மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு பாஸ்புக் வழங்கப்படுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுக்க கூடிய சேமிப்பு என்பதை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட் என்பது பாதுகாப்பானது என்பது மட்டுமின்றி மற்ற முதலீட்டு திட்டங்களைவிட அதிக வருவாய் தரக் கூடியது என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மற்ற முதலீடுகளுக்கு வழங்கப்படுவது போல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு பாஸ்புக் வழங்கப்படுமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.

18 வயதுக்கு குறைவான மைனர் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய முடியுமா? 18 வயதுக்கு குறைவான மைனர் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய முடியுமா?

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தற்போது இந்திய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்ட்டில் கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

பாஸ்புக்

பாஸ்புக்

இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மற்ற முதலீட்டு போல பாஸ்புக் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு ஸ்டேட்மெண்ட் என்று கூறப்படும் கணக்கு அறிக்கை வழங்கப்படுகிறது.

ஸ்டேட்மெண்ட்

ஸ்டேட்மெண்ட்

ஒரு பாஸ்புக்கில் உள்ள முக்கிய நோக்கம் பணம் செலுத்தும் விவரங்கள், எடுக்கும் விவரங்கள், வட்டி விகிதம், வட்டி தொகை ஆகியவை இருக்கும். இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இந்த விவரங்கள் அனைத்தும் ஸ்டேட்மெண்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 விவரங்கள்

விவரங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் ஸ்டேட்மெண்டில் அவர்கள் முதலீடு செய்த தொகை, முதலீட்டை திரும்ப எடுத்த தொகை, வேறு திட்டங்களுக்கு மாற்றிய தொகை, டிவிடெண்ட் தொகை உள்பட அனைத்து விவரங்களும் இருக்கும். இதுவே ஒரு பாஸ்புக் போல முதலீட்டாளர்களுக்கு செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் ஸ்டேட்மெண்ட்

ஒவ்வொரு மாதமும் ஸ்டேட்மெண்ட்

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்த பிறகு இந்த ஸ்டேட்மெண்ட் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். அந்த ஸ்டேட்மெண்டில் முதலீட்டாளரின் பெயர், முகவரி, என்.ஏ.வி, அவருடைய முதலீட்டு தொகைக்கு ஒதுக்கப்பட்ட யூனிட்டுகள் ஆகியவை இருக்கும். ஒவ்வொரு மாதமும் புதிய முதலீடு செய்யப்படும் போது அந்த ஸ்டேட்மெண்ட்டில் அனைத்து தகவல்களும் சேர்க்கப்பட்டு முதலீட்டாளர்கள் அனுப்பப்படும்.

இமெயில்

இமெயில்

தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைத்து பரிமாற்றங்களும் டிஜிட்டலில் இருந்து வருவதால் பெரும்பாலும் இமெயில் அல்லது வாட்ஸ்அப் மூலமே இந்த ஸ்டேட்மெண்ட்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் இந்த ஸ்டேட்மெண்ட் களை முதலீட்டாளர் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

டூப்ளிகேட் ஸ்டேட்மெண்ட்

டூப்ளிகேட் ஸ்டேட்மெண்ட்

அதுமட்டுமின்றி எப்பொழுது வேண்டுமானலும் நமக்கு ஸ்டேட்மெண்ட் தேவை என்றாலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு டுப்ளிகேட் ஸ்டேட்மெண்ட் நகலையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஸ்டேட்மெண்ட் தான் ஒரு முதலீட்டாளர்களுக்கு பாஸ்புக் போல செயல்படுகிறது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mutual funds passbook
English summary

Do Mutual Funds issue a passbook?

Over the past few days we have been continuously seeing that mutual fund investment is a savings that can give investors huge returns. There is now awareness among people that mutual fund is not only safe but also can give more returns than other investment schemes.
Story first published: Saturday, October 29, 2022, 20:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X