100 மடங்கு லாபமா..? 1 லட்சம் போட்டிருந்தா 110 லட்சமா..? என்ன இது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னங்க சொல்றீங்க ஒரு லட்சத்துக்கு சொந்த வீடா..? வாய்ப்பே இல்லை என்று கோவப்படுகிறீர்களா..?

 

ஒரு லட்சத்துக்கு சொந்த வீடு வாங்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் ஒரு கோடி ரூபாய்க்கு நிச்சயம் சொந்த வீடு வாங்கி இருக்க முடியுமா முடியாதா..?

சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் கூட ஒரு கோடி ரூபாய்க்கு நல்ல தரமான வீடே வாங்க முடியும்.

என்ன தொடர்பு

என்ன தொடர்பு

ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி இருக்க முடியும். அதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் என்ன தொடர்பு..? என்று கேட்கிறீர்களா..? இந்த ஒரு லட்சம் ரூபாயை Best Agrolife Ltd (BESTAGRO | 539660 | INE052T01013) நிறுவன பங்குகளில், கடந்த ஏப்ரல் 03, 2018 அன்று முதலீடு செய்து, அதன் உச்ச விலையான 278 ரூபாய்க்கு விற்று இருந்தால்... இன்று நம் கையில் 1.10 கோடி ரூபாய் இருந்து இருக்கும்.

1.10 கோடி ரூபாய்

1.10 கோடி ரூபாய்

இந்த 1.10 கோடி ரூபாய் என்பது, பங்குகளை வாங்கும் போதும், விற்கும் போதும் செலுத்தும் தரகுக் கட்டணம், நீண்ட கால மூலதன ஆதாய வரி அல்லது குறுகிய கால மூலதன ஆதாய வரி, வருமான வரி என எதையும் கழித்துக் கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.

1.10 கோடிக்கு வீடு
 

1.10 கோடிக்கு வீடு

இப்போது சொல்லுங்கள், வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்றால் கூட, வீட்டின் மொத்த விலையில் குறைந்தபட்சம் 10 சதவிகிதமாவது நம் சொந்தப் பணத்தைக் கொண்டு வரச் சொல்வார்கள். சென்னையில் தாம்பரம் தாண்டி ஒரு சாதாரண 850 சதுர அடி வீடு கூட இன்று 25 லட்சம் ரூபாய்க்குக் கீழ் கிடைப்பது சிரமம்.

கணக்கு

கணக்கு

ஆக 25 லட்சம் ரூபாயில் 10 சதவிகிதம் 2.5 லட்சம் ரூபாய். இந்த 2.5 லட்சத்தில், ஒரு லட்சம் ரூபாயை மட்டும் இந்த பெஸ்ட் அக்ரோ லைஃப் நிறுவன பங்கில் முதலீடு செய்து இருந்தால், மேலே சொன்னது போல், 1.10 கோடி ரூபாய் இன்று நம் கையில் இருந்து இருக்கும். மாதா மாதம் வீட்டுக் கடனுக்கு இஎம்ஐ எல்லாம் கூட, கட்டத் தேவை இருந்து இருக்காது.

நல்ல ஏரியா

நல்ல ஏரியா

ஒரு கோடி ரூபாய்க்கு தாம்பரத்தில் வீடு வாங்குவதற்கு பதிலாக நுங்கம்பாக்கம், தி நகர், அடையாறு போன்ற சென்னையின் முக்கிய ஏரியாக்களில் கூட வீடு வாங்கி இருக்கலாம். என்ன செய்ய நம் நேரக் கிரகம், இந்த பங்குகள் எல்லாம் நம் கண்ணில் பட்டிருக்காது என நீங்கள் வருத்தப்படுவது தெரிகிறது. ஆனால் மீண்டும், இதே போன்ற, ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கொடுத்தது பெஸ்ட் அக்ரோ லைஃப் பங்குகள்.

2019 ஜனவரி

2019 ஜனவரி

ஏப்ரல் 2018-ல் 2.50 ரூபாய்க்கு நீங்கள் இந்த பங்குகளை வாங்கி இருந்தால், 01 ஜனவரி 2019 அன்று 11.55 ரூபாயைத் தொட்டு இருந்தது. சுமார் 362 சதவிகிதம் லாபம். ஆனால் இந்த அசுர வளர்ச்சி என்று சொல்வார்களே, அது தொடங்கியது இந்த ஜனவரி 2019-ல் இருந்து தான். 11.55 ரூபாய் இருந்த பங்கு அசுரத் தனமாக விலை உயரத் தொடங்கியது.

ஜனவரி வாய்ப்பு

ஜனவரி வாய்ப்பு

ஏப்ரல் 2018-ல் இந்த பங்கை கவனிக்கத் தவறியவர்கள், இந்த 01 ஜனவரி 2019-ல், ஒரு லட்சம் ரூபாய்க்கு, பெஸ்ட் அக்ரோ லைஃப் பங்குகளை, ஒரு பங்கு விலை 11.55 ரூபாய்க்கு என வாங்கி, 278 ரூபாய்க்கு விற்று இருந்தால், இன்று 2,307 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு 23.07 லட்சம் ரூபாய் கிடைத்து இருக்கும்.

