து கொள்ளலாமா? அதனை எப்படி செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

நீங்கள் உங்களது கே ஒய் சி ஆவணங்களை வீட்டில் இருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும். உங்களது மெயிலில் இருந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை வங்கிக்கு அனுப்பி வைக்கலாம். எனினும் இதன் மூலம் பல ஏமாற்று மோசடிகள் நடப்பதால் இதில் மிக கவனமாக இருப்பது அவசியம்.

ஆன்லைனில் அப்டேட் செய்யலாம்

ஆன்லைனில் அப்டேட் செய்யலாம்

உங்களது ஆதாரின் மூலம் ஓடிபி கொடுத்தும் கே ஓய் சியினை அப்டேட் செய்து கொள்ளலாம். பல வங்கிகளும் இன்றைய காலத்தில் அதனதன் இணைய வங்கியின் மூலமாக அப்டேட் செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆக எளிதில் வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம். எனினும் இதற்காக உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தேவை.

மோசடிகள் நடக்கலாம்

மோசடிகள் நடக்கலாம்

குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வங்கிகளில் கேஓய்சியினை அப்டேட் செய்ய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் சிலர் புதிதாக கணக்கு தொடங்கியவர்கள் கூட, தாங்கள் கணக்கு தொடங்கும்போது ஓரிடத்தில் இருப்பார்கள். ஆனால் இருப்பது ஒரிடமாக இருக்கும். ஆனால் வங்கிகளில் அதனை அப்டேட் செய்யாமலேயே இருப்பார்கள். முகவரி மட்டும் அல்ல, மொபைல் எண் உள்ளிட்ட பலவும் அப்படி தான். ஆக இதனால் தங்கள் வங்கிக் கணக்குகளில் அப்டேட் செய்யப்படாவிட்டால் இதுவே சில சமயங்களில் மோசடிக்கு வழிவகுக்கலாம்.

எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை?

எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை?

கே.ஒய்.சி ஆவணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிப்பதால், பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்க முடியும். இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி பின்பற்றப்படுகிறது. பொதுவாக
வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், இந்த கே.ஒய்.சி புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2 ஆண்டுகள் மற்றும் எட்டு ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எனவும் இந்த கே.ஒய்.சியானது புதுப்பிக்கப்பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bank updates: PNB bank accounts will be closed from September 1: check details

bank updates: PNB bank accounts will be closed from September 1: check details/இதை செய்யாட்டி உங்க வங்கி கணக்கு முடங்கலாம்.. செப்டம்பர் 1க்குள் இதை செய்திடுங்க!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X