ரூ.5 லட்சத்திற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வேண்டுமா.. இதோ 20 பாலிசிகள்.. பிரீமியம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் என்பது சற்றே குறையத் தொடங்கியிருந்தாலும், தற்போது கரும்பூஞ்சை, டெல்டா, ஆல்பா, கப்பா வைரஸ் என மக்களை தொடர்ந்து தாக்கி வருகின்றது.

எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது அச்சம் தரும் விதமாக உள்ளது. சமீபத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைகாக, கோடி கணக்கில் செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும், மக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் அந்த குழந்தையின் தந்தை ஊடகங்களில் கேட்டுக் கொண்டார். அந்தளவுக்கு மருத்துவ செலவினங்களும் அதிகரித்து வருகின்றன.

இப்படி பல வகைகளில் மக்களை செலவுகள் துரத்திக் கொண்டே உள்ளன. ஆனால் எதிர்பாராத விதமாக வரும் செலவுகளை சமாளிக்க, சாமனிய மக்களுக்கு உதவுவது இன்சூரன்ஸ் மட்டுமே.

ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியம்

ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியம்

அதிலும் தற்போது மூன்றாம் கட்ட பரவல் வரப்போகிறது என்று பல எச்சரிக்கைகள் வந்து கொண்டுள்ளன. இதனால் மக்கள் தங்களை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ள நிச்சயம் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அவசியம் இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் மருத்துவ செலவுகள் என்பது ராக்கெட் வேகத்தில உயர்ந்து வருகின்றன. ஆக ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டம் என்பது உங்கள் குடும்பத்தின் நிதி சுமையினை குறைக்க உதவும்.

இன்சூரன்ஸ் அவசியம்

இன்சூரன்ஸ் அவசியம்

ஹெல்த் இன்சூரன் பாலிசியினை பொறுத்த வரையில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது அவசர காலக்கட்டத்தில் ஆபத்பாந்தவனாக இருக்கும். ஒரு சிலர் பணிபுரியும் வரை, நிறுவனங்கள் மூலம் இன்சூரன்ஸ் போட்டு வைப்பர். ஆனால் அதுவே வேலையை நின்றுவிட்டால் அதனை தொடர மாட்டார்கள்,

மிக அவசியமான செலவு

மிக அவசியமான செலவு


ஆக உங்களது முக்கிய செலவினங்களில் இன்சூரன்ஸ் என்பதை மிக அவசியமான ஒன்றாக கருதலாம். அப்படி வாங்கும்போது ஒரு முறைக்கு பலமுறை பார்த்து, அலசி பார்க்க வேண்டும்.
தொடக்கத்தில் இருந்தே உங்கள் சம்பளத்தில் இருந்து, உங்களுக்கு என்றே சிறிது தொகையை ஒதுக்கி விடலாம். இன்னும் சொல்லப்போனால் இதிலும் குரூப் பாலிசிகளை போட்டு வைக்கலாம்.

பாலிசியின் அளவு

பாலிசியின் அளவு

அப்படி பாலிசி எடுக்கும்போது எந்த பாலிசி எவ்வளவு தொகைக்கு க்ளைம் செய்ய முடியும். இந்த பாலிசியை பொறுத்த வரையில் வயதினை அடிப்படையாகக் கொண்டோ, வருமானத்திற்கு தகுந்தோ? எந்த அளவும் கிடையாது. மருத்துவ செலவுகள் எவ்வளவு செலவு ஆகும் என்ற கணிப்பு இருந்தால், அதற்கேற்ப பாலிசியை எடுக்கலாம்.

ஹாஸ்பிட்டல் கேஸ்

ஹாஸ்பிட்டல் கேஸ்

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு செலவுக்கு பணம் தேவை எனில், அதற்கேற்றவாறு ஆரம்பத்திலேயே திட்டமிட்டு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். இதே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது குறிப்பிட்ட தொகை தேவை எனில் அதற்காக ஹாஸ்பிட்டல் கேஸ் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.

நோய்க்கு தகுந்த பாலிசி

நோய்க்கு தகுந்த பாலிசி

இதே கேன்சர், இதய அறுவை என தீவிர சிகிச்சைகளுக்கான செலவினை குறைக்க க்ரிட்டிகல் இல்னஸ் இன்சூரன்ஸினை எடுத்து பயன் பெறலாம்.இதே நீண்டகால ஆரோக்கிய பராமரிப்புகாக லாங்க் டெர்ம் ஹெல்த் கேர் பாலிசியினை தேர்வு செய்யலாம்.

இதே திடீர் விபத்து, அதனால் வருமான இழப்பு ஏற்படும் போது நிதி உதவி பெற ஆக்ஸிடென்ட் பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம்.

இதே திடீர் விபத்து, அதனால் வருமான இழப்பு ஏற்படும் போது நிதி உதவி பெற ஆக்ஸிடென்ட் பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம்.

செலவை சமாளிக்கலாம்

செலவை சமாளிக்கலாம்

இப்படியாக பல பாலிசிகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொண்டு, உங்கள் திடீர் மருத்துவ செலவுகளை இதன் மூலம் க்ளைம் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 பாலிசிகள், அதன் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் எவ்வளவு என்பதை தான்.

என்னென்ன பாலிசிகள்

என்னென்ன பாலிசிகள்


United india - Rs.5,581
New india - mediclaim - Rs.6,044
SBI general - Rs.6,088
TATA AIG- medi care protect - Rs.6,347
Aditya Birla - Activ Assure Diamond - Rs.6,371
Universal sompo - individual - Essential - Rs.6,393
MaX Bupa- Health copanion - individual - Rs.6,542
Royal sundaram - individual supreme - Rs.6,558
Care health insurance - care basic - Rs.6,620
Future general - health total - Rs.6,738
Manipal Cigna- Pro Health protect - Rs.6,747
Star health = medi classic- individual - Rs.7,074
ICICI Lombard - ihealth - Rs.7,119
Reliance general - reliance health wise - Rs.7,348
Liberty general - individual health - Basic - Rs.7,448
HDFC ERGO - health suraksha - Rs.7,642
Cholamandalam MS - healthline - 8,031
IFFCO - Tokio - individual health protector - Rs.8,407
Bajaj alliancz - health guard - Rs.9,977

எவ்வளவு க்ளைம் செய்ய முடியும்.

எவ்வளவு க்ளைம் செய்ய முடியும்.


மேற்கண்ட இந்த பாலிசிகள் ஜூலை 13 அன்று நிலவரப்படி, 5 லட்சம் ரூபாய் க்ளைம் செய்யும் வகையில் உள்ள திட்டங்களாகும். இந்த பாலிசிகள் 30 வயதானவர்களை (திருமணமானவர்களுக்காக) அடிப்படையாக கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இது வயது, புகைப்பழக்கம் மற்றும் இன்னும் சில காரணிகளால் மாறுபடலாம். ஆக நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது மேற்கண்ட அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு பாலிசியினை எடுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Buying a Rs.5 lakh health policy? Check premium for 20 policies; check details

Insurance latest updates.. Buying a Rs.5 lakh health policy? Check premium for 20 policies; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X