பென்சன் வாங்குவோருக்கு சூப்பர் நியூஸ்... இனி பென்சன் வாங்குவது ரொம்பவே ஈசி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வூதியதாரர்கள் மின்னணு வாயிலாக டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் (Digital Life certificate) சமர்பிப்பதற்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏதுவாக மத்திய அரசானது ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

சரி எப்படி ஆன்லைன் மூலமாக ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது? வாருங்கள் பார்க்கலாம்.

லைஃப் சர்டிபிகேட் (Digital Life Certificate)
 

லைஃப் சர்டிபிகேட் (Digital Life Certificate)

ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களது லைஃப் சர்டிபிகேட் சமர்ப்பிப்பது அவசியமாகும். ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு, நவம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் இந்நிலையில், ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், லைஃப் சர்டிபிகேட்டை சமர்ப்பிப்பதற்கான கால வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

என்னெல்லாம் வேண்டும்?

என்னெல்லாம் வேண்டும்?

ஆக இனி மத்திய அரசின் அனைத்து ஓய்வூதியதாரர்களும் 2020 நவம்பர் 1ம் தேதி முதல் 2020 டிசம்பர் 31ம் தேதி வரையில் தங்களது ஆயுள் சான்றிதழைத் தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது. அதோடு அதனை டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்து கொள்ளலாம். இவ்வாறு டிஜிட்டல் முறையில் லைஃப் சர்டிபிகேட் பெறுவதற்கு விண்ணப்பதாரரிடம் ஆதார் எண், மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஜீவன் பிரமான் ஆப்

ஜீவன் பிரமான் ஆப்

சரி எப்படி டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்வது? ஜீவன் பிரமான் ஆப்பினை (Jeevan Pramaan) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் புதிய பதிவு (new registration) என்பதனை கிளிக் செய்து, ஆதார் எண், உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

எப்படி பதிவு செய்வது?
 

எப்படி பதிவு செய்வது?

பதிவு செய்த பின்னர், உங்களது பதிவு எண்ணுக்கு ஒடிபி வரும், அதனை பதிவிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும். சரி விண்ணப்பிப்பது எப்படி? ஜீவன் பிரமான் செயலியில் ஓடிபி எண் மூலம் லாக் இன் செய்ய வேண்டும். Generate Jeevan Pramaan என்பதைத் தேர்ந்தெடுத்து ஆதார் எண், மொபைல் எண் ஆகிய விவரங்களைப் பதிவிடவும். அதன் பின் generate OTP என்பதை கிளிக் செய்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்

என்னென்ன விவரங்கள் கொடுக்க வேண்டும்

PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் ஏஜென்சியின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டியிருக்கும். அதன் பின்னர் ஆதார் விவரங்களை வைத்து கை ரேகை ஸ்கேன் செய்தால், ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். லைஃப் சர்டிபிகேட் கிடைப்பது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்- ஆக வரும்.

லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்தே சமர்பிக்கலாம்

லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்தே சமர்பிக்கலாம்

ஆக ஓய்வூதியம் வாங்குவோர் தங்களது லைஃப் சர்டிபிகேட்டினை வீட்டில் இருந்த படியே சமர்ப்பிக்கலாம். போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் இந்த சேவை வழங்கப்படுகிறது. இதில் தபால் காரர்கள் வீடு தேடி வந்து லைஃப் சர்டிபிகேட்டினை வாங்கி கொள்வார்கள். ஆக ஓய்வூதியதாரர்கள் வங்கிக் கிளைகளில் நாள் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இனி இல்லை. இருந்த இடத்தில் இருந்த படியே லைஃப் சர்டிபிகேட்டினை சமர்ப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Digital Life certificate: huge relief for pensioners, please check here full details about jeevan pramaan patra

It is a huge relief for pensioners in context of submitting Life Certificate thorough online.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X