ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா.. முழு விவரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரெடிட் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. கிரெடிட் கார்டினை பொறுத்த வரையில் அதனை சரியான பயன்படுத்திக் கொண்டவர்களை விட, அதனால் பெரும் தலைவலியை சந்தித்தித்தவர்களே அதிகம்.

ஆனால் இதனை சரியான நேரத்தில் பயன்படுத்தியவர்களுக்கு இது வரப்பிரச்சாதம் என்றே கூறலாம்.

50,000 ரூபாயை தொடும் தங்கம்.. இனி சாமானிய, நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான்..! 50,000 ரூபாயை தொடும் தங்கம்.. இனி சாமானிய, நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான்..!

இதற்கிடையில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் குறையுமா? அதனால் ஏற்படும் சாதகம் என்னென்ன? பாதகம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

கூடுதல் கிரெடிட் கார்டு

கூடுதல் கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாத மாதம் வரும் பில்லிங் தொகை என்பது மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். ஏனெனில் பலரும் சரியான நேரத்தில் இந்த தொகையினை செலுத்துவதில்லை. அதனால் விரைவில் இந்த கார்டுகளுக்கு விடை கொடுப்பவர்கள் பலர். எனினும் இதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் சிலர், கூடுதலாக மற்றொரு கார்டு பயன்படுத்தலாம் என்று நினைப்பார்கள்.

பிரச்சனைகள் என்ன?

பிரச்சனைகள் என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு பல பில்லிங் தேதிகள் இருக்கும். அதனை முழுவதாக ஞாபகம் வைத்திருப்பது என்பது மிக சவாலான விஷயமே. மேலும் எந்தெந்த தேதியில் எந்த கார்டுக்கான பில்லைக் கட்ட வேண்டும் என்பதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உரிய காலத்தில் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த நேரிடும்.

பற்பல சலுகைகள்

பற்பல சலுகைகள்

மேலும் கிரெடிட் கார்ட் கடன் லிமிட் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. பல கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களின் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்ய நேரிடும். ஏனென்றால் விழாக்காலங்களில் உடை வாங்குவது முதல் அனைத்துக்கும் பல்வேறு ஆஃபர்களையும், ரிவார்ட் பாயிண்டுகளையும் அள்ளி வழங்குவார்கள். ஆனால் அதனை நம்பி நாம் ஏமாந்துவிடக் கூடாது.

கடனை கட்ட கடன்

கடனை கட்ட கடன்

கூடுதல் சலுகைகள் கிடைப்பதாக நினைத்து, வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்துவிட்டு, பின்னர் கட்ட முடியாமல் தவிப்பர். பலர் மாதக் கடைசியில் வரும் பில் கட்டணங்களை செலுத்துவதற்கு பணம் இல்லாமல், மேலும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவார்கள். இன்னும் சிலர் இந்த கிரெடிட் கார்டு கடனை செலுத்த, மேலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

தேவையானபோது பயன்படாது?

தேவையானபோது பயன்படாது?

ஆக வரம்புக்கு மீறி செலவு செய்யும்போது, தேவையானவற்றை வாங்குவதற்கு பணம் இல்லாத நிலையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பொதுவாக சிலர் ஆஃபர் கிடைக்கிறது, பிடித்தமான பொருட்கள் என கார்டினை உரசி தள்ளிவிடுவர். ஆனால் பின்னர் அதனை கட்ட முடியாமல் தவிக்கும்போது, தேவையானவற்றை வாங்க முடியாமல் தவிக்கும்போது தான் கஷ்டப்படுவர்.

கிரெடிட் ஸ்கோர் குறையுமா?

கிரெடிட் ஸ்கோர் குறையுமா?

புதிய கிரெடிட் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது, கிரெடிட் கார்டு வழங்குபவர்களிடம், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் கடன் தொகைக்கான விவரங்களை எடுப்பார்கள். அப்போது, புதிய கார்டுக்கு ஏன் விண்ணப்பிக்கிறீர்கள்? ஏற்கனவே இவ்வளவு கடன் இருக்கிறதே அதை எப்படி அடைப்பீர்கள்? போன்ற கேள்விகள் மூலம் விசாரிப்பார்கள்.

கிரெடிட் ஸ்கோர் குறையலாம்

கிரெடிட் ஸ்கோர் குறையலாம்

உங்களின் வருமானம் எவ்வளவு, அதற்கான பட்ஜெட் என்ன? மாதம் எவ்வளவு செலவழிக்கிறீர்கள்? சரியாக கடனை செலுத்தி வருகிறீர்களா? என்பது போன்ற தகவல்களை முழுமையாக அறிந்த பின்னரே உங்களுக்கு புதிய கடன் அட்டையை வழங்கலாமா? வேண்டாமா என யோசிப்பார்கள். இதனால், உங்களின் கிரெடிட் ஸ்கோர் தானாகவே குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

உங்கள் லிமிட்டை தாண்டாதீர்கள்

உங்கள் லிமிட்டை தாண்டாதீர்கள்

உதாரணத்திற்கு உங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச வரம்பு 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். இந்த 1 லட்சம் லிமிட் முழுவதையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இரண்டு கிரெடிட் கார்டு

இரண்டு கிரெடிட் கார்டு

இதே நீங்கள் மற்றொரு கிரெடிட் கார்டினை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதுவும் 1 லட்சம் ரூபாய் உச்ச வரம்பு உள்ளதாக வைத்துக் கொள்வோம். அப்போது அந்த கார்டில் நீங்கள் 20% மட்டுமே செலவு செய்தால், உங்களது கிரெடிட் ஸ்கோரும் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் இரு கார்டு பயன்படுத்தும் போது, குறைந்த அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்களது கிரெடிட் ஸ்கோருக்கும் அதிகரிக்கும்.

இதனை தவிருங்கள்

இதனை தவிருங்கள்

எனினும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிருங்கள். கிரெடிட் உச்ச வரம்பை ஒரு போதும் தாண்டாதீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு என்பதை முடிந்த மட்டில் அத்தியாவசியம் இல்லாமல் பயன்படுத்தாதீர்கள் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can more than one credit card hurt cibil score? Check details here

Credit card updates.. Can more than one credit card hurt cibil score? Check details here
Story first published: Monday, May 31, 2021, 17:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X