உங்கள் வாழ்வை வளமாக்க சிறந்த இன்சூரன்ஸ் திட்டங்கள்.. 2020ல் சிறந்த LIC திட்டங்களும் இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சூரன்ஸ் திட்டங்கள் உங்களது முதலீட்டு பட்டியலில் இருக்க வேண்டிய, அவசியமான முதலீட்டு திட்டங்களில் ஒன்று.

இன்சூரன்ஸ் திட்டங்கள் நம் வாழ்க்கையின் எந்த ஒரு நெருக்கடியான நேரத்திலும் கைகொடுக்கும் ஒரு நல்ல நண்பன் எனலாம். ஏனெனில் நாம் இல்லையென்றாலும் கூட நம் குடும்பம் சந்தோஷமாக இருக்க வழிவகுக்கும்.

ஆனால் இந்தியாவினை பொறுத்தவரையில் இதனை ஒரு செலவாக நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது. ஏனெனில் உங்களது இறப்பிற்கு பிறகும் உங்களது குடும்பத்தினை உங்களைப் போல் யார் பார்த்துக் கொள்வார்கள்? உங்களது அன்பான குடும்பம் அடுத்து என்ன செய்யும்? ஆக இந்த கேள்விக்கான ஒரே பதில் இன்சூரன்ஸ் திட்டம் தான். அதிலும் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள எல்ஐசியின். 2020ல் முதலீடு செய்ய சில சிறந்த திட்டங்களைத் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.

 

பிஎஃப் வட்டி.. விரைவில் வரப்போகுது பணம்.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்..!

எல்ஐசியின் ஜீவன் அமர்

எல்ஐசியின் ஜீவன் அமர்

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் முதல் பாலிசி எல்ஐசி-யின் ஜீவன் அமர். இது ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும். இந்த திட்டத்தின் நுழைவு வயது 18 - 65 வயதாகும். இந்த திட்டத்தின் பாலிசி காலம் 10 - 40 ஆண்டுகளாகும். முதிர்வு வயது 80 ஆண்டுகளாகும். இந்த பாலிசியில் குறைந்தபட்ச உறுதி தொகை 25 லட்சம் ரூபாயாகும். இதில் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை.

எல்ஐசியின் டெக் டெர்ம் திட்டம்

எல்ஐசியின் டெக் டெர்ம் திட்டம்

எல்ஐசியின் டெக் டெர்ம் திட்டமும் ஒரு பியூர் டெர்ம் திட்டமாகும். இந்த திட்டத்திலும் நுழைவு வயது 18 - 65 வயதாகும். இந்த திட்டத்தின் பாலிசி காலம் 10 - 40 ஆண்டுகளாகும். முதிர்வு வயது 80 ஆண்டுகளாகும். இந்த பாலிசியில் குறைந்தபட்ச உறுதி தொகை 50 லட்ச ரூபாயாகும். இந்த பாலிசியிலும் அதிகபட்ச வரம்பு என்பது இல்லை.

எல்ஐசியின் சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டம்
 

எல்ஐசியின் சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டம்

குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு இன்சூரன்ஸ் திட்டம் இந்த எல்ஐசியின் சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டமாகும். இது ஒரு மணி பேக் பாலிசியாகும். இந்த திட்டத்தில் 0 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நாம் போட பாலிசியினை முடியும். இந்த பாசிலியின் முதிர்வுகாலம் குழந்தையின் நுழைவு வயதில் இருந்து 25 ஆண்டுகளாகும். குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் குறைபட்ச உறுதி தொகை என்பது 1 லட்சம் ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை.

எல்ஐசியின் நியூ ஜீவன் ஆனந்த் திட்டம்

எல்ஐசியின் நியூ ஜீவன் ஆனந்த் திட்டம்

எல்ஐசியின் நியூ ஜீவன் ஆனந்த் திட்டமானது ஒரு என்டோவ்மென்ட் பாலிசியாகும். இந்த திட்டத்தில் 18 - 50 வயது வரை இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் காலம் 15 - 35 ஆண்டுகளாகும். இந்த திட்டத்தில் முதிர்வு வயது 75 ஆண்டுகளாகும். இந்த நியூ ஜீவன் ஆனந்த் திட்டத்தில் குறைந்தபட்சம் உறுதி தொகை என்பது 1 லட்சம் ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை.

எல்ஐசியின் ஜீவன் உமாங்

எல்ஐசியின் ஜீவன் உமாங்

எல்ஐசியின் ஜீவன் உமாங் திட்டமானது ஒரு ஹோல் லைஃப் மற்றும் என்டோவ்மென்ட் திட்டமாகும். இந்த பாலிசியின் நுழைவு வயது 18 -50 வயதாகும். இதன் பாலிசி காலம் நுழைவு வயதில் இருந்து 100 ஆண்டுகளாகும். இந்த பாலிசியின் முதிர்வு வயது 100 வயதாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுதி தொகை என்பது 2 லட்ச ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best LIC insurance schemes in 2020, please check here

Year ender 2020.. Best LIC insurance schemes in 2020, please check here
Story first published: Sunday, December 13, 2020, 19:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X