டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன.. சிறந்த திட்டங்கள் இது தான்.. பலன் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சூரன்ஸ் என்பது நமக்குத் தேவையான நேரத்தில், நமக்கு பொருள் இழப்பு அல்லது வேறு வகையான இழப்புகள் நேரிடுகின்ற தருணத்தில், அந்த இழப்பை ஈடு செய்வதற்கு உதவும் ஒரு கருவி.

 

இந்தக் கருவி நமக்குப் பயன்பட வேண்டுமானால், முன்கூட்டியே நமக்கு ஏற்பட வாய்ப்புள்ள இழப்புகளை கணித்து, அதற்கேற்ற வகையிலான திட்டங்களில் நாம் முதலீடு செய்ய வேண்டி உள்ளது.

இன்றைய காலத்தில் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அடிக்கடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

எதற்காக டிராவல் இன்சூரன்ஸ்

எதற்காக டிராவல் இன்சூரன்ஸ்

இவ்வாறு அவர்கள் பயணம் செய்யும்போது, சில சமயங்களில் நாம் செல்ல வேண்டிய விமானம் அல்லது ரயில் ரத்தாகிவிடலாம். வேறு சில சந்தர்ப்பங்களில் விபத்து நிகழலாம். இல்லையேல், நமது உடைமைகள் திருட்டு போகவோ, தவறிப் போகவா நேரிடலாம். இது போன்ற தவிர்க்க முடியாத நேரங்களில், பயணம் செல்வோருக்கு ஏற்படுகின்ற இழப்பை ஈடுசெய்ய டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்கள் உதவுகின்றன.

டிராவல் இன்சூரன்ஸ் திட்டத்தினால் பயன்

டிராவல் இன்சூரன்ஸ் திட்டத்தினால் பயன்

இந்த டிராவல் இன்சூரன்ஸ் மூலம் மருத்துவ செலவு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை வழங்குகிறது. எந்தவொரு கடுமையான உடல் நலப் பிரச்சனையிலும் வெளிநாட்டு பயணத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். பயணத்தின் போது விபத்துக்கள் காரணமாக மரணம் அல்லது நிரந்தர குறைபாடுகள் ஏற்பட்டால், டிராவல் இன்சூரன்ஸ் மருத்துவ செலவுகளுக்கு ஈடு செய்கிறது. உங்களது சரிபார்க்கப்பட்ட பொருட்கள் கேரியரில் தவறாக இடம் பிடித்தால், டிராவல் இன்சூரன்ஸ் பொருட்களின் மொத்த செலவை உள்ளடக்கியது. உங்கள் பயணத்தின் போது ஏதேனும் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டால் அதற்கான பாதுகாப்பினை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் உங்களது வெளிநாட்டு பயணத்தின் போது ஏதேனும் காயம் ஏற்பட்டால், ஆம்புலன்ஸ் அல்லது வேறு எந்த மருத்துவ போக்குவரத்திற்கும் செலவுகளுக்கும் டிராவல் இன்சூரன்ஸ் மூலம் க்ளைம் செய்ய முடியும்.

பெஸ்ட் டிராவல் இன்சூரன்ஸ் எப்படி தேர்வு செய்வது?
 

பெஸ்ட் டிராவல் இன்சூரன்ஸ் எப்படி தேர்வு செய்வது?

உங்களது டிராவல் இன்சூரன்ஸ் முழு பயண கவரேஜினையும் வழங்குமாறு இருக்க வேண்டும். அதிகளவு க்ளைம் செய்யக்கூடிய ஒரு பாலிசியை தேர்வு செய்து கொள்ளலாம். அன்றாட செலவுகள் மற்றும் அறை வாடகைக்கு மிக உயர்ந்த துணை வரம்பை வழங்கும் கொள்கையில் முதலீடு செய்யுங்கள்.

சிறந்த திட்டங்கள் இதோ

சிறந்த திட்டங்கள் இதோ

Religare explore Travel insurance

HDFC ERGO travel insurance

Tata AIG travel insurance

Appollo munich Easy travel policy

Bajaj Allianz travel insurance என பல திட்டங்கள் மூலம் இன்சூரன்ஸ் செய்து உங்களது டிராவல் பயணத்தின்போது ஏற்படும் செலவுகளை க்ளைம் செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best travel insurance policy in India and their benefits

Travel insurance provides medical assistance and hospitalization costs which will be useful on a travel abroad in the case of any serious health issues.
Story first published: Tuesday, April 7, 2020, 21:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X