வீட்டு கடன் ஈஎம்ஐ செலுத்த 5 ஸ்மார்ட்டான வழி.. இனி நோ டென்ஷன், லைப் ஜாலி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொந்த வீடு வாங்குவது என்பது பல கோடி இந்திய மக்களின் வாழ்நாள் கனவு. இன்று வீடு வாங்குவதற்கு நீங்கள் ஒரு மாத சம்பளக்காரர் ஆக இருந்தால் போதும், வங்கிகள் வீடு தேடி வந்து வீட்டுக் கடன் கொடுக்கும் அளவில் தான் உள்ளது. சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால் கூட வங்கிக் கணக்கு, பணப் பரிமாற்ற தரவுகள் ஆகியவற்றை வைத்து எளிதாக வீட்டுக் கடன் வாங்கி விட முடியும்.

 

இன்று நாடு முழுவதும் விலைவாசி அதிகரித்துள்ள காரணத்தால் வீட்டு மனைகள், வீட்டுக் கட்டுமான பொருட்கள் என அனைத்தும் விலை அதிகரித்துள்ள காரணத்தால் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையும் காஸ்ட்லி ஆகியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் மொத்தமாகப் பணத்தைச் சேர்ந்து வீடு அல்லது நிலத்தை வாங்குவது என்பது நடக்காத காரியம். இதற்கு ஓரே வழி வீட்டுக் கடன் மட்டும் தான்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ தொகையை ஈசியாகச் சுமை இல்லாமல், ஸ்மார்ட்டான வழியில் செலுத்துவது எப்படி என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

 தாமதமான ஈஎம்ஐ செலுத்துதல்

தாமதமான ஈஎம்ஐ செலுத்துதல்

தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்.. ஈஎம்ஐ தொகையைக் குறித்த நாளில் செலுத்த வேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ஆனால் ஹோம் லோனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதைத் தாமதமாகத் துவங்க தற்போது பல வங்கிகளில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

உதாரணமாக எஸ்பிஐ வங்கியில் அளிக்கப்படும் Flexipay home loan, இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனுக்குச் சில காலம் தள்ளுபடி உடன் ஈஎம்ஐ செலுத்த முடியும். இத்திட்டத்தின் கீழ் ஹோம் லோன் வாங்கிய பின்பு 36 முதல் 60 மாதம் பின்பும் ஈஎம்ஐ செலுத்தத் துவங்கலாம்.

இந்த 60 மாத காலத்திற்குக் கடன் வாங்குவோர் எவ்விதமான ஈஎம்ஐயும் செலுத்த சேவை இல்லை, pre-Emi மட்டும் செலுத்தினால் போதுமானது. 60 மாதம் காலம் முடிந்த பின்பு ஈஎம்ஐ செலுத்தினால் போதுமானது. ஆனால் இந்தத் திட்டத்திற்குக் கூடுதலான வட்டி விகிதம் விதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது, ஆனால் 5 வருடம் கேப் கிடைக்கும் காரணத்தால் பலருக்கும் இது பெரும் வாய்ப்பாக இருக்கும்.

 

 கரண்ட் அக்கவுண்ட் உடன் ஹோம் லோன் கணக்கை இணைத்தல்
 

கரண்ட் அக்கவுண்ட் உடன் ஹோம் லோன் கணக்கை இணைத்தல்

இந்தியாவில் சில முக்கிய வங்கிகள் தங்களது வீட்டுக் கடன் கணக்கை கரண்ட் அக்கவுன்ட் உடன் இணைக்க அனுமதி அளிக்கிறது. இது பிஸ்னஸ் செய்யும் பலருக்கு அதிகளவிலான நன்மையை அளிக்கும்.

இந்தக் கரண்ட் அக்கவுண்ட் உடன் ஹோம் லோன் கணக்கை இணைப்பதன் மூலம் ஹோம் லோனுக்கான வட்டி விகிதம்

வீட்டுக் கடனின் வட்டி அளவை விடவும் நடப்புக் கணக்கில் இருக்கும் உபரி நிதி கடன் பெறுபவர்கள் தேவைப்படும்போது நிதியைத் திரும்பப் பெறவோ அல்லது டெபாசிட் செய்யவோ அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த முறையின் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டி, கடன் நிலுவைத் தொகை உடன் நடப்புக் கணக்கில் இருக்கும் உபரி நிதியைக் கழித்த பின் வரும் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படுகிறது. இதுகூடுதல் சிறப்பு.

 

 தொடர்ந்து உயரும் ஈஎம்ஐ

தொடர்ந்து உயரும் ஈஎம்ஐ

 

நீங்கள் இளம் பருவத்திலேயே வீட்டை வாங்கினால் அதிகளவிலான தொகையை ஆரம்பக்கட்டத்திலேயே செலுத்த முடியாது, அதனால் Step Up Home Loans மிகவும் சிறந்த தீர்வாக இருக்கும். அதாவது நீங்கள் பணியில் ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு பெறுவதைப் போலவே ஹோம் லோன் ஈஎம்ஐ தொகையும் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும்.

