DCB வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் இலவச இன்சூரன்ஸ்.. எதற்காக தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, வட்டி விகிதத்தினை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பது கவலையளிக்கும் ஒன்றாக இருந்தாலும், மறுபுறம் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் சமீப மாதங்களாக பிக்சட் டெபாசிட்கள் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.

பல வங்கிகளும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தினை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

டிசிபி வங்கி டூ ஆதித்யா பிர்லா பேஷன் வரை.. இந்த 5 பங்குகளை வாங்கி போடுங்க! டிசிபி வங்கி டூ ஆதித்யா பிர்லா பேஷன் வரை.. இந்த 5 பங்குகளை வாங்கி போடுங்க!

 ரூ.5 லட்சம் வரையில் இன்சூரன்ஸ்

ரூ.5 லட்சம் வரையில் இன்சூரன்ஸ்

சமீப ஆண்டுகளாகவே இந்தியாவில் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நிதி நெருக்கடி, மோசடி என பல காரணிகளால் சிக்கலில் சிக்கி வருகின்றன. இதற்கிடையில் வாடிக்கையாளர்கள் செய்த டெபாசிட் தொகைகள் பெரும் பிரச்சனையில் முடிவடைகின்றன. இதன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டில் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகள் திவால் ஆனாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையால் முடங்கினாலோ, டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தினை திரும்ப பெற, 5 லட்சம் ரூபாய் வரையில் இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் என அறிவித்தார். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் கூட, இன்சூரன்ஸ் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையில் க்ளைம் செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது.

இலவச லைஃப் இன்சூரன்ஸ்

இலவச லைஃப் இன்சூரன்ஸ்

ஆனால் அதனையும் தாண்டி டிசிபி வங்கியானது வாடிக்கையாளர்களை கவரவும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பிற்காகவும், இலவசமாக 10 லட்சம் ரூபாய் வரையில் லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜ்ஜினையும் வழங்குகிறது.

டிசிபி வங்கி தனது டிசிபி சுரக்ஷா பிக்சட் டெபாசிட் (DCB Suraksha Fixed Deposit) என்ற திட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளது. இது 3 வருட பிக்சட் டெபாசிட் திட்டமாகும். இது சேமிப்பாளர்களுக்கு மிக சிறந்த பாதுகாப்பினை வழங்குகிறது.

 

இரண்டு முக்கிய அம்சங்கள்

இரண்டு முக்கிய அம்சங்கள்

டிசிபி சுரக்ஷா திட்டத்தில் ஸ்மார்ட் மற்றும் சுரக்ஷித் என இரண்டு தனித்துவமான அம்சங்கள் உள்ளன. ஒன்று மிகப்பெரிய வட்டி விகிதம் வருடத்திற்கு 7.10% ஆகும். இரண்டாவது இலவச லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜ்ஜினை 10 லட்சம் ரூபாய் வரையில் வழங்குகிறது. டெபாசிட் தொகையை 10 லட்சம் ரூபாய்க்கு மேலாக இருந்தாலும், இன்சூரன்ஸ் தொகை 10 லட்சம் ரூபாய் வரையில் தான் பெற முடியும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு பிரீமியம் எதுவும் செலுத்த தேவையில்லை. இதற்கு மெடிக்கல் டெஸ்ட் எதுவும் தேவையில்லை எனவும் கூறப்படுகிறது.

சுரக்ஷா திட்டம்

சுரக்ஷா திட்டம்

சுரக்ஷா திட்டம் இன்சூரன்ஸ் இல்லாமலேயே கவர்ச்சிகரமான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. 700 நாட்கள் அல்லது 3 வருட திட்டத்திற்கு, ஆண்டுக்கு வட்டி விகிதம் 7.10% ஆகும். இதே மூத்த குடி மக்களுக்கு வட்டி விகிதம் 7.60% ஆகும்.

டிசிபி என் ஆர் ஐ சுரக்ஷா, என் ஆர் ஐ-களுக்கும் நல்ல வருமானத்தினை கொடுக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்திலும் இலவச இன்சூரன்ஸ் திட்டம் கிடைக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DCB bank is offering Rs.10 lakh insurance coverage on FD

To attract fixed deposit customers, DCP Bank is offering investor protection and free life insurance coverage up to Rs 10 lakh.
Story first published: Thursday, October 13, 2022, 18:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X