இந்தியாவினை பொறுத்தவரையில் என்னதான் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
அதிலும் கிராம்புறங்களில் மிக நம்பிக்கையான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதலீட்டு பங்கமில்லா ஒரு கால வரம்புக்குள், ஒரு குறிப்பிட்ட வருவாயினைத் தரும் முக்கிய முதலீடாகும். பெரும்பாலும் முதலீட்டின் கால வரம்பு, வட்டி விகிதம் என்பது பெரும்பாலும் மாறுவதில்லை.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் குறையும் போது, இதுபோன்ற முதலீடுகளுக்கும் வட்டி குறைகிறது. ஆனால் இது பாதுக்காப்பான ஒரு முதலீடாக இருப்பதால், இன்றைய காலகட்டத்திலும் வட்டி குறைவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனையே விரும்புகின்றனர்.

பிகஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்
இந்த வட்டி விகிதங்கள் ஒரு வங்கியை விட மற்றொரு வங்கியுடன் ஒப்பிடும்போது சற்று வேறுபடுகின்றன. இது சிறிய அளவில் என்றாலும், உங்களுக்கு கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் மாற்றம் இருக்கலாம். இதே வங்கிக்ளை விட, வங்கி அல்லாத சில நிதி நிறுவனங்களில் வட்டி விகிதம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. பொதுவாக இந்த பிக்ஸட் டெபாசிட்களுக்காக கால வரம்பு 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் 2.5% முதல் 9% வரை வழங்கப்படுகிறது.

முன்னணி வங்கிகள்
நாட்டின் முன்னணி வங்கிளான எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள் முதலீட்டு கால வரம்பானது 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் 7% - 7.5% வரை வழங்கப்படுகிறது. இதே மூத்த குடிமக்களுக்கு இந்த விகிதத்தில் இருந்து சற்று அதிகமாக வட்டி கொடுக்கப்படுகிறது.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
15 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.00%
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.75%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.50%
181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.00%
1 வருடத்திற்கு - 6.75%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 7.00%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 7.50%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 7.25%
5 வருடத்திற்கு 7.00%
5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 6.50%
2 கோடி ரூபாய் உள்ள டெபாசிட்களுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும். மேற்கண்ட இந்த வட்டி விகிதம் கடந்த டிசம்பர் 22-லிருந்து வழங்கப்படுகிறது. இதிலிருந்து மூத்த குடிமக்களுக்கு மற்றவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் இருந்து 50 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக வழங்கப்படுகிறது.

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம், சாதாரண குடிமக்களுக்கான வட்டி விகிதத்தினை விட அதிகமாகும். இது கடைசியாக அக்டோபர் 19, 2020 அன்று மாற்றம் செய்யப்பட்டது.
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.00%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.25%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.00%
181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 6.00%
365 நாட்கள் முதல் 699 நாட்கள் வரையில் - 6.75%
700 நாட்களுக்கு - 7.00%
701 நாட்கள் முதல் 3652 நாட்கள் வரையில் - 6.75%

சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் வங்கி
சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் கடைசியாக கடந்த செப்டம்பர் 15 அன்று வட்டி விகிதம் மாற்றப்பட்டது.
இங்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 4.00%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 4.00%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 5.00%
91 நாட்கள் முதல் 6 மாதம் வரையில் - 5.50%
6 மாதத்திற்கு மேல் - 9 மாதம் வரையில் - 6.25%
9 மாதத்திற்கு மேல் - 1 வருடத்திற்குள் - 6.50%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் 6.75%
2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் - 7.15%
3 வருடத்திற்கு மேல் - 5 வருடத்திற்குள் - 7.25%
5 வருடத்திற்கு - 7.50%
5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 7%

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 3%
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் - 3%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.25%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 4%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் - 4.25%
181 நாட்கள் முதல் 364 நாட்கள் வரையில் - 5.25%
365 நாட்கள் முதல் 729 நாட்கள் வரையில் - 7%
730 நாட்கள் முதல் 1095 நாட்கள் வரையில் - 7.50%
1096 நாட்கள் முதல் 1825 நாட்கள் வரையில் - 6.50%
1826 நாட்கள் முதல் 3650 நாட்கள் வரையில் - 6.25%