வங்கியா? நிதி நிறுவனமா? எது பெஸ்ட்.. உங்கள் கனவு இல்லத்தினை கட்ட எது பாதுகாப்பானது..!

இன்றைய காலகட்டத்தில் பலரின் முக்கிய கனவே சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது தான். அப்படி பலரின் முக்கிய கனவை நனவாக்க பயன்படுவது வீட்டுக் கடன்கள் தான்.

ஆனால் அப்படி பலரும் கடன் வாங்கி வாழ் நாள் கனவை நினைவேற்ற நினைக்கும்போது பல விஷயங்களை கவனிக்க மறந்திருப்போம். இது பலரும் செய்யும் மிகப்பெரிய தவறாக இருந்து விடுகின்றது. ஏன் இறுதியில் இதனால் தங்களது கனவு இல்லத்தையே இழக்கும் நிலை கூட உருவாகி விடுகிறது.

ஆக ஒரு வீட்டை கட்ட கடன் வாங்குப்போது, எங்கு வாங்குவது? வங்கியிலா அல்லது நிதி நிறுவனத்திலா? எது சிறந்தது. அதே போல நாம் இன்று பார்க்கவிருக்கும் விஷயம் அடமான கடன். ஆக இது வங்கியில் சிறந்ததா? அல்லது நிதி நிறுவனத்தில் சிறந்ததா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

பிணையக் கடன்

பிணையக் கடன்

இதனை பார்ப்பதற்கு முன்பு மார்ட்கேஜ் லோன் (அ) அடமானக் கடன் என்றால் என்ன? மார்ட்கேஜ் லோன் என்பது ஒரு பொருளை பிணையமாக வைத்து கடன் வாங்குவது சிறந்தது எனலாம். பொதுவாக மற்ற கடன்களை காட்டிலும் அடமானக் கடனில் வட்டி விகிதம் குறைவு எனலாம். ஓரளவு இது வீட்டுக் கடனை போல் எனலாம்.

 யாருக்கெல்லாம் அடமானக் கடன்?

யாருக்கெல்லாம் அடமானக் கடன்?

இது வீட்டுக் கடன், வீட்டை புதுபிக்க, மருத்துவ சிகிச்சை, தொழிலை விரிவுபடுத்த என பல வகையான தேவைக்கும் இந்த அடமானக் கடன் பயன்படுத்தப்படுகின்றது. இந்த கடன் சம்பளதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் கிடைக்கும். எனினும் இந்த அடமானக் கடன்களில் உங்கள் சொத்தின் பகுதியளவே கடன் வழங்கப்படுகின்றது. இதனால் கடன் வழங்குனர்கள் பாதுகாப்பாக உணருகின்றனர்.

எதற்கான சிக்னல் இது?

எதற்கான சிக்னல் இது?

இன்று நாம் பார்க்கவிருப்பது அடமானக் கடன் வாங்குவது வங்கிகளில் சிறந்ததா? நிதி நிறுவனங்களில் சிறந்ததா? வாருங்கள் பார்க்கலாம். கடந்த சில வாரங்களாக வங்கிகளில் வட்டி விகிதம் என்பது தற்போது உயர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச் டி எஃப் சி லிமிடெட் உள்ளிட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் டெபாசிட்டுகளான வட்டியை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்பதற்கான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் நீங்கள் வாங்கும் அடமானக் கடன் எங்கு வாங்குவது வங்கியா? நிதி நிறுவனமான என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது எனலாம்.

 

 ரெப்போ விகிதத்துடன் இணைப்பு

ரெப்போ விகிதத்துடன் இணைப்பு

வங்கிகள் அக்டோபர் 2019 முதல் ரெப்போ விக்க்தத்துடன் இணைக்கப்பட்ட கடன் வழங்கும் முறைக்கு மாறின. இந்தியாவில் பெரும்பான்மையான வங்கிகளு,ம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களையே வழங்குகின்றன. ஆக ரெப்போ விகிதத்தில் மாற்றம் இருக்கும்போது வாடிக்கையாளர்கள், விரைவில் அவர்களின் மாத தவணைகளில் அதன் தாக்கத்தினை உணருவார்கள். ஆக ரெப்போ விகிதத்துடன் இணைப்பில் உள்ள அடமானக் கடனிலும் அதன் எதிரொலி இருக்கலாம்.

பிஎல் ஆர் விகிதம்

பிஎல் ஆர் விகிதம்

இதே வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் HFCகள் அவற்றின் முதன்மை கடன் (PLR) கட்டணங்களுடன் இணைக்கப்படுகின்றன.

வங்கிகளை பொறுத்தவரையில் முழுக் கட்டுப்படும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாடாக இருக்கும். இதே வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் முழுக்க முழுக்க சொந்த நிதியாக இருக்கும், அவர்களும் டெபாசிட் ஆக இருக்கலாம். எனினும் வங்கிகளை போல அல்லாமல் , தன்னிச்சையாக செயல்படும். அப்படி எனில் நிதி நிறுவனங்கள் தான் கடன் வாங்க சிறந்தவையா என்றால், இது உங்கள் தேவையை பொறுத்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

வங்கியா VS  நிதி நிறுவனமா?

வங்கியா VS நிதி நிறுவனமா?

உதாரணத்திற்கு ஒரு பெரிய தேசியமயமாக்கப்பட்ட நிதி நிறுவனத்திடம் இருந்து, 20 ஆண்டுகளுக்கு 50 லட்சம் ரூபாய் வீட்டு அடமான கடனை தேர்வு செய்கிறீர்கள் எனில், 6.7% வட்டி என வைத்துக் கொள்வோம். (இதில் ரெப்போ விகிதம் 4%+ நிதி நிறுவனம் வசூலிக்கும் மார்ஜினில் 2.70%). இதே மிகப்பெரிய நிதி நிறுவனம் என வைத்துக் கொண்டால் 6.70% (பி எல் ஆரில் 16.05% - 9.35% குறைந்த கட்டணம்). இதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என இரண்டும் ஆரம்பத்தில் ஒரே மாதிரியாக கட்டணம் வசூலிக்கலாம்.

வட்டியை அதிகரிக்கலாம்?

வட்டியை அதிகரிக்கலாம்?

ஆரம்பத்தில் வங்கிகளை போல HFC-க்களும் கடனுக்கான வட்டி விகிதம் இருந்தாலும், பின்னாளில் வட்டி விகிதத்தினை ரெப்போ விகிதம் அதிகரிக்காவிட்டாலும் நிதி நிறுவனங்கள் வட்டியை அதிகரிக்கலாம்.

வட்டியை குறைக்க நிதி நிறுவனங்களிடம் இருந்து கேட்டாலும், அதற்கும் ஒரு கட்டணத்தினை வசூலிக்கின்றன. ஆக ஒட்டுமொத்தமாக கடனை கட்டும் முடிக்கும்போது வங்கிகளை விட, நிதி நிறுவனங்களில் அதிகம் செலுத்தியிருப்பீர்கள்.

 

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

ஆக வங்கிகளை பொறுத்தவரையில் கிரெடிட் ஸ்கோர், சரியான ஆவணங்கள் இருந்தால் எந்த வித பிரச்சனையும் இல்லை எனில், வங்கிகள் தான் பெட்டர். எனினும் வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளது, கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ளது என்பதை பொறுத்து வட்டி மாறிக் கொண்டே இருக்கலாம். ஆக இது வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்தது தான். பொதுவாக பார்க்கும்போது வங்கிகள் தான் சிறந்த ஆப்சனாக இருக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+