மலிவு விலை வீட்டுக் கடனுக்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வருமான வரிச் சலுகை இருக்கு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரிப் படிவங்களைச் சமர்பிப்பதற்கான கால அவகாசம் குறைந்து கொண்டே வருகிறது. 30 நவம்பர் 2020 தான் 2019 - 20 நிதி ஆண்டுக்கான வருமான வரிப் படிவங்களைச் சமர்பிப்பதற்கான கடைசி தேதி என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

 

வருமான வரிப் படிவங்களை இதுவரை நிரப்பியவர்கள், இனி நிரப்ப இருப்பவர்கள் எல்லோரும் வீட்டுக் கடன் விவரங்களையும் வரிக் கழிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

வீட்டுக் கடனில் வழக்கமாக அசல் தொகையை, வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழும், வட்டியை வருமான வரிச் சட்டப் பிரிவு 24-ன் கீழும் கணக்கு காட்டி இருப்பீர்கள்.

லாபத்தில் 38% வீழ்ச்சி.. மோசமான நிலையில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்..!லாபத்தில் 38% வீழ்ச்சி.. மோசமான நிலையில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்..!

மலிவு விலை வீடுகள் (Affordable Housing)

மலிவு விலை வீடுகள் (Affordable Housing)

கடந்த 2019 - 20 நிதி ஆண்டில், 45 லட்சம் ரூபாய்க்குள்ளான வீடுகளை, வீட்டுக் கடன் மூலம் வாங்கி இருப்பவர்களுக்கு, மேலே சொன்ன வருமான வரிச் சட்டப் பிரிவு 80C மற்றும் 24-ன் கீழ் கிடைக்கும் சலுகைகள் போக கூடுதலாக சில சலுகைகளை வழங்குகிறது வருமான வரித் துறை.

வட்டியில் ரூ.1.5 லட்சம் கூடுதலாக வரிக் கழிவு

வட்டியில் ரூ.1.5 லட்சம் கூடுதலாக வரிக் கழிவு

80EEA பிரிவின் கீழ், மலிவு விலை வீடுகளை (Affordable Housing) வீட்டுக் கடன் மூலம் வாங்குபவர்கள், தாங்கள் செலுத்தும் வட்டித் தொகையில் 1.5 லட்சம் ரூபாய் கூடுதலாக வருமான வரிக் கழிவு பெறலாம். இது மலிவு விலை வீட்டுக் கடன்களுக்கு மட்டுமே பொருந்தும். கடனின் வட்டித் தொகையை மட்டுமே 80EEA பிரிவின் கீழ் காட்டி வரிச் சலுகை பெறலாம்.

நிபந்தனை உண்டு
 

நிபந்தனை உண்டு

இந்த 80EEA பிரிவின் கீழ் சலுகை பெற இருப்பவர், மலிவு விலை வீட்டை வாங்குவதற்கான வீட்டுக் கடன் வாங்கும் நேரத்தில், அவருக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது. எனவே, கடந்த 2019 - 20 நிதி ஆண்டில், சொந்த வீடு எதுவும் இல்லாமல், 45 லட்சம் ரூபாய்க்குள் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியவர்கள், இந்த 80EEA பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கான வரிக் கழிவுகளைப் பெற மறந்துவிடாதீர்கள்.

80EEB வரிச் சலுகைகள்

80EEB வரிச் சலுகைகள்

2019 - 20 நிதி ஆண்டில், எலெக்ட்ரிக் வாகனங்களை, வங்கிக் கடன் மூலம் வாங்கியவர்கள், தாங்கள் செலுத்தும் எலெக்ட்ரிக் வாகனக் கடன் வட்டியில், 1.5 லட்சம் ரூபாயை, 80EEB பிரிவின் கீழ் கணக்கு காட்டி, வருமான வரிக் கழிவு பெறலாம். எலெக்ட்ரிக் வாகனத்துக்கான எரிசக்தி, பேட்டரியில் இருந்து வர வேண்டும். அந்த எலெக்ட்ரிக் வாகனத்தில், எரிசக்தியை மிச்சப்படுத்தும் regenerative braking system இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know 80EEA affordable home loan tax deductions & 80EEB electric vehicle loan tax deduction

There are two income tax section namely 80EEA & 80EEB. We simply explained these section for the Financial Year 2019 - 20.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X