ATM-மை தொட வேண்டாம்! ATM கார்ட் வேண்டாம்! ஆனால் காசு எடுக்கலாம்! எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக ATM இயந்திரம் வழியாக பணம் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்..? ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் ஸ்வைப் செய்து அல்லது இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை கொடுத்து, அதன் பின் ஆப்ஷன்களை தேர்வு செய்து, எவ்வளவு பணம் வேண்டுமோ அதை டைப் செய்து, அதன் பின் 4 இலக்க ஏடிஎம் பின் எண்ணை அழுத்தி, பணத்தை எடுப்போம்.

 

ஆனால் இனி ATM இயந்திரங்களைத் தொடாமலேயே, வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பணத்தை எடுக்கலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அது எப்படி சாத்தியமாகும்? யார் அப்படி செய்து இருக்கிறார்கள்? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

இந்த நிறுவனம் தான் செய்தது

இந்த நிறுவனம் தான் செய்தது

Empays Payment Systems India என்கிற கம்பெனி, ஐ எம் டி பேமெண்ட் சிஸ்டம் மற்றும் க்ளவுட் பேமெண்ட் சொல்யூஷன்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிறுவனம் மாஸ்டர் கார்ட் நிறுவனத்துடன் சேர்ந்து கார்ட் லெஸ் ATM சேவையை வழங்க இருக்கிறார்களாம்.

40000 ATM

40000 ATM

இந்த எம்பேஸ் பேமெண்ட் நிறுவனத்தின் ஐ எம் டி பேமெண்ட் சிஸ்டம், இந்தியாவில் சுமாராக 40,000 ATM இயந்திரங்களில் கார்ட் லெஸ் முறையில் பணத்தை எடுக்கும் நெட்வொர்க் வசதியை வழங்க இருக்கிறதாம். ATM இயந்திரத்தில் இருந்து ரொக்கத்தை எடுக்க, இந்த பேமெண்ட் சர்வீஸ் எஸ் எம் எஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்த இருக்கிறார்களாம்.

ஏடிஎம் கண்டுபிடித்தல்
 

ஏடிஎம் கண்டுபிடித்தல்

மாஸ்டர் கார்ட் வழங்க இருக்கும் இந்த கார்ட் லெஸ் ATM நெட்வொர்க் வழியாகவே, அருகில், எங்கு எல்லாம் கார்ட் லெஸ் ATM இயந்திரங்கள் இருக்கின்றன என கண்டு பிடித்துக் கொள்ளலாமாம். அதெல்லாம் சரி, எப்படி ATM இயந்திரத்தைத் தொடாமல் பணம் எடுப்பது.

படி விளக்கம்

படி விளக்கம்

1. வங்கியின் நெட் பேங்கிங் செயலியை திறந்து, கார்ட் லெஸ் ATM வசதி இருக்கும் இயந்திரத்தில் காட்டும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.
2. நீங்கள் எடுக்க வேண்டிய பணத்தை, உங்கள் வங்கியின் நெட் பேங்கிங் செயலியிலேயே உறுதி செய்யுங்கள்.
3. அவ்வளவு தான், ATM இயந்திரம் நீங்கள் குறிப்பிட்ட பணத்தைக் கொடுக்கும், வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வர வேண்டிய தான்.

நோ டச்

நோ டச்

ஆக ஏடிஎம் இயந்திரத்தில் கார்ட் போட வேண்டாம், ஏடிஎம் பின் நம்பர் போட வேண்டாம். எந்த வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும், ரசீது வேண்டுமா வேண்டாமா..? என எதற்கும் ஏடிஎம் இயந்திரத்தைத் தொட வேண்டாம். எல்லாவற்றையும் நம் நெட் பேங்கிங் செயலியிலேயே செய்து கொள்ளலாம்.

கொரோனா அவசியம்

கொரோனா அவசியம்

தற்போது இருக்கும் சூழலில், கார்ட் லெஸ் ஏடிஎம் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. மக்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பணத்தை கையாள வேண்டும், அதே நேரத்தில் நம்மை நாமே கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எனவே இதை ஒரு அவசரமாகக் கருதி கார்ட் லெஸ் ஏடிஎம் சேவைகளை கொண்டு வர இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மாஸ்டர் கார்ட் தரப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

cardless ATM to be launched by mastercard

contact free ATM to be launched by big giant master card. Empays Payment Systems India announced a partnership with the global payment giant mastercard to launch card less atm.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X