வீடு வாங்க சூப்பர் சான்ஸ்.. குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு ஆசை, ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் என்பது தான். ஆனால் எத்தனை நாட்களுக்கு தான் அது ஆசையாகவே இருப்பது.

 

அது சிறியதோ அல்லது பெரியதோ? மாட மாளிகையோ அல்லது ஓலைக் குடிசையோ? நிச்சயம் தனக்கென்று சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது தான் பலருக்கும் கனவாகவே இருக்கும்.

ஒரு காலகட்டத்தில் சில லட்சங்கள் இருந்தாலே வீடு கட்டிக் கொள்ளலாம் என்ற நிலை இருந்த நிலையில், இன்று சாதரணமாக சிறிய வீடு கட்ட வேண்டும் என்றால் கூட, குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.

சிறந்த வட்டி விகிதம்

சிறந்த வட்டி விகிதம்

ஏனெனில் அந்த சிறு முயற்சி கூட, உங்களின் கடன் சுமையை சற்று குறைக்கக் கூடும். அந்த வகையில் இன்று வங்கி அல்லாத சில நிதி நிறுவனங்களில் என்ன வட்டி விகிதம் என்பதனைத் தான் நாம் பார்க்க இருக்கிறோம். பெரும்பாலான வங்கிகள் வீட்டுக்கடனை விட, அடமானக் கடன் களைத் தான் அதிகம் விரிவுபடுத்துகின்றன. ஏனெனில் இது சொத்துக்களுக்கு எதிரான கடனாக உள்ளது. ஆனால் வீட்டுக்கடன் தான், அடமானக் கடனை விட சிறந்தது.

எவ்வளவு வட்டி? எவ்வளவு இஎம்ஐ?

எவ்வளவு வட்டி? எவ்வளவு இஎம்ஐ?

கடந்த வாரம் வங்கிகளில் வீட்டுக்கடன் வங்கிகள் குறைந்த வட்டி விகிதம் பற்றி https://tamil.goodreturns.in/personal-finance/india-s-top-banks-offer-lower-interest-rates-of-home-loans-020381.html என்ற கட்டுரையில் பார்த்தோம். இன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் எவ்வளவு வட்டி, எவ்வளவு தொகை வாங்கினால் எவ்வளவு இஎம்ஐ என்பதனை பார்க்க போகிறோம்.

20 வருட கால அவகாசம்
 

20 வருட கால அவகாசம்

வங்கிகள் தங்களது கடன் விகிதத்தினை ஆர்பிஐயின் ரெபோ விகிதத்துடன் இணைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அப்படி அல்ல. சரி ஒரு NBFCயில் 75 லட்சம் ரூபாய் கடன், 20 வருட கால அவகாசத்தில் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதற்கு எவ்வளவு இஎம்ஐ விகிதம், அது நிதி நிறுவனங்களில் உள்ள வட்டி விகிதத்திற்கு ஏற்ப கொடுத்துள்ளோம். இதில் மற்ற கட்டண கட்டணங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் (lic housing loan)

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் (lic housing loan)

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் ( lic housing loan) நிறுவனத்தில் வருடத்திற்கு வட்டி விகிதம் 7.00% ஆகும். இங்கு 75 லட்சம் ரூபாய்க்கு, இஎம்ஐ மாதம் 54,147 ரூபாயாகும். இந்த விகிதமான நிறுவனங்களின் விகிதத்துடன் ஒப்பிடும்போது சற்று மாறுபடலாம், ஏனெனில் மற்ற கட்டணங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மேலும் இது அடிப்படை வட்டி விகிதத்தினை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி லிமிடெட்

ஹெச்டிஎஃப்சி லிமிடெட்

ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தில் அடிப்படை வட்டி விகிதமானது வருடத்திற்கு 7.20% ஆகும். ஆக வெறும் வட்டி விகிதத்தினை மட்டும் கணக்கிட்டால் மாத தவணை தொகையானது சுமார் 59,051 ரூபாயாகும். மேற்கண்டவாறு இந்த தொகையானது வெறும் வட்டி விகிதத்தினை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கேன் பின் ஹோம்ஸ் (can fin homes)

கேன் பின் ஹோம்ஸ் (can fin homes)

கேன் பின் ஹோம்ஸ் (can fin homes) வட்டி விகிதம் 7.95% ஆகும், இதன் மூலம் 75 லட்சம் ரூபாய் கடனுக்கு இஎம்ஐ விகிதம் 62,500 ரூபாயாகும். இது வெறும் அடிப்படை வட்டி விகிதத்தினை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மற்ற கட்டணங்கள் ஏதேனும் இருப்பின் அதன் மூலம் இந்த தவணை விகிதம் மாறுபடலாம்

ஆவாஸ் பைனான்ஸியர் (AAVAS financiar)

ஆவாஸ் பைனான்ஸியர் (AAVAS financiar)

AAVAS financiar இந்த நிறுவனத்தில் வட்டி விகிதம் 8.00% ஆகும். இதன் மூலம் மாத தவணை தொகை 75 லட்சம் ரூபாய்க்கு, 62,733 ரூபாயாகும்.

இதே ரெப்கோ ஹொம் பைனான்ஸில் வட்டி விகிதம் 8.25 சதவீதமாகும். இங்கு மாத இஎம்ஐ தொகை 63,905 ரூபாயாகும்.

டாடா கேப்பிட்டல்

டாடா கேப்பிட்டல்

டாடா கேப்பிட்டல் நிதி நிறுவனத்தில் வட்டி விகிதம் 8.50 சதவீதமாகும். இங்கு மாத இஎம்ஐ தொகை 65,087 ரூபாயாகும்.

இதுவே பிஎம்பி ஹவுஸிங் பைனான்ஸில் வட்டி விகிதம் 8.60% ஆகும். இங்கு மாத இஎம்ஐ தொகையானது 65,562 ரூபாயாகும்.

திவான் ஹவுஸிங்

திவான் ஹவுஸிங்

திவான் ஹவுஸிங் பைனான்ஸில் வட்டி விகிதம் 8.75% ஆகும். இங்கு மாத தவணை தொகையானது 66,278 ரூபாயாகும்.

இதே இந்தியா இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வட்டி விகிதம் 8.99% ஆகும். இங்கு தவணை தொகை 67,431 ரூபாயாகும்.

ஆதித்யா பிர்லா ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் வட்டி விகிதம் 9.00% ஆகும். மாத இஎம்ஐ தவணையானது 67,479 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best home loan rates from NBFCs

LIC housing finance, repco, hdfc and some other NBFCs offers home loans with best interest rates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X