30 – 45 வயதுடையோருக்கு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எது.. எப்படி உங்கள் பாலிசியை தேர்ந்தெடுப்பது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் என்பது மிக அவசியமாகி விட்டது. ஏனெனில் எந்த சமயத்தில் என்ன நடக்குமோ? என்ற நிலையில் அனைவரும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது மிக நல்ல விஷயமே.

அதிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அவசர காலங்களில், பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் பல விதமான மருத்துவ செலவுகளுக்கும் பணத்தை, திரும்ப செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது.

குறிப்பாக எதிர்பாராத, அதிக மருத்துவச் செலவுகளிலிருந்து உங்களை பாதுகாப்பதன் மூலம் உங்களுடைய உடல்நலம், நோய் மற்றும் விபத்து செலவுகளுக்கும் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் உதவுகிறது.

க்ளைம் எப்படி?

க்ளைம் எப்படி?

நீங்கள் ஒரு மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியினை எடுக்கும் போது, பிரீமியத்தின் வருடாந்திர பண செலுத்தலின் போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள உறுதி செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப, உங்களது மருத்துவ செலவில் ஏற்படக் கூடிய உங்கள் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள், மற்றும் பாதிப்புக்கு ஏற்ப உங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தால் க்ளைம் செய்யப்படும்.

வரி விலக்கும் உண்டு

வரி விலக்கும் உண்டு

நீங்கள் சிகிச்சைக்கு முதலில் பணம் செலுத்தி விட்டு, பின்பு பாலிசிக்கான கோருதலை பின்னர் செய்யலாம் அல்லது சிகிச்சையின் ஆரம்பத்தில் இருந்தே உங்கள் செலவுகளை காப்பீடு செய்கின்ற ஒரு மருத்துவமனையை நாடலாம். இவற்றோடு, பாலிசிக்காக செலுத்தும் பிரீமியத்தின் மீது வருமான வரி சட்டத்தின் 1961 படி 80D பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு.

பிரச்சனைகளுக்கு எதிரான பாலிசி

பிரச்சனைகளுக்கு எதிரான பாலிசி

ஒரு தனிநபர் அல்லது அவரின் குடும்பத்திற்கு ஏற்ப ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்கலாம். கொடிய நோய்கள் அல்லது மகப்பேறு காலத்தில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய ஏதாவது பிரச்சனைகளுக்கு எதிராக உங்களை பாதுகாப்பதற்காக அவற்றை வாங்கலாம். இந்த நிலையில் 30 வயது முதல் 45 வயதுடையோருக்கு என்ன சிறந்த பாலிசிகள் உள்ளது வாங்க பார்க்கலாம்.

இன்சூரன்ஸ் திட்டங்கள்

இன்சூரன்ஸ் திட்டங்கள்

அதிலும் தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் பலர் இந்த இன்சூரன்ஸ் பாலிசி பற்றி தெரிந்து கொள்ள நினைக்கக்கூடும். ஆக அவர்களுக்கானதே இந்த பாலிசிகள். முதலில் இந்த பாலிசிகளை நாம் ஏன் வாங்க வேண்டும். அதன் சிறப்பம்சங்கள் என்ன? அதனால் என்ன நன்மை உங்களுக்கு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

க்ளைம் எவ்வளவு செய்ய முடியும்?

க்ளைம் எவ்வளவு செய்ய முடியும்?

உங்களது மருத்துவ காப்பீடு மூலம் 2 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விரிவான மருத்துவ பாதுகாப்பு காப்பீடு வரை க்ளைம் செய்து கொள்ளலாம். மேலும் ரொக்கமில்லா செட்டில்மெண்ட் மூலம் மருத்துவமனைகளின் பரந்த நெட்வொர்க்கில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும்போது நீங்கள் எந்தத் தொகையையும் செலுத்த வேண்டியிருக்காது. மேலும் இதில் ஆம்புலன்ஸ் கட்டணங்களும் உள்ளடங்கும்.

மிக உபயோகமானதாக இருக்கும்

மிக உபயோகமானதாக இருக்கும்

மேலும் உங்களது மெடிக்கல் பாலிசி மூலம் தவிர்க்க முடியாத பெரிய அளவிலான செலவினங்களை க்ளைம் செய்து கொள்ள முடியும். இது அந்த சமயத்தில் உங்களது பாக்கெட்டுகளை பதம் பார்க்காமல் இருக்கும். ஆக இது நிதி ரீதியாக ஒப்பிடும்போது உங்களுக்கு மிக உபயோகமானதாக இருக்கும். ஆக நீங்கள் ரெகுலராக உங்களது பிரீமியத்தை செலுத்தி வருவது மிக நல்ல விஷயமே.