இதனால் வீட்டுக் கடன் வாங்கிய துவக்கத்தில் நீங்கள் மற்ற வீட்டுக்கடன் திட்டத்தை விடவும் குறைவான ஈஎம்ஐ தொகைக்குக் கடனை பெற முடியும்.

இந்தத் திட்டத்தில் Flexipay home loan போன்ற எவ்விதமான கடன் தள்ளுபடி காலம் இல்லை, கடன் வாங்கி நாளில் இருந்து வட்டி மற்றும் ஈஎம்ஐ தொகை வங்கிகள் கணக்கிடும்.

Step Up Home Loans திட்டம் இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருக்கும். அதிலும் குறிப்பாக ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்வோர் ஆரம்பம் முதல் பணத்தைச் சேமிக்கவோ முதலீடு செய்யவோ விருப்பம் உடையோருக்கு இது தரமான திட்டம்.

 

 தொடர்ந்து குறையும் ஈஎம்ஐ

தொடர்ந்து குறையும் ஈஎம்ஐ

மேலே பார்த்த முறைக்கு அப்படியே உல்டாவான திட்டம் இது. அதாவது வீட்டுக் கடன் வாங்கிய முதல் வருடத்தில் ஈஎம்ஐ தொகை அதிகமாக இருக்கும், அதன் பின் ஒவ்வொரு வருடமும் இதன் அளவீடுகள் தொடர்ந்து குறையும். இது பல தரப்பினருக்குப் பெரிய அளவில் உதவும்.

குறிப்பாக 30 வயதுக்கு மேல் சொந்த வீடு வாங்க வேண்டும் எனத் திட்டமிடுவோருக்கு இத்தகைய திட்டம் மிகவும் பொருத்தமாக இருக்கும். காரணம் 30 வயதில் உங்களது சம்பளம் சிறப்பானதாக இருக்கும் செலவுகளும் பெரியதாக இருக்காது. அதனால் அதிக ஈஎம்ஐ செலுத்த முடியும்.

ஆனால் 35க்கு மேல் பிள்ளைகளின் கல்வி, குடும்பச் செலவு, பெற்றோர் மருத்துவம், ஓய்வு பெறும் போது சேர்க்க வேண்டிய நிதி, முதலீடு, லைப் இன்சூரன்ஸ் ஆகியவை கட்டாயம் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் ஹோம் லோன் குறைந்தால் எப்படியிருக்கும்.

உண்மையிலேயே ஜாக்பாட் தான், பணிக்குச் சேர்ந்த ஆரம்பக்கட்டத்தில் பெரிய அளவில் சம்பளம் கிடைக்காதோர், சரியான வேலையில் இல்லாதோரால் வீடு வாங்குவது சாத்தியம் இல்லை, ஆனால் சில வருடங்களுக்குப் போராடி ஒரு இடத்தை அடைந்த பின்பு வாங்க வேண்டும், அதேநேரம் எதிர்காலத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்றால் இந்த Step Down Home Loans சிறந்த தேர்வாக இருக்கும்.

 

 நீண்ட காலத் திட்டம்...

நீண்ட காலத் திட்டம்...

சில வங்கிகள் கடன் பெறுவோரின் அனுமதித்த (eligibility) தொகையை விடவும் 20 சதவீத தொகையைக் கூடுதலாக நீண்ட காலக் கடன் திட்டத்திற்கு அளிக்கும். இது ஒவ்வொரு வங்கிக்கும், ஒவ்வொரு விண்ணப்பதாரர்க்கும் மாறுபடும்.

உதாரணமாக நீங்கள் 25 முதல் 30 வயதில் வீட்டுக் கடன் வாங்கினால் ஒரு தளர்வுகள் கிடைக்கும், அதேபோல் 30 முதல் 35 வயதில் வீட்டுக் கடன் வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் மட்டுமே கிடைக்கும்.

அந்த வகையில் வங்கிகள் சில முக்கியக் காரணிகளைக் கணக்கிட்டு 30 ஆண்டுக் காலம் வரையில் வீட்டுக் கடன் அளிக்கும், அதேபோல் வங்கிகள், விண்ணப்பதாரர் வருமானம், விண்ணப்பதாரரின் வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 80 சதவீதம் வரையில் அளிக்கப்படும் வீட்டுக் கடன் திட்டம் 100 சதவீதம் வரையில் அளிக்கப்படுகிறது.

முன்பு கூறியதை போல் இது ஒவ்வொரு வங்கிக்கும், ஒவ்வொரு விண்ணப்பதாரர்க்கும் மாறுபடும். அனைத்து வழியிலும் நீங்க வங்கிக்குச் சாதகமாக இருந்தால் இது சாத்தியம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best home loan EMI payment option in market: Pick the right one for you

Best home loan EMI payment options in the market: Pick the right one for you
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X