பிப்ரவரி வாய்ப்பு

பிப்ரவரி வாய்ப்பு

வேறு ஏதாவது வாய்ப்பு கிடைத்ததா..? இதோ அடுத்த மாதமே கிடைத்ததே..! 01 பிப்ரவரி 2019-ல் பெஸ்ட் அக்ரோ ஃப்ரெஷ் நிறுவனத்தின் பங்குகளை, ஒரு பங்கு விலை 15.02 ரூபாய்க்கு வாங்கி, 278 ரூபாய்க்கு விற்று இருந்தால், இப்போது மொத்தம் 1,751 சதவிகிதம் லாபம். போட்ட காசை விட 17 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாம்.

10 மடங்கு லாபம்

10 மடங்கு லாபம்

இல்லங்க, அந்த வாய்ப்பும் கிடைக்கல... அடுத்த வாய்ப்பு என தலையை சொரிதால்... இதோ 10 மடங்கு லாபத்துக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறதே..! கடந்த 01 மார்ச் 2019 அன்று, பெஸ்ட் அக்ரோ ஃப்ரெஷ் நிறுவனத்தின் பங்குகளை, ஒரு பங்கு விலை 24.30 ரூபாய்க்கு வாங்கி, 278 ரூபாய்க்கு விற்று இருந்தால், மொத்தம் 1,044 சதவிகிதம் லாபம். போட்ட காசை விட நறுக்கென 10 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாம்.

5 மடங்கு லாபம்

5 மடங்கு லாபம்

என்னங்க ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் பங்குகளை வாங்குறது எல்லாம் எப்படி சுத்தப்பட்டு வரும். பங்குன்னா சொல்றதுக்கு ஒரு விலை வேண்டாமா..? எனக் கேட்கிறீர்களா...? இதோ கடந்த 05 மே 2019 அன்று பெஸ்ட் அக்ரோ ஃப்ரெஷ் நிறுவனத்தின் பங்குகளை, ஒரு பங்கு விலை 42 ரூபாய்க்கு வாங்கி, 278 ரூபாய்க்கு விற்று இருந்தால், மொத்தம் 562 சதவிகிதம் லாபம். போட்ட காசை விட 5 மடங்கு அதிக லாபம் பார்த்து இருக்கலாம். ஒரு பங்கு விலை 42 ரூபாய் என்பது நல்ல விலை தானே பாஸ்..?

100 ரூபாய்க்கு மேல் தான் ஓகே

100 ரூபாய்க்கு மேல் தான் ஓகே

இல்லிங்க.. 42 ரூபாய் எல்லாம் ஒரு நல்ல பங்குக்கான விலை இல்லை என வாதிடுகிறீர்களா..? கடந்த 03 செப்டம்பர் 2019 அன்று, பெஸ்ட் அக்ரோ ஃப்ரெஷ் நிறுவனத்தின் பங்குகளை, ஒரு பங்கு விலை 119.55 ரூபாய்க்கு வாங்கி இருக்கலாம். வாங்கிய பங்குகளை, 278 ரூபாய்க்கு விற்று இருந்தால், மொத்தம் 133 சதவிகிதம் லாபம். போட்ட காசை விட 1.3 மடங்கு லாபம் பார்த்து இருக்கலாமே. முதலீடு செய்து இருக்கிறீர்களா..?

அட்லீஸ்ட் 50% லாபம்

அட்லீஸ்ட் 50% லாபம்

2019 ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை, பயங்கரமான விலை ஏற்றத்துக்குப் பின், கடந்த அக்டோபர் 2019-ல் பெஸ்ட் அக்ரோ ஃப்ரெஷ் நிறுவனத்தின் பங்குகளை, ஒரு பங்கு விலை 185.30 ரூபாய்க்கு வாங்கி, 278 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட, மொத்தம் 50 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். இந்த வாய்பையும் விட்டிருந்தால்.. சாரி சார்... உண்மையாகவே நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது

இப்போது

கடந்த ஒரு மாத காலமாக, பெஸ்ட் அக்ரோ ஃப்ரெஷ் நிறுவனத்தின் பங்கு விலை கொஞ்சம் இறக்கம் கண்டு வருகிறது. இந்த மாதிரி, அதிரி புதிரியாக விலை ஏறும் பங்குகளை, மிகவும் கனவமாகவும், தீர ஆலோசித்தும் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். இந்த முதலீட்டு முடிவுகளை நீங்களே சொந்தமாக முடிவு செய்ய வேண்டும். யாரோ சொல்கிறார்கள், செய்தி வருகிறது என கண்ணை மூடிக் கொண்டு இந்த மாதிரியான பங்குகளை வாங்காதீர்கள். அதே சமயத்தில் உண்மையாகவே நல்ல தரமான பங்குகளையும் வாங்கத் தவறாதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best agrolife share gave Rs 1.1 crore return for 1 lakh investment

The Bombay stock exchange share Best Agrolife Ltd (BESTAGRO | 539660 | INE052T01013) gave around rs 1.1 crore return for 1 lakh investment in the last two years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X