பாலிசியை எப்படி தேர்வு செய்யலாம்?

பாலிசியை எப்படி தேர்வு செய்யலாம்?

ஒரு நல்ல இன்சூரன்ஸ் பாலிசி என்பது உங்களின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்யக் கூடும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இது மிக உபயோகமானதாக இருக்கும். இது போன்ற முக்கியமான பாலிசிகளுக்கு வரி சலுகையும் உண்டு. சரி எப்படி உங்களுக்கான பாலிசியை தேர்வு செய்யலாம். நிறைய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதனை பற்றி பாலிசி தாரர்களுக்கு முழுவதும் சொல்வதில்லை.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆனால் பாலிசிதாரர் நிச்சயம் ஒரு பாலிசியை தேர்தெடுக்கும் போது முக்கியமான சிலவற்றை பார்க்கலாம். பாலிசியை எடுக்க குறைந்தபட்ச வயது, க்ளைம் தொகை, மேலும் நீங்கள் எடுக்கும் எதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியும், எதற்கெல்லாம் செய்ய முடியாது, அறை வாடகை உண்டா? மற்ற என்னென்ன சலுகைகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இது சிறந்த பாலிசி

இது சிறந்த பாலிசி

அப்பல்லோ முனீச் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் Easy Health Standard health insurance policy, ஒரு நல்ல பாலிசியாக கருதப்படுகிறது.

முக்கிய அம்சம்:

இந்த பாலிசியினை எடுக்க குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சமாக 65 வயதுடையோர் எடுத்துக் கொள்ளலாம்.
இதன் பாலிசி காலம் 1 - 2 ஆண்டுகள் ஆகும். 2 ஆண்டுகள் பாலிசியினை எடுக்கும் போது பிரிமீயம் தொகை செலுத்துதலில் சில தள்ளுபடி கிடைக்குமாம்.
பாலிசியை புதுபிக்க 30 நாள் கிரேஸ் பீரியடை பெற முடியும்.
இதன் மூலம் 1 - 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்ய முடியும்.
24 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவ செலவுகள் ஈடுகட்டப்படும்.
இதேபாலிசிதாரர் 15 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் காப்பீடு செய்திருந்தால், அவர்கள் மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேல் இருந்தால், வசூல் பலன் என 10,000 ரூபாயும் பெற முடியுமாம்.
அவசர கால ஆம்புலன்ஸ் சேவைக்கென 2000 ரூபாய் பெற முடியும். இப்படி இன்னும் பல சலுகைகளையும் க்ளைம் தொகையும் செய்ய முடியும்.

 

பஜாஜ் அலையன்ஸின் Health guard

பஜாஜ் அலையன்ஸின் Health guard

பஜாஜ் அலையன்ஸின் Health guard பாலிசி தனிப்பட்ட ஒரு நபருக்கு முழுமையான உடல் நல பாதுகாப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்களது மருத்துவர் உடல் நலம் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நோய் அல்லது விபத்து ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் உட்பட அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கிய ஒரு பாலிசியாகும். இது வரி விலக்கு சலுகை வேறு உண்டாம்.

முக்கிய விஷயங்கள்:

இந்த பாலிசியை நீங்கள் ஆயுள் முழுவதும் புதுபித்து கொள்ளலாம்
இது சில்வர் பிளான் மற்றும் கோல்டு பிளான் என்று இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலிசியை 1 அல்லது 2 அல்லது 3 வருடங்களுக்கு எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த பாலிசி தனிபட்ட நபர் அல்லது ப்ளோட்டர் ஆப்சன் மூலம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் குடும்பத்தினரும் பயன் பெற முடியும்.
இந்த பாலிசி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் காலகட்டங்களில் கூட கிட்டதட்ட அனைத்து மருத்துவ செலவினனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.

 

இதுவும் முக்கிய பாலிசி தான்

இதுவும் முக்கிய பாலிசி தான்

இதேபோல் ஐசிஐசிஐயின் Complete Health insurance policyயை எடுத்துக் கொள்ளலாம். இதோடு ராயல் சுந்தரத்தின் Lifeline - supreme Family Floater பாலிசியையும் எடுத்து பயன் பெற்றுக் கொள்ள முடியும். ஆக இப்படியாக நீங்கள் ஒரு பாலிசியை வாங்குவதற்கு முன்பு எதையெல்லாம் கவனிக்க வேண்டும். உங்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப ஒரு பாலிசியை தேர்தெடுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best health insurance plans for every individual aged between 30 -45 years

Best health insurance plans for every individual aged between 30 -45 years. Pls check here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X