இனி கடன் வாங்க வங்கிக்கு செல்ல வேண்டாம்.. மிஸ்டுகால் கொடுத்தாலே போதும்.. எஸ்பிஐ-யின் சூப்பர் சலுகை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ (SBI) எக்ஸ்பிரஸ் கிரெடிட் பர்சனல் லோன் (SBI's Xpress Credit personal loan service) என்ற சேவையை தொடங்கியுள்ளது.

 

இந்த சேவையை பெற எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒரு மிஸ்டு கால் அல்லது எஸ் எம் எஸ் அனுப்பினால் கூட போதுமானது.
இதற்கு மிஸ்டு கால் அல்லது எஸ் எம்எஸ் போதும். வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் நம்பரிலிருந்து PERSONAL என்று டைப் செய்து 7208933145 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

எவ்வளவு வட்டி?

எவ்வளவு வட்டி?

இத்திட்டத்தின் கீழ் 9.60 சதவீத வட்டியில் உடனடிக் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் 25,000 ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரையில் கடன் கிடைக்கிறது. இந்த சேவையான சம்பள கணக்கிற்கும் கிடைக்கும். இதற்கான செயல்பாட்டுக் கட்டணமும் மிக மிகக் குறைவுதான் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

உத்தரவாதம் தேவையில்லை

உத்தரவாதம் தேவையில்லை

மிஸ்டு கால் மூலம் கடன் பெறுவதற்கு 7208933142 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இத்திட்டம் குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு 1800-11-2211 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பர்சனல் லோன் திட்டத்திற்கு எந்த செக்யூரிட்டியும், உத்தரவாதமும் தேவையில்லை.

ஓவர் டிராப்ட் கடன்
 

ஓவர் டிராப்ட் கடன்

வாடிக்கையாளர்கள் முதல் கடனில் இ எம் ஐ-களை சரியான நேரத்தில் செலுத்தியிருந்தால், இந்த சேவை 5 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை ஓவர் டிராப்ட் கடன் தொகையை வழங்குகிறது. ஒட்டுமொத்த கடன் இ எம் ஐ/ என் எம் ஐ விகிதம் 50% க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இந்த திட்டத்தின் மூலம் 20 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும். குறைந்த வட்டி விகிதங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்த செயலாக்க கட்டணங்கள், குறைந்த ஆவணங்கள். மறைக்கப்பட்ட செலவுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big opportunity! SBI personal loan is just a missed call or an SMS away

SBI updates.. Big opportunity! SBI personal loan is just a missed call or an SMS away
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X