மாத சம்பளக்காரர்களே.. இனி உங்கள் ஓய்வூதியம் குறையலாம்.. கவனமா இருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிக சிறந்த சேமிப்பு திட்டமாக, இன்றளவிலும் சம்பளதாரர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இது அவர்களின் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் இருந்து வருகிறது.

 

ஏனெனில் ஒரு ஊழியரின் வருங்கால நலன் கருதி, ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.

இந்த திட்டம் பலரையும் கவர முக்கிய காரணம் அவர்களுக்கு இந்த சேமிப்பு திட்டத்தில் வரிச்சலுகை உண்டு என்பதே.

வரி விதிக்கப்படும்

வரி விதிக்கப்படும்

ஆனால் பட்ஜெட் 2021 இந்த விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துள்ளது எனலாம். சொல்லப்போனால் ஒரு திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது. ஏனெனில் ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும்.

சிறந்த சேமிப்பு திட்டம்

சிறந்த சேமிப்பு திட்டம்

இதன் நோக்கம் அதிக வருமானம் உடையவர்களுக்கு வரி சலுகைகள் கிடைப்பதை கட்டுப்படுத்துவது என்றாலும், பலரும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் என்பதால் சேமிக்க நினைக்கின்றனர். அதோடு வரி சலுகையும் இருந்ததால் நல்ல முதலீட்டு திட்டமாகவும், சிறந்த சேமிப்பாகவும் பார்க்கப்பட்டது.

ஒய்வூதியம் குறையும்
 

ஒய்வூதியம் குறையும்

2020 நிதிச்சட்டம் சம்பள வரையறையை மாற்றியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது பிற்காலத்தில் ஓய்வூதியம் பெற நினைக்கும் ஊழியர்களுக்கும் பாதிப்பினையே ஏற்படுத்தும். ஏனெனில் வரி செலுத்த வேண்டியுள்ளதால், சேமிப்புகள் குறையும். இரண்டாவது அப்படியே சேமித்தாலும் வரி செலுத்த வேண்டியிருக்கும். எப்படி இருந்தாலும், ஓய்வூகாலத்தில் கிடைக்கும் தொகை இதனால் குறையும்.

ஊழியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்

ஊழியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்

ஆக ஓய்வூதிய தொகை அதிகரிக்க அதிகரிக்க, பிஎஃப் வருமானம் அதிகரிக்கும். இதனால் செலுத்த வேண்டிய வரி விகிதமும் அதிகரிக்கும். ஆக இதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்களது முதலீட்டு திட்டங்களை மாற்ற முற்படலாம். அதோடு ஒவ்வொரு சேமிப்பினையும் ஆராய்ந்து அதில் முதலீடு செய்வது நல்லது.

இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

யூலிப் திட்டத்திற்கும் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக செய்யப்படும் முதலீட்டிற்கு மூலதன ஆதாய வரி உண்டு. பங்குகள் கடன் மற்றும் பணச் சந்தையில் முதலீடு செய்யப்படும் இந்த திட்டத்தில் செலுத்தப்படும் பிரீமியம், 2.5 லட்சத்தினை தாண்டினால் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆக HNI வாடிக்கையாளர்கள், மற்ற வாடிக்கையாளர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2021: your retirement savings may hit

Budget 2021: your retirement savings may hit
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X